மகிழ்ச்சிப் பொங்கலைப் பொங்கிக் கொண்டாடுவோம்

 மகிழ்ச்சிப் பொங்கலைப் பொங்கிக் கொண்டாடுவோம்

பொங்கல் செய்து இறைக்குப் படைப்பது என்பது, ஆடி (பகலவனின் தெற்கு நோக்கிய ‘தோற்ற நகர்வு’தொடக்கம்), மார்கழி (பகலவனின் தெற்கு நோக்கிய ‘தோற்ற நகர்வு’இறுதி பெறும் மாதம்), தை (பகலவனின் வடக்கு நோக்கிய ‘தோற்ற நகர்வு’தொடக்கம்) ஆகிய நிகழ்வுகளில் உண்டு. ஆடி, தையில் சர்க்கரைப் பொங்கல். மார்கழியில் வெண் பொங்கல்.

ஆடியில் பயிரிடல் தொடங்குகிறது. மார்கழியில் அறுவடை முடிவு. தை மாதம் விளைச் சலை பத்திரப்படுத்துதல், விற்பனை முதலியன. மாசி, பங்குனிகளில் நிலத்தை ஆறவிடல், சித்திரை வைகாசியில் பசுந்தாள் உரச் செடிகள் தயார் செய்தல். ஆனியில் பசுந்தாளுடன் உழுது, விதைக்கத் தயார்.

தை மாதம் முதல் நாள், அந்த ஆண்டு விவசாயம் நல்லபடியாக நடக்க உதவிய பகலவனைக் கொண்டாடுமுகமாக, சர்க்கரைப் பொங்கலிட்டு வழிபடும் நிகழ்வாதலால் அந்தப் பொங்கல் தைப் பொங்கல் எனப்படுகிறது.

போகிப் பண்டிகைக்கு அடுத்து வரும் பெரும் பொங்கலை நகரத்தில் ஏன் பல குடும்பங்கள் கொண்டாடுவது இல்லை? ஏதேனும் காரணம் உள்ளதா?

இப்பண்டிகை கிராமத்துப் பண்டிகை என்று நினைத்து இருக்கலாம். பட்டணத்தில் இருப்பவர் கள் அனைவரும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து வந்தவர்கள்தான். எல்லோரும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத்தான் செய்வார்கள். என்ன கிராமவாசிகளைப் போல் வாசலில் பொங்கல் வைக்காமல் கேஸ் அடுப்பில் குக்கர் பொங்கல் வைப்பார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

டவுனில் இருக்கும் இளம்பிள்ளைகளுக்கும், உத்தியோகஸ்தர்களுக்கும் தொடர்ந்த விடுமுறை கிடைக்கும் சந்தோஷம்தான். மேலும் இப்போதெல்லாம் பெண்கள் நினைத்த பலகாரங்கள் செய்தோ வாங்கியோ வீட்டில் அனை வரும் உண்டு விடுகின்றனர்.

இன்றும் கிராமங்களில் பொங்கல் அன்றும் ஊர்ச்சாமி கும்பிடும்போதுதான் சர்க்கரைப் பொங்கல் உண்ணக் கிடைக்கும்.

அன்றுதான் புதுத் துணிமணிகள், கறிக்கஞ்சி, சில நேரம் அன்னதானம் இவை கிடைக்கும்.

என்னுடைய சிறுவயதில் கூட மார்கழி மாதம் முழுவதும் கோயிலில் பொங்கல், அதுவும் அதிகாலையில் கொடுப்பார்கள். எங்கள் ஊரோ தேனி மாவட்டம் போடிநாயக்கனூர். பயங்கரமான பனிகொட்டும். அதிகாலையில் கோயிலுக்குப் போக வேண்டும் என்றால் குளிக்க வேண்டும்.

இப்படி கடுமையான துன்பத்தைப் பொங்கலுக்காகப் பொறுத்துக்கொண்டோம்.

சரி, வீட்டில் பொங்கலன்று பொங்கல் இலை நிறைய போட்டுத் தொலைப்பார்கள்.

சாமி கும்பிட்டு தலுவு போட்டு அந்தா இந்தா என்று இலையை விரிச்சு உட்கார்ந்தால் நிறைய போடுவார்கள். இருந்தாலும் கோயில் பொங்கல் பொங்கல் தான்.

சாப்பிட்டு முடித்து கரும்புக்கட்டையோட வெளியே போவோம். இரவு பல காய்கள் கலந்த சாப்பாடு எப்பா என்ன டேஸ்ட்டு? மூணு நாளு கொண்டாட் டம்தான். சொந்த பந்தங்களைப் பார்த்து கொண்டாட இனி அடுத்த வருஷம் வரைக்கும் வெயிட் பண்ணனும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...