ராமானுஜர் கொள்கையும் ராமானுஜருக்குச் சிலையும்

 ராமானுஜர் கொள்கையும் ராமானுஜருக்குச் சிலையும்

1000 வருடங்களுக்கு முன்பு பிறந்து, வாழ்ந்து, மறைந்தவர் ராமானுஜர். 11-ஆம் நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்த துறவி ராமானுஜர். தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜர், உலகமெங்கும் சமத்துவம் பரவ, தீண்டாமை ஒழியப் பாடுபட்டார். வைஷ்ணவ குருமார்களில் முக்கிய மானவர் ராமானுஜர். தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜர் காஞ்சி புரத்தில் படித்து வளர்ந்தவர். ஸ்ரீரங்கத்தில் மறைந்தவர்.  

ராமானுஜர் தனது வீட்டிலேயே தங்கியிருந்து தன் தந்தையிடமே வேதங் களை எல்லாம் கற்று வந்தார். 16-ஆவது வயதில் தனது தந்தையை இழந்தார். 17ஆவது வயதில் தஞ்சம்மாளைத் திருமணம் செய்தார். பின்பு யாதவப் பிரகாசர் என்ப வரிடம் பாடங்களைக் கற்றார். பாடம் தொடர்பான பல்வேறு விஷயங்களில், ராமானுஜருக்கும் யாதவப்பிரகாசருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். இதனால் குருவுக்குக் கோபம் வந்து, ராமானுஜரைக் கொன்றுவிட வும் திட்டமிட்டார்.

அதன் பிறகு திருக்கச்சி நம்பியிடம் மாணவராகச் சேர்ந்துவிட்டார். இதை யடுத்து ராமானுஜரின் பெயரும் புகழும் எல்லா இடங்களிலும் பரவியது. பிற் காலத்தில் தன் சொல்வன்மையாலும், இறைவனின் கருணையாலும் ஆயிரக்கணக் கானோரை வைணவ சம்பிரதாயத்தின் பால் ஈர்த்தார் ராமானுஜர்.

ஜாதி, பேதமற்ற சமுதாயத்தைப் படைக்க அவர் வழிகாட்டினார். தாழ்த்தப் பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியைத் தனது குருவாக ஏற்றுக் கொண்ட வர். உறங்காவில்லி தாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவரை தனது சீடராக ஏற்றுக்கொண்டவர்.

ராமானுஜருக்கு ஒரு குறையும் இருந்தது. அதுதான் நாராயண மந்திரத்தின் பொருள் அறிவது. இதற்காக ஆளவந்தாரின் சீடரான திருக்கோஷ்டியூர் நம்பி யிடம் சரண் புகுந்தார்.  பலமுறை இழுத்தடித்த திருக்கோஷ்டியூரார் ராமானுஜர் மீது இரக்கப்பட்டு திருமந்திரத்திற்கு விளக்கம் சொன்னார். அத்துடன் இதை வேறு யாருக்கும் வெளியிடக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தார். குருவின் கருத் தைப் புறக்கணித்த ராமானுஜர் நேராக திருக் கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி திருமந்திரத்தின் பொருளை இந்த உலகமே அறியும்படி உரக்கக் கத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த நம்பி ராமானுஜரிடம் விளக்கம் கேட்டார். இந்த மந்திரத்தை அறிந்து கொள்வதால் ஆயிரக்கணக்கானோருக்கு வைகுண்டம் செல்ல வாய்ப்பு கிடைக்குமானால் நான் நரகம் செல்வதில் கவலையில்லை என்றார்.

இராமானுஜர் பாரததேசம் முழுவதும் யாத்திரை செய்து வைணவத்தின் பெரு மையை எங்கும் பறைசாற்றினார். எதிர்வாதங்கள் புரிந்தவர்களை வென்று வைணவ மடங்களை நிறுவினார். சில இடங்களில், ஆன்மிகத்தில் பிடிப்பு இருந்தும் இல்லறத்திலேயே இருக்க விரும்பியவர்களையும் தன் மடங்களின் ஆன்மிகத் தலைவர்களாக்கினார். திருவரங்கத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதிமுறைகளை வழிப்படுத்தினார். ஒவ்வொரு வரிடமும், முக்கியமாகத் தாழ்த்தப்பட்ட இன மக்களிடையேயும், இரக்கம், கருணை, பரிவு முதலிய நற்குணங்களைச் சொரிந்ததோடு ‘திருக்குலத்தார்’ என்றும் அவர்களை அழைக்கலானார். ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களை வடமொழி வேதங்களுக்கு இணையாகக் கருதும்படி செய்தார். தமிழ் பிரபந் தங்களை ஓதவும் வைணவச் சின்னங்களைத் தரிக்கவும் எந்தச் சாதி யினரோ, ஆணோ, பெண்ணோ எல்லோருக்கும் வைணவத்தில் இடம் இருக்கச் செய்தார்.

இராமானுஜர் அவருடைய சொற்பொழிவுகளைத் தமிழில் செய்தாலும், தமிழில் அவர் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் ஸ்ரீபாஷ்யம் தவிர அவருடைய இதர நூல்களில் ஆழ்வார்களின் பக்திச்சுவை பாதிப்பு நன்றாகவே தெரிகிறது.

இராமானுஜர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல; பெரிய நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இவ்வேற் பாடுகளில் அவருக்கு எதிர்ப்புகளும் முளைத்து அவரைக் கொல்லும் முயற்சி கள்கூட நடந்தன. தற்கால ஸ்ரீவைணவ நடைமுறைகளை உருவாக்கி சடங்கு களோ, சம்பிரதாயங்களோ, பழக்க வழக்கங்களோ எல்லாவற்றிற்கும் கருத்துச் செறிவுடன் உயிர் கொடுத்தவரும் அவரே. இவையெல்லாம் செவ்வனே செயல் பட முடிந்ததற்கு முழுக் காரணம் அவர் ஒருவராகவே திருவரங்கம் கோயில் நிர்வாகம், ஸ்ரீவைணவ மட நிர்வாகம் ஆகிய இரட்டைப் பொறுப்பை யும் ஏற்று நடத்தியதுதான். திருவரங்கம் கோயில் உடைமைகளைச் சிறப்புற மீட்டெடுத்து நிர்வாகம் செய்ததால் திருவரங்கநாதன் இராமானுஜரை ‘உடையவர்’ என அழைத்தார்.

ராமானுஜருக்கு 216 அடி உயர சிலை ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான ஷம்ஷாபாத்தில் 45 ஏக்கர் வளாகத்துக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது.

‘சமத்துவத்துக்கான சிலை’ (Statue of Equality) என வர்ணிக்கப்படும் இதனை பிரதமர் மோடி இந்த மாதம் பிப்ரவரி 5ஆம் தேதி திறந்து வைத்தார். இந்தச் சிலை தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம், துத்தநாகம் ஆகிய ஐந்து உலோகங் களைக்கொண்டு 216 அடி உயரத்தில் பஞ்சலோக சிலை ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே சர்தார் வல்லபாய் படேல் சிலை மிக உயர்ந்த சிலை என்ற நிலையில், அதற்கு அடுத்தகட்டமாகப் பிரதமர் மோடியால் இன்று திறந்து வைக் கப்படும் இச்சிலையை இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சிலை என்ற இடத்தைப் பிடித்திருக்கிறது.

தாமரை மலர் பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் நிறுவப்பட்டுள்ள இச்சிலையின் பீடத்தில் 54 தாமரைகள், 36 யானை சிற்பங்கள் இடம்பெறுள்ளது. சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட சிலையில் 120 கிலோ தங்கம் இடம் பெற்றுள்ளது. அல்லி இதழ்களில் 18 சாங்குகள், 18 சக்கரங்கள் இடம்பெற் றுள்ளன.

உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் தாய்லாந்தில் அமைந்துள்ள 302 அடி கொண்ட புத்தர் சிலையே உலகின் மிகப் பெரிய சிலையாக இருந்து வருகிறது. இதற்கடுத்ததாக, உலகின் இரண்டாவது பெரிய சிலை என்ற பெருமையை ராமானுஜரின் 216 அடி சிலை பெறவுள்ளது.

சிலை அமைக்கப்பட்டுள்ள 45 ஏக்கர் வளாகத்தில் 108 திவ்ய தேசங்கள், ஆழ் வார்கள், தமிழ்த் துறவிகளின் படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள விஷ்ணு கோயில்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும், இதே வளாகத்தில் ‘பத்ரா வேதி’ எனப் பெயரிடப்பட்ட 54 அடி உயர அடித்தள கட்டடம், வேதங் களுக்கான டிஜிட்டல் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம், பண்டைய இந்திய நூல்கள் அடங்கிய நூலகம், ஒரு கல்விக்கூடம் ஆகியவற்றுடன் ஒரு தியேட்டர் போன்ற வையும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிலையை அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டே தொடங்கப்பட்டது. திறப்பு விழா அன்று சிலை வளாகத்தில் 1,035 யாகம் உட்பட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், புகழ்பெற்ற ஆன்மிக குரு சின்ன ஜீயர் சுவாமியுடன் இணைந்து நிகழ்ச்சி யைத் தொகுத்து வழங்கினர். இந்த விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொண்டார்கள்.

தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத் தில் புகுத்திவிட்டு திவ்யமந்திரத்தை உச்சரித்தபடியே பெருமாள் திருவடி எய்தினார் ராமானுஜர். 120 ஆண்டுகள் வாழ்ந்த ராமானுஜர் கி.பி. 1138-ல் பரமபதம் அடைந்தார்.

இந்த நேரத்தில் இன்னொரு கேள்வியும் எழுகிறது?

தெலுங்கானாவில் ரூபாய் ஆயிரம் கோடி செலவில் ராமானுஜர் வெண்கலச் சிலையை மோடி திறந்தது அவசியமா? இந்தத் தொகையில் தொழிற்சாலைகள் அமைத்தால் எவ்வளவு பேர் வேலை கிடைக்கும்? எவ்வளவு குடும்பங்கள் பயன் பெறும்?

கடலுர் மாவட்டத்தில் நெய்வேலி அனல் மின்சார நிலையம் என்கிற மிகப் பெரிய நிறுவனம் உள்ளது. பல கி.மீ. பரப்பளவில் இந்த அரசு நிறுவனம் இயங்குகிறது. பல ஆயிரம் பேர் பணிபுரியும் மத்திய அரசின் மிகப்பெரிய நிறுவனத்தில் இதுவும் ஒன்று. நேருஜி காலத்தில் உள்ளூர் மக்களிடம் அவர்களின் நிலத்தை அரசு கையகப்படுத்தும்போது வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு என்கிற உறுதி யைக் கொடுத்துதான் நிலத்தைப் பிடுங்கியது. ஆனால் 50 ஆண்டுகளைக் கடந்து நிலம் கொடுத்த பல குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பை வழங்கவில்லை. ஆனால் வெளி மாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

அடுத்ததாக கடலூர் முழுக்க உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வேதியியல் தொழிற்சாலைகள் நிரம்பி உள்ளன. கடலூரில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகம். சிப்காட்டை நெருங்கியதிலிருந்து சில கி.மீ. வரை தூர்நாற்றம் வீசும். உள்ளூர்க்காரர்களுக்கும் அதிக வேலை வாய்ப்பை கொடுப் பதில்லை. தொழிற்சாலைகள் பெருகுவதால் மாகாண மக்களுக்குப் பயன் இல்லாவிட்டால், ஒரு நிறுவனம் இருந்தால் என்ன, இல்லை என்றால் என்ன?

கேள்விக்கு இன்னும் வரவில்லை என்று நினைக்கிறீர்களா? ராமானுஜர் சிலைக்கு நீங்கள் ஏதேனும் பணமோ, தங்கமோ கொடுத்தீர்களா? சிலை வைக்க நிலம் கொடுத்தீர்களா? குறைந்தபட்சம் ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்தீர்களா? சிலை வைத்த இடம் மோசடியில் பிடுங்கப்பட்டதா? நீங்கள் சிலை வைக்க பணம் கொடுத்தே ஆக வேண்டும் என்று பிடுங்கவில்லையே! அப்பறம் எதற்கு கருத்து நுரைநாட்டியம் எல்லாம்?

அவர்கள் இடத்தில், அவர்கள் வசூலித்த பணத்தில் அவர்கள் பிரம்மாண்டமான சிலை அமைக்கிறார்கள். அது அவர்களின் விருப்பம். அவர்கள் பத்தாயிரம் கோடியில் சிலை வைத்தாலும் அவர்களின் விருப்பம்.

நீங்கள் உங்கள் பணத்தில் ஏதேனும் தொழிற்சாலை கட்டி விடுங்கள். பலர் பிழைக்கட்டும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...