நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- தி.மு.க. வெற்றி, அ.தி.மு.க. படுதோல்வி… காரணம் என்ன?

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- தி.மு.க. வெற்றி, அ.தி.மு.க. படுதோல்வி… காரணம் என்ன?

21 மாநகராட்சிகள் 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகளிலும் தி.மு.க. வெற்றி

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேருராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தப் பட்டது. இதில் மாநகராட்சிகளில் 1,373 வார்டுகளுக்கும் நகராட்சிகளில் 3,842 வார்டுகளுக்கும் பேரூராட்சிகளில் 7,605 வார்டுகளுக்கும் என மொத்தம் 12,820 வார்டுகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க இந்தத் தேர்தல் நடத்தப் பட்டது. மொத்தம் 57,746 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. அதாவது மாநகராட்சிகளில் 52.22 சதவிகிதமும் நகராட்சிகளில் 68.22 சதவிகித மும்,  பேரூராட்சிகளில் 74,68 சதவிகிதமும் ஓட்டுகள் பதிவாகின. 39.30 சதவிகித மக்கள் ஓட்டுப்போடவில்லை.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க. 176 இடத்தில் 153 இடங்களில் வெற்றி. அதன் விவரத்தை முழுமையாகப் பார்ப்போம்

அ.தி.மு.க. 200 இடங்களில் நின்று 15 இடங்களையே கைப்பற்றியது.

காங்கிரஸ் 16 இடங்களில் நின்று 13 இடங்களில் வென்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 இடங்களில் நின்று 4 இடங்களைக் கைப்பற்றியது.

மார்க்சிஸ்ட கம்யூனிஸ்டு கட்சி 5 இடங்களில் நின்று 4 இடங்களில் வென்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இங்களில் நின்று 1 இடத்தில் மட்டுமே வென்றது. ம.தி.மு.க. 2 இடங்களில் நின்று 2 இடங்களையும் கைப்பற்றியது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு இடத்தில் நின்று வென்றது.

தேசிய கட்சியான பா.ஜ.க. 200 இடங்களில் நின்று 1 இடத்தில் மட்டுமே வென்றது.

அ.ம.மு.க. 190 இடங்களில் நின்று 1 இடத்தில் வென்றது.

பா.ம.க., 198 இடங்களிலும், நாம் தமிழர் 199 இடங்களில், மக்கள் நீதி மய்யம்  177 இடங்களிலும், தே.மு.தி.க. 141 இடங்களிலும் நின்று படுதோல்வியைச் சந்தித்தனர்.

சுயேட்சை வேட்பாளர்கள் 5 பேர் வெற்றி பெற்றனர்.

அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்திலும் தி.மு.க. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றது. அங்குள்ள பெரும்பாலான இடங்களையும் திமுக கைப்பற்றி அசத்தியது. மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில் தி.மு.க. 132 இடங்களையும் அ.தி.மு.க. 3 இடங்களையும்  கைப்பற்றியது. மற்றவை 3 இடங்களையும் கைப்பற்றியது. இதேபோல் 489 பேரூராட்சிகளில் தி.மு.க. 435 இடங்களையும் அ.தி.மு.க. 15 இடங்களையும் பா.ஜ.க. 5 இடங்களையும், மற்றவை 25 இடங்களையும் பிடித்தது.

நகர்ப்புறத் தேர்தலில் குறைந்த அளவிலான ஓட்டுகளே வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் என்றாலும் தி.மு.க. – அ.தி.மு.க. இடையே பெரிய போட்டி ஏற்பட வில்லை. தி.மு.க. எளிதாக வெற்றி பெற்றது.

இதற்கு காரணம் அ.தி.மு.க.வில் கூட்டணி பலமில்லை. ஓட்டு சதவிகிதம் மிகக் குறைவான அளவில் பதிவானதே காரணம் என்றும் கூறப் படுகிறது. இன்னொரு விஷயம், தேர்தல் கமிஷன் மக்களுக்கு ஓட்டு போடுவதன் விழிப்புணர்வு செய்யவில்லை என்றும், விடுமுறை நாளில் தேர்தல் வைத்தது ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.  

எந்தக் காரணங்களைச் சொன்னாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் மார்ச் 2ஆம் தேதி பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மார்ச் 4ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள் வாக்களிப் பார்கள்.

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் என்று பெருமிதம் கொண்ட முதல்வர் ஸ்டாலின் “எந்தப் புகாரும் இல்லாதவாறு நடந்துகொள்ள வேண்டும். யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன்” என்று மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்ற தி.மு.க.வினருக்கு எச்சரிக்கை விடுத் துள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சமூக சமத்துவ படைத் தலைவரான முன் னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி  சென்னை அண்ணாநகர் 99வது வார்டில் தோல்வி அடைந்தார்.

திரைப்பட பாடகர் கானா பாலா திரு.வி.க. நகர் 72வது வார்டில் நின்று தோல்வியுற்றார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...