வரலாற்றில் இன்று (ஜனவரி 28)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சனவரி 28 (January 28) கிரிகோரியன் ஆண்டின் 28 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 337 (நெட்டாண்டுகளில் 338) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

814 – முதலாம் புனித உரோமைப் பேரரசர் சார்லமேன் நுரையீரல் உறையழற்சி நோயால் இறந்தார்.

1077 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியின் திருச்சபைலிருந்தான வெளியேற்றத் தீர்மானம் இத்தாலியின் கனோசாவில் திருத்தந்தை ஏழாம் கிரகோரியின் முன்னால் அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டபின் நீக்கப்பட்டது.

1393 – பல நடனக் கலைஞர்களின் உடைகள் தீப்பிடித்த நிலையில் பிரான்சிய மன்னர் ஆறாம் சார்லசு மயிரிழையில் உயிர் தப்பினார்.

1547 – எட்டாம் என்றியின் இறப்பை அடுத்து, அவரது 9 வயது மகன் ஆறாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1573 – போலந்தில் சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

1624 – கரிபியனில் முதலாவது பிரித்தானியக் குடியேற்ற நாடான செயிண்ட் கிட்சு சர் தொமஸ் வார்னர் என்பவரால் அமைக்கப்பட்டது.

1671 – பழைய பனாமா நகரம் தீக்கிரையானது.

1679 – சென்னை கோட்டைப் பகுதியில் சிறு நிலநடுக்கம் உணரப்பட்டது.

1724 – உருசிய அறிவியல் கழகம் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் முதலாம் பேதுரு மன்னரால் ஆரம்பிக்கப்பட்டது.

1754 – சேரந்தீவம் என்ற சொல்லை முதல் தடவையாக சேர் ஒராசு வால்போல் பயன்படுத்தினார்.

1846 – இந்தியாவில் அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி சிமித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றன.

1855 – பனாமா கால்வாய் வழியே தொடருந்து ஒன்று அத்திலாந்திக்குப் பெருங்கடலில் இருந்து பசிபிக்குப் பெருங்கடல் வரை முதல் தடவையாகச் சென்றது.

1871 – பாரிசு மீதான முற்றுகை புருசியாவின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.

1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

1909 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் குவாண்டானமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகின.

1918 – பின்லாந்தின் தலைநகர் எல்சிங்கியைப் புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.

1932 – சப்பானியப் படையினர் ஷங்காய் நகரைத் தாக்கினர்.

1933 – பாக்கித்தான் என்ற பெயரை சௌதுரி ரகுமாத் அலி கான் பரிந்துரைத்தார். இந்திய முசுலிம்கள் இதனை ஏற்றுக் கொண்டு பாக்கித்தான் இயக்கத்தை ஆரம்பித்து விடுதலைக்கான கோரிக்கையை முன்னெடுத்தனர்.

1935 – ஐசுலாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் மேற்கத்திய நாடானது.

1945 – இரண்டாம் உலகப் போர்: புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பர்மா வீதி ஊடாக சீனக் குடியரசுக்கு பொருட்கள் செல்ல ஆரம்பித்தன.

1958 – லெகோ நிறுவனம் தமது லெகோ கட்டைகளுக்கு காப்புரிமை பெற்றது.

1964 – பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வான்படை வானூர்தி ஒன்று கிழக்கு செருமனியின் எர்பூர்ட் நகர் மீது பறந்த போது, சோவியத் மிக்-19 ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அதில் பயணம் செய்த மூவரும் கொல்லப்பட்டனர்.

1984 – வெப்ப மண்டலச் சூறாவளி டொமொய்னா தெற்கு மொசாம்பிக்கைத் தாக்கியதில், 214 பேர் உயிரிழந்தனர்.

1986 – சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.

1987 – கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர்.

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

பிறப்புகள்

1600 – ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (இ. 1669)

1611 – யோகான்னசு எவெலியசு, போலந்து வானியலாளர், அரசியல்வாதி (இ. 1687)

1786 – நத்தானியேல் வாலிக், தென்மார்க்கு மருத்துவர், தாவரவியலாளர் (இ. 1854)

1832 – தி. முத்துச்சாமி ஐயர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது இந்திய நீதிபதி (இ. 1895)

1853 – ஒசே மார்த்தி, கியூபா ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1895)

1865 – லாலா லஜபதி ராய், இந்திய எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 1928)

1899 – கரியப்பா, இந்தியத் தரைப்படையின் படைத்தலைவர் (இ. 1993)

1912 – ஜாக்சன் பாலக், அமெரிக்க ஓவியர் (இ. 1956)

1925 – இராஜா இராமண்ணா, இந்திய இயற்பியலாளர், அரசியல்வாதி (இ. 2004)

1931 – பேபி சரோஜா, 1930களின் குழந்தை நடிகை (இ. 2019)

1938 – தோமசு லின்டால், நோபல் பரிசு பெற்ற சுவீடன்-ஆங்கிலேய உயிரியலாளர்

1940 – கார்லொசு சிலிம், மெக்சிக்கோ தொழிலதிபர்

1945 – ஜான் பெர்க்கின்ஸ், அமெரிக்க எழுத்தாளர்

1950 – நைலா கபீர், வங்காளதேச-ஆங்கிலேயப் பொருளாதார அறிஞர்

1955 – நிக்கொலா சார்கோசி, பிரான்சின் 23வது அரசுத்தலைவர்

1976 – மாளவிகா அவினாஷ், தென்னிந்திய நடிகை

1981 – எலியா வுட், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்

1986 – சுருதி ஹாசன், தென்னிந்திய நடிகை, பாடகி

1992 – மியா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

814 – சார்லமேன், உரோமைப் பேரரசர் (பி. 742)

1547 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (பி. 1491)

1687 – யோகான்னசு எவெலியசு, போலந்து வானியலாளர், அரசியல்வாதி (பி. 1611)

1851 – இரண்டாம் பாஜி ராவ், மராத்தியப் பேரரசர் (பி. 1775)

1939 – டபிள்யூ. பி. யீட்சு, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (பி. 1865)

1993 – எலன் சாயர் கோகு, கனடிய வானியலாளர் (பி. 1905)

1996 – ஜோசப் பிராட்ஸ்கி, நோபல் பரிசு பெற்ற உருசிய-அமெரிக்கக் கவிஞர் (பி. 1940)

1996 – தேவ காந்த பருவா, இந்திய அரசியல்வாதி (பி. 1914)

2002 – ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென், சுவீடன் எழுத்தாளர் (பி. 1907)

2008 – செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1941)

2018 – தர்மசேன பத்திராஜா, இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குநர், கல்வியாளர் (பி. 1943)

2021 – டொமினிக் ஜீவா, ஈழத்து எழுத்தாளர், இதழாசிரியர் (பி. 1927)

சிறப்பு நாள்

*****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!