க்ளாப் திரை விமர்சனம்
ஆதி நாயகனாகவும் ஆகான்ஷா சிங் நாயகி யாகவும் நடித்த இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் விளை யாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் வெளியான இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான பிரித்வி ஆதித்யா இயக்கியிருக்கிறார். விளையாட்டை மையப்படுத்தி அதன் பின்னணியில் கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரித்வி ஆதித்யா.
எதிர்பாராதவிதமாக ஏற்படும் சாலை விபத்தின் மூலம் தனது காலையும் தந்தையையும் இழக் கிறார் நாயகன்.
இதன் காரணமாக தேசிய தடகள போட்டியில் பங்கேற்க முடியாமல் மன உளைச்சலில் தவிக் கிறார்.
நாயகியின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொண்டாலும் நிம்மதியின்றி வாழ்க்கையை கழிக்கிறார் நாயகன்.
இதனிடையே ஆதரவின்றி சாதிக்கத் துடிக்கும் ஒரு பெண்ணைப் பற்றி அறியும் நாயகன் தன் னால் சாதிக்க முடியாததை அந்தப் பெண் மூலம் சாதிக்க வேண்டும் என விரும்புகிறார். பல தடை களைக் கடந்து நாயகன் அந்தப் பெண்ணைத் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் சாதிக்க வைத்தாரா? இல்லையா? என்பதே இந்த படத்தின் மீதி கதை.
நிறைகள்
தனது ஒரு காலினை இழந்து பரிதவிக்கும் காட்சி களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கதை யின் ஓட்டத்திற்கு வலு சேர்த்திருக்கிறார் நாய கன் ஆதி.
நாயகிக்கு அதிகமான காட்சிகள் இல்லையென் றாலும் நடிக்க கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றே கூறலாம்.
ஓட்டப்பந்தய வீராங்கனையாக வரும் கிரிஷா க்ரூப் தனக்குக் கொடுக்கப்பட்ட அப்பாவி கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தை குறை சொல்லமுடியாத அளவிற்கு நன்றாகவே நடித் திருந்தார்.
நாயகனின் தந்தையாக வரும் பிரகாஷ்ராஜ் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்.
வில்லனான நாசர் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்தில் சிறப் பாகப் பொருந்தியுள்ளார். மைம் கோபி, முனிஷ் காந்த் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே கதை ஓட்டத்திற்கு மட்டுமே உதவி யுள்ளனர்.
வழக்கமாக பல படங்களில் நாம் பார்த்த அதே கதையாக இருந்தாலும் சலிப்பில்லாத வகையில் திரைக்கதை அமைத்தது சிறிது ஆறுதல் அளித் தது.
இந்தப் படத்தின் இன்னொரு பலம் இசைஞானி இளையராஜாவின் இசை. அது மட்டுமின்றி தனது பின்னணி இசையின் மூலம் படத்தின் கதைக் களத்தில் நம்மைப் பயணிக்கவும் வைத்திருக் கிறார்.
குறைகள்
கனா (2018), இறுதிச்சுற்று (2016), எதிர்நீச்சல் (2013) ஆகிய படங்களில் வந்த காட்சிகளை மீண்டும் பார்ப்பதைப் போன்றதொரு உணர்வு பல காட்சி களில் ஏற்பட்டது.
ஆரம்பம் முதல் இறுதி வரை படம் பார்ப்பவர்கள் எளிதில் யூகிக்கக்கூடிய அளவிலேயே கதை யம்சம் மற்றும் காட்சியமைப்பு அமைந்திருக் கிறது.
மொத்தத்தில் ‘கிளாப்’ ஒரு முறை கண்டு ரசித்து க்ளாப் அடிக்கும் வகையிலேயே உள்ளது.