இது தேர்தல் வாக்குறுதி அல்ல,நிஜம்!

 இது தேர்தல் வாக்குறுதி அல்ல,நிஜம்!

வாங்கம்மா… வாங்க! வாங்கைய்யா…வாங்க!

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கும் 45ஆவது புத்தகக் கண்காட்சி யில் சுற்றுலா!

ஆயிரத்தைத் தொடும் ஸ்டால்கள்! அங்கு ஒரு எட்டு எட்டினேன்.

ஒரே வலத்தில் முழுமைப்படுத்தமுடியாமல் அசதி… அயர்ச்சி!  அதனால் பலமுறை!

ஒரு கமர்சியல் அல்லது கலைக் கண்காட்சி அளவிற்கு… அங்கு வசீகரம்! யம்மாடி…. இத்தனை பதிப்பகங்களா… என்கிற பிரமிப்பு! இந்தப் பிரம்மாண்டத் துக்கு ‘பபாசி’யை நிச்சயம் பாராட்டியேயாகணும்!

தினமலர்… குமுதம், விகடன், நக்கீரன் என பிரபல பத்திரிகைகள் ஆரம்பித்து மணிமேகலை, வள்ளி, கலைஞன், அருணோதயம், கவிதா, வானதி, கிழக்கு, அல்லயன்ஸ், உயிர்மை ..என எக்கச்சச்ச்ச்ச்சக்கம்!

சாலை…சாலையாய்… சாரி…சாரியாய்….வரிசைகட்டியுள்ள ஸ்டால்கள்! ஜோர்! அங்கு நடந்து…நடந்து களைப்பு!

அலுப்பு…களைப்பைப் போக்க அங்கே அம்சமாய் நிறையவே உணவுக்கூடங்கள்! நிகழ்ச்சி நடத்த… ஓய்வெடுக்க… பெரிய அரங்கம்!

புத்தக விரும்பிகள் மட்டுமில்லை… உல்லாசப் பொழுதுபோக்கிகள், வாய் நோக்கிகள், நடைப் பயணிகள்கூட… தங்களின் இணைவி, துணைவி, மனைவி, குடும்பம், குட்டீஸ் உடன் சென்று இங்கு குதூ‘களி’க்கலாம்.

இது தேர்தல் வாக்குறுதி அல்ல. நிஜம்!

(Feb 27th -ஞாயிறு மணிமேகலை பிரசுரம் புத்தக வெளியீட்டு விழாவில், தமிழ் வாணன், தினமலர் அந்துமணி, லேனா நூல்களுடன் – தாமரை பிரதர்ஸ் பதிப்பில் வந்துள்ள எனது ‘இதயம் இதயம் துடிக்கிறதே’  நூலும் வெளியா கிறது என்பது விசேஷ செய்தி.

புத்தகங்களோடு சிறந்த பொழுதுபோக்கு + மாலை நேர நடைப் பயணத்துக் காகவும் ஒரு ரவுண்டு அவசியம் போய்வரலாம்.

அப்புறம் விதவிதத் தலைப்பில் நூல்களை அலசித் தீரவில்லை! திரும்பவும் இன்னும் சில முறை படையெடுக்க வேண்டும்.

– என்.சி.மோகன்தாஸ்

பட தொகுப்பு: F.Anand

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...