சில ஆண்களுக்கு இடுப்புப் பகுதி, பெரிதாக இருப்பதற்குக் காரணம் என்ன?

 சில ஆண்களுக்கு இடுப்புப் பகுதி, பெரிதாக இருப்பதற்குக் காரணம் என்ன?

சில பெண்களுக்கு உடம்பைவிட இடுப்புப் பகுதி மட்டும் மிகவும் பெரிதாய் இருக்கும். பெண்களுக்கு அப்படியிருப்பதை ஒன்றும் செய்யலாகாது. அவர் கள் இயக்குநீர் (ஹார்மோன்), க்ரோமோசோம் (chromosome) ஏற்படுவதால் அப்படித் தான் செயல்படும். இடுப்பு, புட்டம் பெருத்திருப்பது பெண் வடிவ மைப்பு! அதை மாற்ற முடியாது. ஆனால் சில ஆண்களுக்கு அப்படி வருவ துதான் சோகம்!

ஆண்களுக்கு இப்படி வருவது பிரச்சினையே. இதை ஆங்கிலத்தில் Hip dysphoria என்று சொல்கிறார்கள். இது க்ரோமோசோம்கள் (chromosomes) மாற்றங் களினால் வரும். ஆம் கூடுதலாக பெண் க்ரோமோஸங்கள் இருந்துவிட்டால் வரும். திருநங்கைகளை கவனியுங்கள்.

அல்லவெனில், கூடுதல் கொழுப்பு சேர்ந்துவிட்டால், அதைத் தாங்குவதற்கு ஏற்றாற்போல எலும்புகள் மாறிவிடும். வயிறு, இடுப்பு, புட்டம் இந்த இடத் தில் கூடுதல் பளுவினை தாங்குவதற்காக எலும்பு விரிந்துவிடும்.

மற்றொன்று கூன் போட்டு உட்கார்வது. கூன் போட்டு உட்கார்வதனால் முதுகுத்தண்டு வளையும். அது வளைவதனால் நம் மேல் உடம்பின் அதிக பளுவும் தண்டு எங்கு வளைகிறதோ அங்கு இறங்கும். கூன் போட்டு உட் கார்ந்து பாருங்கள். அந்த வளையும் இடம் இடுப்பு எலும்புதான்! எனவே அதற்கேற்றாற்போல் அது விரிகிறது.

இன்னொன்று, தவறாக நிற்பது. நிற்கும்போதும் நேராகவே நிற்கவேண்டும். ஆனால் இன்னும் கவனிக்க வேண்டியது வேறு! புட்ட எலும்புகள். அதிக நேரம் ஏதாவது ஓர் புட்டத்தின் மேல் சாய்ந்து நிற்பது. ஒன்றின்மேல் வெகு நேரம் சாய பிறகு மற்றொன்றின் மேல் சாய்வோம் ஆக தானாகவே இரு பக்கமும் அகலமாகிவிடும்.

கால்களுக்குச் சரியான பயிற்சியில்லாதது! கால்கள், முக்கியமாக தொடை கள் அதைவிட முக்கியமாக புட்ட எலும்புகளைக் குறி வைத்து பயில வேண்டும்- ஓடுதல், நடத்தல், குதித்தல் என ஏதாவது! அந்த இடங்கள் நன்றாக மடங்கி விரிந்து செயல்படப் பயில வேண்டும். ஆக அவ்விடங்கள் எளிதாகவும் வலிமையாகவும் ஆகும். உம்மால் வெகுநேரம் நேராக நிற்க முடியும். அவ் விடங்களில் பயிற்சி இல்லாமல் அதை அப்படியே விட்டு விட்டதனால் அவை வலுவிழந்தும் பளுகூடியும் பிரச்சினை கூட்டுகிறது.

இதைச் சரி செய்வது நடவாது! அவை எலும்புகள்! அகலாமாகிவிட்டால் அவ்வளவே! இருப்பினும் கீழுடம்புக்கு நன்றாகப் பயிற்சிக் கொடுத்துக் கொண் டிருக்கவேண்டும். இடுப்பு எலும்பு விரிந்தாலே புட்டம் பெரிதாகி விடும் ஒல்லியாகயிருந்தாலும்! கஷ்டம் கஷ்டம்! ஆக பயின்று, அவை களை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதற்கிணையாய், நாம் மேல் உடம்பை விரிவாக்கலாம். தொங்குதல், புல்-அப்ஸ், புஷ்-அப்ஸ் என எவற்றையாவது கற்று, செய்து! வயிற்றுப்பகுதி மார்ப்பகுதி கைகள், கம்பர் சொல்வது போல் மலை போன்ற தோள்கள் என மேல் உடம்பை விரிவுப்படுத்தி சமன் செய்யலாம்.

ஆம், மற்றொன்று! ஆடைகள் அதற்கேற்றாற்போல் போடுவது நன்று! இறுக்கமாகப் போட்டால் சிக்கல். ஆக சிறிது லூஸாக ஆடைகள் போடுங் கள்.

ஆண் வடிவமைப்பு என்றதும் முக்கோண வடிவம் தோன்றுகிறது. இது இப்படியே பார்த்துப் பழகிவிட்டோம். ஆனால் மேல் சொன்னதும் நிறைய பேருக்கு இருக்கிறதல்லவா‌. வினோதமாகப் பார்க்காமல் இருப்போம்! முன்பே உடற்பயிற்சி செய்திருந்தால் எனக்கிப்படி ஆகிருக்காது!

உடற்பயிற்சி எல்லோரும் நிச்சயமாகச் செய்ய வேண்டியது. என்ன! அவர வர் தேவைக்கேற்றபடி மாறும். ஒரு எளிதான உடற்பயிற்சியை வழக்கமாக செய்து வருவது நன்று. உடற்பயிற்சியைப் பலனை எதிர்பார்த்து செய்தல் வேண்டாம். சும்மா செய்யுங்களேன் நல்லதுதானே!

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...