64-வது கிராமி விருது வழங்கும் விழா

 64-வது கிராமி விருது வழங்கும் விழா

இசை உலகின் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக் காவின் லாஸ் வேகாஸில் நடந்தது. இசை உலகில் மதிப்புமிகு உயரிய விருதுகளில் ஒன்று, கிராமி விருதுகள் (கிராமபோன் என்பதன் சுருக்கம் கிராமி).
சர்வதேச அளவில் இசைக்கலைஞர்கள், இசை யமைப்பாளர்கள் என கவனம் பெறும் கலைஞர் களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங் கப்பட்டு வருகின்றன. இந்த விருதை நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் வாங்கியுள்ளார். இந்த ஆண்டு விழாவில் அவர் கலந்து கொண் டுள்ளார்.
கடந்த ஆண்டில் 84 பிரிவுகளின் கீழ் இந்த விருது கள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் மேலும் சில பிரிவுகளில் கிராமி விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. இசை ஆல்பங் கள் உள்ளிட்டவையும் இந்த ஆண்டில் அதிகமாக கவனம் பெற்றுள்ளன.

விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக தனது மகன் அமீன் ரஹ்மானுடன் இந்த நிகழ்ச்சி யில் கலந்துகொண்டுள்ளார். மேலும் தனது மக னுடன் செல்பி எடுத்து அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஏஆர் ரஹ்மான் பகிர்ந் துள்ளார். அவர் வெளியிட்ட முதல் புகைப்படத் தில் தன்னுடைய மகனுடன் சிரித்தபடி காணப் பட்டார் இசைப்புயல். மேலும் கிராமிஸ் என்று அவர் கேப்ஷனும் வெளியிட்டிருந்தார். சிறப்பான எமோஜியையும் சேர்த்திருந்தார்

அடுத்தடுத்த செல்ஃபி அடுத்ததாக விழா நடை பெறும் இடத்தில் தனது நண்பர்களுடன் செல் பியை பதிவிட்டுள்ளார். தொடர்ந்து மூன்றாவது செல்பியை மீண்டும் மகனுடன் இணைந்து அவர் பகிர்ந்துள்ளார். முன்னதாக ‘ஸ்லம்டாக் மில்லி யனர்’ படத்திற்காக அவர் இரண்டு கிராமி விருது களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த வருட நிகழ்ச்சியை ட்ரவர் நோவா (Trevor Noah) தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியைத் தொடங்கும்போதே, “இது அவார்ட் வழங்கும் விழா என்பதை மறந்து விடுங்கள். இது இசை நிகழ்ச்சி. இசை நிகழ்ச்சிக்கு நடுவில் விருதுகள் கொடுப்போம். இசை, நடனம், பாடல்களை ரசிக் கவுள்ளோம்.மற்றவர்களின் பெயர்களைச் சொல் வதைத் தவிர்த்துவிடுங்கள்” என வில் ஸ்மித் – கிறிஸ் ராக் சம்பவத்தை பகடி செய்து ஆரம்பித் தார் ட்ரவர்.


கிராமி விழாவில் ஜான் லெஜண்டின் (John Legend) நிகழ்ச்சிக்கு முன்பு உக்ரேனிய அதிபர் ஜெலன் ஸ்கியின் காணொலி ஒளிப்பரப்பட்டது, “இசை க்கு எதிரானது மௌனம். நாங்கள் ரஷ்யாவை எதிர்கொண்டு வருகிறோம். அவர்களது குண்டு களால் இங்கு மௌனம் நிலவுகிறது. அந்த அமைதியை உங்கள் இசையால் நிரப்புங்கள்” எனப் பேசியுள்ளார்.
2k கிட்ஸின் பேவரைட் இசை குழுவினர் BTS-ன் நிகழ்ச்சி ஒன்றும் இடம்பெற்றது.
இந்த விழாவில், சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான கிராமி விருதை, ‘எ கலர் புல் வோர்ல்டு’ ஆல்பத்திற்காக இந்திய-அமெரிக் கப் பாடகி பால்குனி ஷா பெற்றார்.
சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பம் பிரி வில் 2 முறை கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒரே பெண்மணி, பால்குனி ஷா ஆவார்.
இந்நிலையில் கிராமி விருது வென்ற இந்திய-அமெரிக்கப் பாடகி பால்குனி ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “கிராமி விழாவில் சிறந்த குழந்தை களுக்கான இசை ஆல்பத்திற்கான விருதை வென்ற பால்குனி ஷாவிற்கு வாழ்த்துகள். எதிர் கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக் கள். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பரிசு வென்றவர்கள்

  1. சிறந்த இசை பதிவு (Record of the Year) – ‘Leave The Door Open’ ஆல்பத்துக்காக Silk Sonic
  2. சிறந்த ஆல்பம் (Album of the Year) – ‘We Are’ ஆல்பத்துக்காக Jon Batiste மற்றும் குழுவினர்
  3. சிறந்த பாடல் (Song Of The Year) – பாடல் எழுதியவருக்கான இந்த விருது ‘Leave The Door Open’ ஆல்பத்துக்காக Brandon Anderson, Christopher Brody Brown, Dernst Emile II & Bruno Mars
  4. சிறந்த புதுமுக கலைஞர் (Best New Artist) – புதிதாக அறிமுகமாகும் கலைஞருக்கான விருது சென்ஷேனல் பாடகி Olivia Rodrigo
  5. சிறந்த பாப் சோலோ (Best Pop Solo Performance) – ‘drivers license’ ஆல்பத்துக்காக Olivia Rodrigo
  6. சிறந்த குழு (Best Pop Duo/Group Performance) – ‘Kiss Me More’ ஆல்பத்துக்காக Doja Cat மற்றும் SZA
  7. சிறந்த பாரம்பரிய பாப் குரல் (Best Traditional Pop Vocal Album) -Love For Sale ஆல்பத்துக்காக Tony Bennett மற்றும் Lady Gaga
  8. சிறந்த பாப் குரல் (Best Pop Vocal Album) -Sour ஆல்பத்துக்காக Olivia Rodrigo
  9. சிறந்த மியூசிக்கல் திரைப்படம் (Best Music Film) – Summer Of Soul படத்திற்கு
  10. சிறந்த உலக இசை ஆல்பம் (Best Global Music Album) – Mother Nature ஆல்பத்துக்காக Angelique Kidjo
  11. சிறந்த ராப் பாடல் (Best Rap Song) – Jail ஆல்பத்துக்கு
  12. Best Jazz Vocal Album – Songwrights Apothecary Lab ஆல்பத்துக்காக பாடகி Esperanza Spalding

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...