உலக செஸ் சாம்பியன் கிரான்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

 உலக செஸ் சாம்பியன் கிரான்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

விசுவநாதன் ஆனந்த் கிரான்ட் மாஸ்டர் பட்டத்தை பல வருடங்கள் பெற்று அவரை யாரும் முறியடிக்க முடியாத நிலையிருந்தது. பிறகு அவரைவிட வயதில் சிறியவரான ரசிய வீரர் மெக்ன்ஸ் கார்ல்சன் விசுவநாதன் ஆனந்தை வீழ்த்தினார். அவரை தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் பிரக்ஞானந்தா வீழ்த்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.

சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா. இவர் சென்னையின் பாடியில் பிறந்தவர். இவரும் இவருடைய அக்கா வைஷாலியும் சிறு வயதில் அதிகமாக தொலைக்காட்சியை பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்களுடைய தந்தை ரமேஷ்பாபு மற்றும் தாய் நாகலட்சுமி எப்படி இவர்களின் கவனத்தை மாற்றுவது என்று நினைத்துள்ளனர். அந்த சமயத்தில் தீவிர செஸ் ரசிகரான ரமேஷ் பாபு தன்னுடைய மகள் வைஷாலியை முதலில் செஸ் பயிற்சிக்கு சேர்த்துள்ளார்.

அக்கா வைஷாலி செஸ் பயிற்சி வகுப்பிற்கு செல்வதை பார்த்த பிரக்ஞானந்தா விற்கு சிறுவயது முதல் செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்காவிடம் இருந்து நான்கு வயது முதல் செஸ் விளையாடக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

5 வயது முதல் செஸ் போட்டிகளில் பங்கேற்று வந்தார். தன்னுடைய 7 வயதில் இவர் 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாமியன்ஷிப் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் 10 வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இளம் வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்று அசத்தினார்.

இதைத் தொடர்ரந்து 2012 வருடம் 10 மாதம் 13 நாட்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று அசத்தினார். இதன்பின்னர் 2019 ஆண்டு நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். அத்துடன் 2019 டிசம்பர் மாதம் செஸ் தரவரிசையில் 2600 புள்ளிகளை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் பிரக்ஞானந்தா படைத்திருந்தார்.

ஒருகட்டத்தில் இவர் மற்றும் இவருடைய அக்கா வைஷாலியின் செஸ் பயிற்சிக்கு பெற்றோர்களால் பணம் செலுத்த முடியாத சூழல் உருவாகியது. அப் போது தொழிலதிபர் ஒருவர் அவர்களுக்கு உதவி செய்தார்.

அதேபோல் பிரக்ஞானந்தாவின் பள்ளி அவருக்கான பள்ளி கட்டணம் மற்றும் வருகை பதிவு ஆகியவற்றை தளர்த்தியது. இதனால் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிரக்ஞானந்தா தொடர்ந்து செஸ் விளையாட்டில் கவனம் செலத்தி வருகிறார். இவர் எப்போதும் அதிகம் பேசுவதில்லை. அவருக்கு பதிலாக அவருடைய ஆட்டம் தான் அதிகம் பேசும்.

தி.நகரிலுள்ள பிரபல செஸ் பயிற்சியாளார் ஆர்.பி.ரமேஷின் மாணவர்களில் இவரும் ஒருவர். தற்போது தன்னுடைய 16வது வயதில் உலக சாம்பியன் மெக்ன்ஸ் கார்ல்சனை அசுர வளர்ச்சி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...