ஷில்பா ஷெட்டிக்கு நடந்த கொடுமைகள்

கடந்த 2007, ஏப்ரல் 15 அன்று குறிப்பிட்ட அந்த எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி கன்னத்தில் ரிச்சர்ட் கீர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த விவகாரத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்திருக்கிறது.

இந்திய சரக்கு வண்டி ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான உடலுறவு குறித்த எயிட்ஸ்  விழிப்புணர்வை வலியுறுத்தவும் வகையில் நியூ டெல்லியில் நடந்த அந்தப் பேரணி யின் ஒரு பகுதியாக ஷில்பா ஷெட்டியும் ரிச்சர்ட் கீரும் அங்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற் றனர். ராஜஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர், பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் நின்றுகொண்டிருந்த ரிச்சர்ட் கேர், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஷில்பா ஷெட்டியை அணைத்து முத்தம் கொடுத்தார். இதனால் ஷில்பா ஷெட்டி அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தபடி நின்றார். இந்தச் சம்பவம் சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு பார்வையார்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக ஷில்பா ஷெட்டிக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதன் தொடர்ச்சியாக சில பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடக்கத் தொடங்கியதை அடுத்து, அவற்றை பின்னர் போலீஸார் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இது தொடர்பாகப் பேசியிருந்த நடிகை ஷில்பா ஷெட்டி,  “இந்தச் செயல் நமது கலாசாரமல்ல என்பது புரிகிறது. எனினும் இந்த விஷயம் அதிகம் உணர்ச்சிவசப் படும் அளவுக்குப் பெரிதானது அல்ல. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன்” என்று கூறியிருந்தார். இதேபோல் ரிச்சர்டு கீரும் இது தொடர்பாக வருத்தம் தெரிவித் தார். ஆனாலும் வழக்குகளும் தொடரப்பட்டன.

இதுதொடர்பாக ராஜஸ்தானில் பதிவான வழக்கு மும்பை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த விவகாரத்தில் ஷில்பா ஷெட்டியைப் பாதிக்கப்பட்டவராகவே கருதப்பட வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஷில்பா ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் மீதான இந்த விவகாரத்தை துரிதமாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்ததற்கும் தற்போது மும்பை நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த நிலையில் விசாரணை நிறைவில், வழக்கில் இருந்து ஷில்பா ஷெட்டியை மாஜிஸ்தி ரேட்டு கேட்வி சவான் விடுவித்துள்ளார். இது தொடர்பான கோர்ட்டு தீர்ப்பில், “இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரிச்சர்ட் கேரின் செயலால் ஷில்பா ஷெட்டி பாதிக்கப்பட்டதாகத்தான் தெரிகிறது. ஆனால் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப் படையில் பார்த்தால் ஷில்பா ஷெட்டிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றே தெரிகிறது. எனவே, அவர் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் பட நாயகி ஷில்பா ஷெட்டி, ஒரு கட்டத்தில் அங்கு வாய்ப்பு குறைந்து தமிழில் விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் அளவிற்கு படு டல்லாக இருந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்தின் சேனல்-4 தொலைக்காட்சியில் 2007ல் நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷில்பா ஷெட்டிக்கு எதிராக இன துவேஷ வார்த்தைகளைக் கூறி சக போட்டியாளர்கள் சிலர் அவமானப்படுத்தினர்.

ஷில்பா ஷெட்டிதான் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்பது குறிப் பிடத்தக்கது. ஆனால் அவரை இனவெறி துவேஷத்தால் சக போட்டியாளர்கள் சிலர் கேவலமாகப் பேசியும், திட்டியும் வருவது பெரும் சர்ச்சையைக் கிளம்பியது.

பிரசுரிக்கவே முடியாத சில வார்த்தைகளைக் கூறி ஷில்பாவை அவர்கள் திட்டி யுள்ளனர். இவர்களின் இந்த இனவெறி சீண்டலால் அதிர்ந்துபோன ஷில்பா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். போட்டியின் முடிவில் அவருக்கு 31.5 மி. (£367,500 GBP) பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஓவர் நைட்டில் புகழின் உச்சிக்குப் போய் விட்டார் ஷில்பா.

பிக் பிரதர் நிகழ்ச்சியில் வென்றதன் மூலம் இந்தியாவில் மட்டுமல்லாது இங்கிலாந் திலும் ஷில்பாவுக்கு ரசிகர்கள் கூடி விட்டார்கள். அதன் பின்னர் கிட்டத்தட்ட மிஸ் யுனிவர்ஸ், மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற லெவலுக்கு மாறினார் ஷில்பா.

திருமணத்திற்கு முன்னர் நடிகை ஷில்பாஷெட்டி அக் ஷய் குமாருடன் காதல் வெகு பரபரப்பாக பாலிவுட்டில் பேசப்பட்டது. பிறகு என்ன காரணமோ இவர்களின் காதல் முறியவே, அக் ஷய், டுவிங்கிளை மணந்து கொண்டார்.

ஷில்பா ஷெட்டி சிறிதும் தாமதிக்காமல் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவைக் காதலித் தார். லண்டனைச் சேர்ந்த இந்தியத் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவருக்கும், ஷில்பாவுக்கும் இடையே காதல் உருவாகிவிட்டதாக 2007ம் ஆண்டே கிசுகிசு கிளம்பியது.

இந்த கிசுகிசுவை உண்மையாக்கும் விதமாக ராஜ் குந்ரா முதல் மனைவி கவிதாவை விவாகரத்து செய்துவிட்டு 2009ம் ஆண்டில் ஷில்பாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஷில்பாவை விட ராஜ் குந்தா ஒரு வயது இளையவர்.

என்னுடைய பெற்றோர் திருமணமாகி 35 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த மாதிரி தாம்பத்யம் அமைவதையே விரும்புகிறேன். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதில் நம்பிக்கை கொண்டவள் நான். எனது திருமணமும் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்பட்டிருக்கும் என்று கூறினார் ஷில்பா.

இந்த நிலையில் ஆபாசப் படங்களைத் தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் வெளியிட்டு பணம் சம்பாதித்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழி லதிபருமான ராஜ்குந்த்ரா கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார். ஆபாச பட விவகாரத்தில் நடிகை ஷில்பாவுக்கு சம்பந்தம் இருக்கிறதா என தெரிந்துகொள்ள குற்றப்பிரிவு போலீசார் அவரது வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது தனது கணவர் அப்பாவி என்றும் அவருக்கும் ஆபாச படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஷில்பா ஷெட்டி கூறியிருந்தார். ஷில்பா ஷெட்டியிடமும் ராஜ்குந்த்ராவிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச பட வழக்கில் கைதாகி சிறையில் இருப்பதால் மனமுடைந்த நிலையில் இருக்கிறார்.

ஷில்பா ஷெட்டி கொடுத்த வாக்குமூலத்தில்.. எனக்கு இதெல்லாம் தெரியாது. இப்படி ஒரு சம்பவம் நடந்தது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. இதை எல்லாம் கவனிக்க எனக்கு நேரம் கிடையாது. அவர் ஆபாச படம் எடுத்த போது நான் அருகி லேயே இல்லை. நான் பிசியாக இருந்தேன். அவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று எனக்கு தெரியாது என்று ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

போலீசார் முன்னிலையில் கணவரைச் சந்தித்த ஷில்பா ‘உங்களால் குடும்பத்தின் நற்பெயர் கெட்டுப்போனது. தொழில்களில் ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டனர் என்றும் மேலும், நிதி இழப்புகளும் ஏற்பட்டு உள்ளது. இத்தனை ஆண்டுகள் “நான் சம்பாதித்த பெயரும், புகழும், பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்று சொல்லி கதறி அழுதார்.

சில நடிகைகளும், மாடல் அழகிகளும் கட்டாயப்படுத்தி தங்களை ஆபாச படங்களில் நடிக்க வைத்ததாக புகார் கூறி வருவதால் ராஜ் குந்த்ராவுக்கு தண்டனை கிடைப்பது உறுதியாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ ஷில்பா ஷெட்டி முடிவு செய்துள்ளதாக இந்தி பட உலகில் தகவல் பரவி வருகிறது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘தவறு செய்துவிட்டேன்’ என்று ஷில்பா ஷெட்டி பதிவு வெளியிட்டார். ‘ராஜ் குந்தாராவைத் திருமணம் செய்து தான் தவறு செய்துவிட்டேன்’ என்று சுருக்கமாகச் சொல்வதாக வலைதள ரசிகர்கள் குறிப்பிட் டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!