வளர்ப்பும் வாய்ப்பதும்… | R. இளங்கோவன்

“டாக்டர்…எங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும்?”

டாக்டர் …. வந்தவங்களைப் பார்த்து “சார்…உங்க மனைவியின் கர்ப்பத்தை டாக்டர் ஆராய்ந்து சொல்லக்கூடாது னு சட்டமே இருக்கே தெரியாதா?” எனக் கூறினார்

“அதுக்கில்லை டாக்டர், மகன் பிறந்தான்னா, கடைசி வரை எங்களை காப்பாற்ற மாட்டான், அவனுக்கு கட்டி வைக்கிற பொண்டாட்டி அவனை மாத்திடுவா. அதே மகள் னா, எங்களை கடைசி வரை வச்சி காப்பாத்துவா, அதனால் மகள் பிறக்க வைக்க முடியுமா டாக்டர்.” வெள்ளந்தியான வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சியானார் டாக்டர்.

“நீங்க சொல்றதெல்லாம் சரி, உங்களுக்கு மகளே பிறந்தாலும், அவள் கடைசி வரை உங்களை பார்த்துகிட்டாலும், அவளும் இன்னொரு இடத்தில் வாழப்போறவள் தானே?. அங்கே, உங்க மருமகன் மனசை மாற்றி, அவளோட மாமனார் மாமியாரை கவனிக்காமல் விட்டால் பரவாயில்லையா?” என்று டாக்டர் சொன்னதும்…..

பளார்….பளார்….பளார்….. என மனதை தைத்தன டாக்டரின் வார்த்தைகள்.

கப்சிப்ன அடங்கின தம்பதியை அனுப்பி வைத்த டாக்டர், தன் கண்களை துடைத்தார். அவரோட மகன், மனைவியின் பேச்சை கேட்டு ஆடிட்டு இருப்பதும், டாக்டரை கவனிக்காமல், மனைவியின் வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டான். தான் பெற்ற மகள், கணவனின் பேச்சைக் கேட்டு, அங்கேயே செட்டில் ஆகி அவளோட மாமனார், மாமியாரை கவனித்து வருகிறாள். இங்கு வருவதும் இல்லை.

பாவம்…டாக்டர் நல்ல பிள்ளைகளாக வளர்த்ததால், கட்டிக்கொண்டவரின் பேச்சை தட்ட முடியாமல், டாக்டரை தனித்து விட்டனர். சுயநலமற்ற வளர்ப்பும், சோதிக்கத் தான் செய்கிறது சிலரை……

நீதி : பெண்ணாக பிறந்தால், மகளாகவோ, மருமகளாகவோ கடைசி வரை சேவையை செய்தே ஆகனும் என்பது விதி. சிலர் விதிவிலக்கா அமையலாம்.

R. இளங்கோவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!