ஆண்மைக்குறைவு ஒரு நோயா?
காலையிலிருந்து நடு இரவு வரை அத்தனை சேனல்களிலும் பத்திரிகைகளிலும் சிக்கிச் சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது ஆண்மைக்குறைவு.
“ஆண்மைக்குறைவா, கவலை வேண்டாம். எங்களிடம் நல்ல தீர்வு இருக்கிறது” என்று ஒரு விளம்பரம்.
“செக்ஸ் பிரச்சினையா? வேகமில்லையா? தளர்ச்சியா? எங்களிடம் வாருங்கள். உடனே தீர்வு.” என்கிறது இன்னொரு விளம்பரம்.
“சொப்பன ஸ்கலிதமா? துரித ஸ்கலிதமா? அந்தரங்கப் பிரச்சினையா?” எங்கள் மூலிகை மருந்தின் மூலம் தீர்த்து வைக்கிறோம்” என்றும், கூவிக் கூவி அழைக் கிறார்கள் இளைஞர்களை.
ஜிங்கா கோல்ட் ஒண்ணு போதும் நின்னு பேசும் என்கிறார்கள் சிலர்.
இது சம்பந்தமாக இன்னும் விதவிதமான விளம்பரங்களைப் பார்க்காதவர்கள், கேட் காதவர்கள் இருக்கமுடியாது. அரை மணிநேரம் ஒரு மணிநேரம் டி.வி.யில் சிலாட் எடுத்து மாங்கு மாங்கென்று ஆண்மைக்குறைவு புராணம் பாடுகிறார்கள். வளமான பாரதத்தில் வலிமையான இளைஞர்களை உருவாக்க சேவை செய்யவந்த விவேகானந்தரைப்போல இவர்கள் பேசுவார்கள். ஆனால் போலி.
’ஆண்மைக்குறைவு என்பது தீராத நோயா? இவர்கள் பயமுறுத்தும் அளவுக்கு வாழ்க்கையில் அவ்வளவு பெரிய பிரச்சினையா?’ திட்டக்குடி மருத்துவர் கே. சீனி வாசனிடம் கேட்டோம்.
“இளம் வயது காரணமாக ஏற்படும் உணர்வே பாலியல். தாகத்துக்குத் தண்ணீர் குடிப்பது போல, வயிற்றுப் பசிக்குச் சோறு சாப்பிடுவதுபோல, மலம், சிறுநீர் கழிப்பது போல உடல், மனம் சார்ந்த இயற்கை வெளிப்பாடுதான் செக்ஸ் எனப்படும் பாலியல் உணர்வும்.
ஒரு உயிரை உண்டாக்கும் ஆற்றல் பாலியல் உணர்வுக்கு மட்டும் உள்ளதால் இன்பத்தை வைத்துள்ளான் இறைவன். உடலுறவில் இன்பம் வைக்கவில்லையென் றால் உயிர்ப் பெருக்கம் ஏது? உலகம் ஏது? வாழ்க்கை ஏது?
ஆன்மிகத்தில் கடவுளை நினைத்து தியானிப்பதைத் தவிர உலகில் சிறிது நேரமே இன்பம் தரக்கூடிய அனைத்துமே சிற்றின்பம்தான்.
பருவ வளர்ச்சியின் காரணமாக ஏற்படும் பாலியல் உணர்வு ஆண், பெண் இருபாலா ருக்கும் ஒரே அளவில் ஏற்படக்கூடியது.
ஆண்கள் அதிகமாக வெளிவட்டாரப் பழக்கவழக்கம் வைத்துக்கொள்ளும் காரண மாகப் பாலியல் பற்றிய எண்ணம் அதிகப்பட்டு அது என்ன, எப்படி என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தால் தூண்டப்பட்டு பாலியல் இன்பம் அனுபவிக்கிறார்கள்.
வாழ்க்கையைச் சுவைக்கத் துடிக்கும் இளங்காளைகள் இன்பத்தேடலில் ஈடுபடும் போது ஏற்படும் மகிழ்வு அவர்களை மீண்டும் மீண்டும் அதன்வழி ஈர்த்து மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.
காமம் அளவுக்கு அதிகமாக ஏற்பட்டு உடலுறவிலோ அல்லது சுயஇன்பத்திலோ அதிக சக்தி இழப்பு ஏற்பட்டு மனஉற்சாகம் சற்று குறைந்து செக்ஸ் இன்பத்தில் நாட்டம் குறையக்கூடும். நல்ல ஓய்வுக்குப் பின் சத்தான உணவு உட்கொண்டால் மீண்டும் அதே உற்சாகமான இன்ப உறவைப் பெறலாம்.
எப்படிப்பட்ட பலசாலியாக இருந்தாலும், மனத்திடம் படைத்தவராக இருந்தாலும் தொடர்ந்து (அதே வேலையாக) உடல் இன்பத்தில் (சுயஇன்பத்தில்) ஈடுபட்டால் உடல் நிலையும் மனநிலையும் சலிப்பும் பலவீனமும் ஏற்படலாம்.
இந்த நேரத்தில் ‘முன்னமாதிரி நம்மால் இன்பம் அனுபவிக்க முடியலையே… உடல்நலம் கெட்டுவிட்டதோ?’ எனத் தனக்குத்தானே எண்ணி வெளியில் சொல்லா மல் மனதுக்குள் ளேயே புழுங்கிப் புழுங்கி வருத்தப்படுவதால் ஏற்படும் மனரீதியான ஒரு இடைவெளியே ஆண்மைக்குறைவு எனப்படும் சிறு பாதிப்பு. இது எல்லாருக்கும் ஒரு பருவத்தில் ஏற்படக்கூடும்.
நாம் உண்ணும் உணவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சத்துக்கள் ரத்தத்தின்மூலம் அந்தந்த உடல் உறுப்புகளுக்கு வழங்கப்பட்டு செயல்பட வைக்கிறது. அந்தந்த உடல் உறுப்பு களுக்கான சத்து குறைவுபடும்போதும் அல்லது ஒரு குறிப்பிட்ட உறுப்பின் செயல்பாடு (வேலை) அதிகமாகும்போதும் சிறு தளர்வு ஏற்படுவது இயற்கைதானே. அந்தச் சிறு தளர்வு, இயற்கையாக மனமும் உடலும் ஏற்படுத்தும் பாதுகாப்புத் தடைதான் ஆண்மைக் குறைவு.
அத்தகைய தருணங்களில் நல்ல ஓய்வு கொடுத்து, சத்தான உணவுகளை உட்கொண் டால் அதே சக்தியையும் ஆற்றலையும் பெற்றுவிடலாம். மனமும் புத்துணர்ச்சி பெறும்.
மனித வாழ்வில் எல்லாமே உணர்வோடு சம்பந்தப்பட்டவை. நல்ல பழக்கங்களின் தூண்டு தல் மெதுவாகவும் (ஆனால் உறுதியாக), தீய பழக்கங்களின் தூண்டுதல் வேகமாகவும் (ஆனால் கெடுதல்) கிடைக்கப்பெறும். அதனால்தான் நம் பொக்கிஷங் களான தமிழ் இலக்கியங்களும் சித்தர் பாடல்களும், இதிகாசம், புராணங்களும் அறத்தை வலியுறுத்திக் கூறுகின்றன.
இளமை வேகத்தில் அதிக இன்பம் பெறும் வேட்கையில் ஈடுபடும் இளைஞர்களுக் குத் தற்காலிகமாக ஏற்படும் உடல், மனச்சோர்வை சில மருத்துவர்கள் தங்களுக்குச் சாதக மாகப் பயன்படுத்திக்கொண்டு ஒன்றுக்கு இரண்டாகக் கூறி காசு பார்க்கிறார் கள். இது ரொம்பத் தவறான விஷயம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமும் ‘ஆண்மைக்குறைவு ஒரு நோய் அல்ல’ என்று அறிவித்திருக்கிறது.
முன்னாள் சுகாதாரத்துறை மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸும் அப்போது ஒரு பேட்டியில் ‘ஆண்மைக்குறைவு ஒரு நோயே இல்லை’ என்று தெரிவித்திருக் கிறார்.
ஆண்மைக்குறைவு என்பது சில வைத்தியர்கள் சித்திரித்துக் காட்டும் அளவுக்குப் பெரிய பாதிப்பே இல்லை.
பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பதுபோல ஒரு அதிருப்திதானே தவிர, இவர்கள் விஸ்ரூபித்துக் காட்டும் அளவுக்குப் பெரிய நோயோ, தவிர்க்கமுடியாத பாதிப்போ இல்லை.
ஆண்மைக்குறைவைத் தீர்க்கும் மருந்து சித்த மருத்துவத்திலேயே இல்லை. நம் நாட்டில் வாழ்ந்த எந்த சித்தரும் அதற்குத் தன் நூல்களிலே மருந்து சொன்னதில்லை.
அறியாமையால் பிறரிடம் இதுபற்றி ஆலோசிக்க வெட்கப்பட்டு மனம் ஒடிந்து போயிருக்கும் இளைஞர்களை இந்த மருத்துவர்கள் பயமுறுத்தி காசு பார்க்க வலை விரிக்கும் யுக்தியே ஆண்மைக்குறைவு விளம்பரங்கள்.
இந்த மாதிரியான ஏமாற்று விஷயங்களுக்கு அரசு உரிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும். நான் 25 ஆண்டுகளாக வைத்தியம் பார்த்து வருகிறேன். எங்கள் திட்டக்குடி ‘கௌசிகர் ராஜ வைத்தியசாலை’யில் ஆண்மைக்குறைவுக் கான விளம்பரமோ, வைத்தியமோ செய்வதில்லை. மக்கள், குறிப்பாக இளைஞர் கள் அந்த அறிவிப்புகளைப் பார்த்து பயந்து அவர்களிடம் சென்று ஏமாறவேண்டாம். இது பற்றி கேள்வி கேட்கும் வைத்திய ருக்கு நான் பதில் விளக்கம் தரத் தயாராக இருக்கிறேன்” என்றார் டாக்டர் கே. சீனிவாசன்.
இளமைப் பருவம் நினைக்க நினைக்க இனிக்கும் பருவம். அந்த இளமைப் பருவத்தில் எல்லாம் அளவோடு இருந்தால் எந்த நேரமும் இன்பமயம்தான்.