சார்பட்டா திரைப்படக் கதாபாத்திரத்தைப் பற்றிய ஒரு ஒப்பீடு
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நீ என் சிஷ்யனே கிடையாது என ரங்கன் வாத்தியார் கழட்டிவிட்ட பின் பீடி ராயப்பன் தான் கபிலனை பயிற்றுவிக்கிறார். இறுதியில் கபிலன் நன்றாக ஆடி ஜெயித்தவுடன் மார்தட்டும் ரங்கன் வாத்தியார் கதாபாத் திரம் எப்படி சரியாகும்?
இது கூட பரவாயில்லை, மன்னித்து விட்டுவிடலாம். எப்படி மன்னித்துவிடலாம் என்றால் ரங்கன் வாத்தியார் ஒரு சுயநலவாதி. போட்டியில் ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானா லும் செய்வார். தன் சொந்த மகனையே வேண்டாம் என சொல்லக் காரணம் அதுதான். படம் முழுவதும் அவர் அப்படித்தான் செயல்படு வார்.
ரங்கன் வாத்தியார் திட்டமிட்டுகூட திட்டி அனுப்பியிருக்கலாம். அவர் ஒரு சுயநலவாதி. எனவே அவர் கொண்டாடுவதை மன்னித்து விட்டுவிடலாம்.
இதே காட்சியை இன்னொரு கோணத்திலும் சிந்தித்துப் பாருங்கள்.
தனக்கு பயிற்றுவித்த பீடி ராயப்பனை கபிலன் கடைசி ஆட்டத்திற்குப் பயிற்சியாளராக அல்லது வேடிக்கை பார்க்கக்கூட கூட்டிட்டு வரவில்லை. தன் வேலை முடிந்ததும் அவரை அங்கேயே கழற்றிவிட்டு வந்துவிட்டார் கபிலன். இதுதாங்க கபிலனோட சுயநலம். எனவே கபிலனும் ஒரு சுயநலவாதி. இதனைப் படம் பார்க்கும் ஆடியன்ஸ்கூட, ‘டேய் கபிலா ஏண்டா பீடி தாத்தாவ கூட்டிட்டு வரல?’ என கேட்காமல் மேட்ச் பார்க்க போய்டாங்க. உலகத்தில் எல்லாரும் சுயநலவாதி கள்தான். நன்றி கெட்ட உலகம்டா சாமி.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
பாவம் அந்த தாத்தா இவங்க எல்லாரையும் மன்னித்து விட்டுட்டு கடல்ல பிஸியா மீன் பிடிக்க போய்டாரு போல.