தி.மு.க. அமோக வெற்றி… உண்மையான வெற்றியா?

 தி.மு.க. அமோக வெற்றி… உண்மையான வெற்றியா?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சிக்குத் தற்போது தேர்தல் நடைபெறுவதால் இந்தத் தேர்த லமிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. சட்டமன்றத்தில் போடும் திட்டங்கள் அடிமட்டத்துக்கும் போய் மக்கள் பயன்பெற வேண்டிய வழி முறை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் நராட்சி மாநக ராட்சி ஒன்றிய அமைப்பாளர்களால் நடைமுறைப்படுத்த முடியும். பெருநகரத்திற்கான வளர்ச்சிகளை மேற்கொள்வதற்கு இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடந்தது. ஓட்டு எண் ணும் பணி இன்று 22ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. முழுமையாக முடிவு நாளை மதியம் வாக் கில்தான் தெரியவரும் என்று தெரிகிறது.

200 கவுன்சிலர் பதவிகளுக்கு 2,670 பேர் போட்டி இட்டார்கள். அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டும் 1,124 பேர். ஆனால் சுயேட்சைகளோ 1,546 பேர்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான ஓட்டுப் பதிவு நடந்து முடிந்தது. இதில் அரசியல் கட்சிகளுக்கு நிகராக சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். ஆனால் அவர்களால் பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை. அங்கொன்றும் இங்கென் றுமாக வெற்றி பெற்றனர்.

ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணி கட்சிகள் 200 இடங்களில் போட்டி யிட்டன. இதில் தி.மு.க. மட்டுமே 167 வார்டுகளிலும் காங்கிரஸ் 16, விடுதலை சிறுத்தைகள் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5, இந்திய கம்யூ னிஸ்ட் 3, ம.தி.மு.க. 2, இந்தியன் யூனியன் லீக் 1 என மாநகராட்சித் தேர்தல் களத்தில் நின்றன.

எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணி 200 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. இதேபோல் நாம் தமிழர் கட்சி 199 இடங்களிலும், அ.ம.மு.க. 190 இடங்களிலும், தே.மு.தி.க. 141 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 177 இடங்களிலும், சமத்துவ மக்கள் கட்சி 17 இடங்களிலும் போட்டியிட்டன.

இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகி வந்த பா.ஜ.க.வும் அனைத்து வார்டு கவுன்சிலர் பதவிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.

நகர்ப்புறத் தேர்தலில் குறைந்த அளவிலான ஓட்டுகளே வெற்றி-தோல் வியை நிர்ணயிக்கும் என்றாலும் தி.மு.க. – அ.தி.மு.க. இடையே பெரிய போட்டி ஏற்படவில்லை. தி.மு.க. எளிதாக வெற்றி பெற்றது.

இதற்கு காரணம் அ.தி.மு.க.வில் கூட்டணி பலமில்லை. ஓட்டு சதவிகிதம் மிகக் குறைவான அளவில் பதிவானதே காரணம் என்றும் கூறப் படுகிறது. இன்னொரு விஷயம், தேர்தல் கமிஷன் மக்களுக்கு ஓட்டு போடுவதன் விழிப்புணர்வு செய்யவில்லை என்றும், விடுமுறை நாளில் தேர்தல் வைத்தது ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.  

எந்தக் காரணங்களைச் சொன்னாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

21 மாநகராட்சிகளில் சென்னை மாநகராட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வெற்றி பெறும் வார்டு கவுன்சிலர்கள், மேயர், துணை மேயர், நிலைக்குழு உறுப்பினர்கள், மண்டலத் தலைவர்கள் போன்ற பதவி களுக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆளும் கட்சியான தி.மு.க. அதிக வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது அந்தக் கட்சி பலமாகக் கருதப்படுகிறது.

பெருவாரியான இடங்களில் ஆளுங்கட்சியான தி.மு.க. கைப்பற்றியிருக் கிறது. அ.தி.மு.க. மிகக் குறைந்த அளவிலான இடங்களையே பெறமுடிந் தது.

வெற்றிக்களிப்பில் உள்ள தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடிவருகின்றனர்.

இந்தக் கொண்டாட்டம் பதவியில் அமர்ந்ததும் மக்களுக்கு கடமையைச் செய்வதிலும் இருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள் பொதுப் பார்வை யினர்.

2023 வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு ஆளுங் கட்சி செயல்படவேண்டும் என்பது நமது ஒரு எச்சரிக்கை கருத்து.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...