19 வருடங்களுக்குப் பிறகு சுந்தர் சி – யுவன்சங்கர் ராஜா கூட்டணி சேரும் படம்

 19 வருடங்களுக்குப் பிறகு சுந்தர் சி – யுவன்சங்கர் ராஜா கூட்டணி சேரும் படம்

‘அரண்மனை -3’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

ஜனரஞ்சகத் திரைப்படங்களை இயக்குவதில் திறமை வாய்ந்தவர் சுந்தர் சி. சமீபத்தில் இவர் இயக்கிய அரண்மனை-3 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந் தது. அரண்மனை-3 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி. இயக்கம் புதிய படத்தை அவ்னி சினி மேக்ஸ் தயாரிப்பு நிறுவனம் பென்ஸ் மீடியா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்கள்.

அவ்னி சினி மேக்ஸ் தயாரிக்கும் 6வது படமான இத்திரைப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐய்யர், ஐஸ்வர்யா தட்டா, ரைஷா வில்சன் ஆகி யோர் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, கிங்ஸ்லி, பிரதாப் போதன், சம்யுக்தா ஷண்முகம், திவ்யா தர்ஷினி  மற்றும் பல நட்சத்திரப் பட்டாளமே  இணைந்து  நடிக்கிறார்கள்.

யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 19 வருடங்களுக்குப் பிறகு சுந்தர் சி – யுவன்சங்கர் ராஜா கூட்டணி சேரும் படம் இது.

E.கிருஷ்ணசாமி  ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்கிறார் .

இப்படத்தின் படப்பிடிப்பு (31.1.2022) நேற்று பூஜையுடன் சென்னையில் தொடங் கியது. சென்னை, ஊட்டி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.