இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி 28)

சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள்

இங்கிலாந்தை சேர்ந்த தி ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி சென்னை எர்ரபாலு செட்டி (ஜார்ஜ் டவுன்) தெருவில் 1881ஆம் ஆண்டு ஒரு தொலைபேசி நிலையத்தை துவக்கியது. அப்போது அதன் வாடிக்கையாளர்கள் 93 பேர் மட்டுமே. இவர்கள் அனைவரும் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியை சேர்ந்த பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களாக இருந்த ஆங்கிலேயர்கள்தான். அவ்வாறு உருவான தொலைபேசி நிலையத்தின் மூலம் இதே நாள்தான் முதலாவது தொலைபேசி அழைப்பு கொடுக்கப்பட்டது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த சென்னை மாகாண கவர்னருக்கும், பிராட்வேயிலிருந்த Beehive Foundry என்ற ஏற்றுமதி கம்பெனியின் முதலாளிக்கும் அந்த முதலாவது இணைப்பு கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டுதான் அதாவது 1883ம் ஆண்டு இந்தியாவின் தந்தி மற்றும் தொலைபேசி சேவைகளும் அஞ்சல் சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.

கருக்கலைப்பை முதன்முதலாக சட்டபூர்வமாக்கியது

ஐஸ்லாந்து கருக்கலைப்பு என்பது நீண்ட வரலாற்றை உடையது. முற்காலத்தில் பலவகையான முறைகள் மூலம் கருக்கலைப்புச் செய்து வந்தனர். கருக்கலைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தல், கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தல், உடற்காயங்களை உண்டாக்குதல், மற்றும் பல மரபு சார்ந்த முறைகள் என்பன இவற்றுள் அடங்கும். தற்கால மருத்துவத்தில், மருந்துகள் கொடுப்பதினாலும், அறுவைச் சிகிச்சை மூலமும் கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன. கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களும், பண்பாட்டு நோக்குகளும் உலகம் முழுவதிலும் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. கருக்கலைப்புக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையிலான விவாதங்கள் உலகம் முழுதும் நடைபெறுகின்றன. கருக்கலைப்புக்கு எதிரானவர்கள் கருவோ, முளையமோ, முதிர்கருவோ மனித உயிருக்குச் சமமானது என்றும், அதனை அழிப்பது கொலைக்குச் சமமானது என்றும் வாதிடுகின்றனர். கருவை வளரவிடுவதும், அழிப்பதும் அதனைச் சுமக்கும் பெண்ணின் உரிமை என்கின்றனர் கருக்கலைப்பு ஆதரவாளர்கள். தற்காலத்தில் வளர்ந்த நாடுகளில், பொதுவாக ஒவ்வொரு நாட்டினதும் சட்ட நடைமுறைக்கு உட்பட்டு, மருத்துவத்தில் பாதுகாப்பான முறைகளைக் கையாண்டே கருக்கலைப்பு செய்யப்படுகின்றது. ஆனாலும், உலக அளவில் ஆண்டுக்கு சுமார்80,000 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் இறக்கின்றனர். உலக அளவில், ஆண்டு ஒன்றுக்கு நிகழும் சுமார் 5.4 கோடி கருக்கலைப்புகளில், கிட்டத்தட்ட அரைவாசி பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களாகவே இருக்கின்றன. மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருத்தடை பற்றிய அறிவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்ததன் விளைவாக, அண்மைய ஆண்டுகளில் கருக்கலைப்பு நிகழ்வானது ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அறியப்படுகின்றது. கர்ப்பிணிப் பெண்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவசியம் கருக்கலைப்பு செய்ய வேண்டிய நிலையை எண்ணி ஐஸ்லாந்து நாட்டில்தான் முதன்முதலாக கருக்கலைப்பை இதே நாளில் சட்டப்பூர்வமாக்கியது.

சமயச் சுதந்தரத்திற்கான முதல் ஐரோப்பியச் சட்டமான ‘வார்சா கன்ஃபெடரேஷன்’ போலந்தில் நிறைவேற்றப்பட்ட நாளின்று

சமயம் தொடர்பான சுதந்தரம் என்பது, பிற மதங்களின் இருப்பை ஏற்றுக்கொள்ளும் சமயச் சுதந்தரம், தனிமனிதர்களின் வழிபாட்டில் தலையிடாத வழிபாட்டுச் சுதந்தரம் என்று இரண்டு வகையில் குறிப்பிடப்படுகிறது. வணிகத்துக்காக வரும் பிறநாட்டவரின் சமய நம்பிக்கைகளில் தலையிடாத நடைமுறை மிகப் பண்டைய காலத்திலேயே இருந்திருக்கிறது. கி.மு.550இல் உருவாகக்கப்பட்ட, முதல் பாரசசீகப் பேரரசு என்று குறிப்பிடப்படும் அகாமனீயப் பேரரசு சமயச் சுதந்தரத்தைக் கொள்கையாகவே கடைப்பிடித்திருக்கிறது.

கி.மு.3ஆம் நூற்றாண்டுக்கால இந்தியாவின் மவுரியப் பேரரசில் அசோகர் முழுமையான சமயச் சுதந்தரத்தை அளித்திருந்தார். யூதம் உள்ளிட்ட பெரும்;பாலான சமயங்களைச் சகித்துக்கொண்ட ரோமானியர்கள், கிறித்தவத்தை மட்டும் ஏற்கவில்லை. சமயச் சுதந்தரத்துக்காக கி.பி.311இல் இயற்றப்பட்ட மிலன் உத்தரவு ரோமில் கிறித்தவத்துக்கு இடமளிக்க, 380இல் இயற்றப்பட்ட தெஸ்ஸலோனிக்கா உத்தரவு கிறத்தவத்தைத் தவிர்த்து, பிற மதங்களனைத்தையும் தடைசெய்தது! இஸ்லாம் உருவானபோதே, பிற சமயங்களின் சுதந்தரத்தை உறுதிப்படுத்துவதை, 622இல் நபிகள் உருவாக்கிய மதினா சாசனத்திலேயே விதியாகக் குறிப்பிட்டுவிட்டார். இதன்படி, பாதுகாக்கப்பட்டவர் என்ற பொருளுடைய ‘திம்மி’ என்ற முறைப்படி, பிற சமயத்தினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. பிற சமயங்களைச் சேர்ந்த வயது வந்த ஆண்களிடம் ஜிஸ்யா என்ற வரி வசூலிக்கப்பட்டாலும், பொதுப்பணிகளுக்காக இஸ்லாமிய ஆண்களிடம் மசூதிகளிலேயே வசூலிக்கப்பட்டுவிடும் ஸக்கத் வரிக்கு மாற்றாகவே அது வசூலிக்கப்பட்டது. இதனிடையே கத்தோலிக்க சமயத் தலைமையின் பிடியிலேயே அரசுகள் இருந்ததால், இடைக்கால ஐரோப்பிய நாடுகளில், பிற சமயங்களைப் பின்பற்றுவதைத் தேசவிரோதமாகவே கருதிய கடுமையான கட்டுப்பாடுகள் நிலவின. கிறித்தவத்திலேயே சீர்ததிருத்த(ப்ராட்டஸ்ட்டணட்) திருச்சபையைப் பின்பற்றியவர்கள் உயிருடன் எரிக்கப்பட்ட நிகழ்வுகூட இக்காலக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. இச்சூழலில் மிகஅதிக சமயச் சகிப்புணர்வுகொண்ட சமயமாக இந்து சமயம் குறிப்பிடப்படுகிறது. ஏனென்றால், சமயம் சாராத பண்பாடுகளின் அடிப்படையில் உருவானது இந்தியச் சமூகம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. அதனால்தான், நான்கு நூற்றாண்டுகளுக்கும் அதிகமாக பிற சமயத்தவர்களால் ஆளப்பட்டாலும், ஆளுபவர்களின் சமயத்தைத் தழுவியவர்களுக்கு உதவிகள் கிடைத்தாலும், இன்றும் இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் இந்துக்களாகவே உள்ளனர். சமயம் என்பது தனிப்பட்ட மனிதனின் அடிப்படை உரிமை என்பது ஐக்கிய நாடுகள் அவையாலேயே ஏற்கப்பட்டுவிட்ட இக்காலத்தில், இந்தியா அதற்கு எதிர்த்திசையில் பயணிக்க முற்பட்டால், அது இந்து சமயத்திற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் எதிர்த்திசையிலான பயணமாகவே அமையும்.

செரண்டிப்பிட்டி என்ற ஆங்கிலச் சொல் உருவான நாளின்று.

எதிர்பாராமல் நல்ல பொருள் அல்லது (வேதி)வினை உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்படுவதைக் குறிப்பிட, எதிர்பாராத நன்மை என்ற பொருளில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. எதிர்பாராமல் கண்டுபிடிக்கப்பட்ட, ஆனால் நன்மை தரக்கூடியதான பென்சில்லின் மருந்து, வெல்க்ரோ ஒட்டும் பட்டை, மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்டவை ‘செரண்டிப்பிட்டஸ்’ கண்டுபிடிப்புகள் என்று வருணிக்கப்படுகின்றன. அமெரிக்காவின் 3எம் நிறுவன ஆய்வாளர் ஸ்பென்சர் சில்வர், மிக உறுதியான பசை ஒன்றை உருவாக்கும் ஆய்வில், பலவீனமான, மீண்டும் ஒட்டக்கூடிய பசையை உருவாக்கினார். அவருடன் பணியாற்றிய ஒருவர் அதை, நூல்களில் அடையாளமாக(புக்மார்க்) பயன்படுத்த, நாம் இன்று பயன்படுத்தும் போஸ்ட்-இட்-நோட் என்ற ஒட்டவும், எடுக்கவும் கூடிய குறிப்புச் சீட்டு உருவாகி, அதற்கு 3எம் காப்புரிமையும் பெற்றது. ஃப்ளிக்கரில் பகிரப்பட்ட ஒரு படத்திலிருந்து, ஒரு புதிய பூச்சியினம் கண்டுபிடிக்கப்பட்டதும் இத்தகைய செரண்டிப்பிட்டஸ் கண்டுபிடிப்பாகக் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலேய எழுத்தாளர் ஹொரேஸ் வால்ப்போல், தன் நண்பரான ஹொரேஸ் மான் என்பவருக்கு இந்நாளில் எழுதிய கடிதத்தில் இச்சொல்லை உருவாக்கி, குறிப்பிட்டிருந்தார். இத்தாலிய ஓவியரும், பல்துறை விற்பன்னருமான ஜியார்ஜியோ வாசரி வரைந்த, இத்தாலிய அரச குடும்பத்தைச் சேர்ந்த பியான்கா கேப்பல்லோ என்ற பெண்ணின் காணாமல் போன ஓவியத்தை, எதிர்பாராமல் கண்டுபிடித்த செய்தியைக் குறிப்பிட இச்சொல்லை அவர் பயன்படுத்தியிருந்தார். அத்துடன், ‘தி த்ரீ ப்ரின்சஸ் ஆஃப் செரண்டிப்’ என்ற பாரசீகக் கதையிலிருந்து இச்சொல்லை உருவாக்கியதாகவும் அவர் விளக்கியிருந்தார். அக்கதையில், அந்த மூன்று இளவரசர்களும் தேடாத, முயற்சிக்காத புதிய நல்ல விஷயங்களைக் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள் என்று குறிப்பிட்டு, அதையொட்டி செரண்டிப்பிட்டி என்று பயன்படுத்தியிருந்தார். பண்டைய தூரக் கிழக்கில் செரண்டிப்போ என்றொரு நாடு இருந்ததாகவும், அதன் இளவரசர்கள் அவர்கள் என்றும் அக்கதை கூறினாலும், பாரசீக மொழியின் செவ்வியல் காலமான கி.பி.10-12 நூற்றாண்டுகளில், இலங்கைதான் அம்மொழியில் செரண்டிப் என்று அழைக்கப்பட்டுள்ளது. பண்டைய இலங்கையின் பகுதிகள் நெடுங்காலம் தமிழ் அரசர்களின் ஆட்சியிலிருந்ததால், சேர அரசர்களின் தீவு என்ற பொருளில் தமிழில் சேரந்தீவு என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. சேரந்தீப் என்று பிற மொழிக்காரர்களால் உச்சரிக்கப்பட்ட அதையே செரண்டிப் என்று பாரசீக வணிகர்கள் பயன்படுத்தியதிலிருந்தே, இன்றைய ஆங்கிலச் சொல்லான செரண்டிப்பிட்டி உருவாகியிருக்கிறது.

தரவு தனியுரிமை தினம்

தரவு தனியுரிமைக்கான தேவை டிஜிட்டல் யுகத்திற்கு புதியது அல்லது தனித்துவமானது அல்ல. எங்கள் தனிப்பட்ட தகவல்கள் பல தசாப்தங்களாக ஆபத்தில் உள்ளன. பல தசாப்தங்களாக தனிப்பட்ட தரவு சேகரிக்கப்பட்டு, கையாளப்பட்டு, பகிரப்பட்டு அல்லது விற்கப்பட்டு, பின்னர் வங்கி நிறுவனங்கள், தயாரிப்பு உற்பத்தியாளர்கள், அரசியல் கட்சிகள், இலாப நோக்கமற்ற நிறுவனங்கள், விளம்பர முகவர்கள், வாக்குச் சாவடி குழுக்கள், விமான நிறுவனங்கள், மளிகைக் கடைகள், கடன் ஏஜென்சிகள் மற்றும் பலவற்றால் லாபத்திற்காக மேலும் கையாளப்படுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் சட்டப்பூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் தனிப்பட்ட தரவைச் சேகரிப்பதை எளிதாக்கியுள்ளன. உலகில் 4.99 பில்லியன் மக்கள் செயலில் உள்ள இணையப் பயனர்களுடன், கணக்கிட முடியாத அளவு பாதுகாப்பற்ற தரவுகள் திருடப்படுவதற்கு காத்திருக்கின்றன.

தினசரி செய்ய வேண்டியவை பட்டியலில் தரவு தனியுரிமை அரிதாகவே முதலிடத்தில் உள்ளது. இன்று காலை உங்கள் கணினி, மடிக்கணினி அல்லது மொபைல் ஃபோனில் உங்கள் மின்னஞ்சலைப் பார்க்கவும், செய்திகளைப் பிடிக்கவும், பங்கு விலைகளைச் சரிபார்க்கவும் மற்றும் வீடு மற்றும் வணிகத்தை நிர்வகிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மற்ற எல்லா வழிகளிலும் நீங்கள் உள்நுழைந்தபோது அது உங்கள் மனதில் இருக்காது. விவகாரங்கள். கண்ணுக்குத் தெரியாத ஆனால் துருவியறியும் கண்களிலிருந்து நமது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதில் நம்மில் பெரும்பாலோர் மனநிறைவைக் கொண்டிருக்கிறோம். உண்மையில், தரவு பாதுகாப்பு மற்றும் தரவு தனியுரிமை ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை பலர் புரிந்து கொள்ளவில்லை, இதுவே நம்மில் பலர் தரவு தனியுரிமையைப் பற்றி மந்தமாக இருப்பதற்கான காரணமாக இருக்கலாம்.

லாலா லஜபதி ராய் பிறந்த தினம்

இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னோடியும் பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படுவருமான லஜபதி ராய் பிறந்த தினம் இன்று (ஜனவரி 28., 1865). காந்தியின் வருகைக்கு முன்பு இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்களில் முக்கியமான மூன்று தலைவர்கள் லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் மற்றும் விபின் சந்திர பால். இம்மூவருக்கும் இணையான முக்கியத்துவம் இருந்ததைக் குறிக்கும் வகையில் அவர்கள் லால்-பால்-பால் என்றே குறிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவரான லாலா லஜபதி ராய் 1865 ஜனவரி 28 அன்று இன்றைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தார்.

சட்டம் பயின்றவரான லஜபதி ராய் வழக்கறிஞராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். இள வயதிலேயே இந்து மத வாழ்க்கைமுறை மீது பெரும் நாட்டமும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடும் கொண்டிருந்தார். சுவாமி தயானந்த சரஸ்வதியின் மதச் சீர்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு ஆரிய சமாஜத்தில் உறுப்பினரானார். பிறகு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். பஞ்சாபில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக பிரிட்டிஷ் அரசு அவரை பர்மாவுக்கு நாடு கடத்தியது. அரசுக்கு எதிராகச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லாததால் தாய்நாடு திரும்ப அனுமதித்தது. 1920-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். 1928 அக்டோபர் 30 அன்று சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வருகை தந்தபோது எதிர்த்து அமைதி வழியில் போராட்டங்களை முன்னெடுத்தார். எனினும் பிரிட்டிஷ் அரசு கடுமையாகத் தாக்கியதை அடுத்து, சில தினங்களிலேயே உயிரிழந்தார்.

ஜெனரல் கே. எம். கரியப்பா பர்த் டே டு டே

இந்திய கிரிக்கெட்டிற்கு சச்சின் டெண்டுல்கர் என்றால், இந்திய இராணுவத்திற்கு கொடந்தேரா மாடப்பா கரியப்பா என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தியர்களும், வெளிநாட்டு பிரஜைகளும் வணங்கப்படும் மனிதனாக திகழ்ந்தவர் கே.எம்.கரியப்பா கர்நாடகத்தில் உள்ள மடிகேரியில் 1899ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த கே.எம்.கரியப்பா, முதலாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் பணியாற்றினார். 1947ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போரின்போது இந்திய படைக்கு தலைமை தாங்கியவர். சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் கே.எம்.கரியப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!