லால் பகதூர் சாஸ்திரி (ஜனவரி 11, 1966) நினைவுநாள்

 லால் பகதூர் சாஸ்திரி (ஜனவரி 11, 1966) நினைவுநாள்

சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் பதவிக்கு வந்தார்.

லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதைய உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள முகல் சராய் என்ற ஊரில் பிறந்தார். பிறந்தபோது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. இவரின் தந்தை சரதா பிரசாத் பள்ளி ஆசிரியர். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய்த் துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது கங்கைக்கரையில் தாயாரின் கையில் இருந்து நழுவி ஓர் இடையரின் கூடையில் விழுந்து விட்டார். இடையருக்குக் குழந்தை கிடையாது, எனவே இது தனக்குக் கடவுளின் பரிசு எனக் கருதி லால்பகதூரைத் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். குழந்தையைக் காணாத லால்பகதூரின் பெற் றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். காவலர்கள் லால்பகதூரைக் கண்டு பிடித்து அவர் தம் பெற்றோரிடம் சேர்ப்பித்தனர்.

Lal Bahadur Shastri

லால்பகதூர் ஒன்றரை வயது குழந்தையாக இருந்தபொழுது இவரின் தந்தை இறந்துவிட்டார். எனவே தாயார் ராம்துல்லாரி தேவி இவரையும் இவரின் இரண்டு சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு தன் தந்தை வீட்டிற்குச் சென்று தங்கிவிட் டார். 10 வயது வரை தன் பாட்டனார் கசாரி லால் வீட்டிலேயே லால் பகதூர் வளர்ந் தார். அங்கு உயர்நிலைப் பள்ளி இல்லாததால் மேற்கொண்டு படிக்க வாரணாசிக்கு அனுப்பப்பட்டார். அங்கு தாய்வழி மாமா வீட்டில் தங்கி இருந்து அரிஸ்சந்தரா உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்கலானார். வாரணாசியில் உள்ளபோது ஒருமுறை நண்பர்களுடன் கங்கை ஆற்றின் மறுகரையில் நடந்த சந்தையைப் பார்க்கப் போனார். திரும்பும் போது படகுக்குக் கொடுக்க போதிய பணம் இல்லை, நண்பர்களிடம் கடன் பெறுவதற்குப் பதிலாக ஆற்றை நீந்திக் கடந்தார். நதிக்கரை யைக் கடந்து படிக்கப் போக பணமில்லாமல் நீந்திப்போய் படித்த அவருக்கு அங்கே மிஷ்ராஜி என்கிற அற்புதமான ஆசிரியர் கிடைத்தார்.

மாணவனாக இருக்கும்போது இவருக்கு புத்தகங்கள் படிப்பதென்றால் மிகவும் பிடிக் கும். குருநானக்கின் வரிகள் மீது பிரியமாக இருந்தார். இந்திய சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரைப் போற்றினார், 1915ஆம் ஆண்டு வாரணாசியில் மகாத்மா காந்தி அடிகளின் உரையைக் கேட்ட பிறகு தன் வாழ்க்கையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

சாதி முறையை எதிர்த்த இவர் தன் பெயரில் இருந்த சிறிவஸ்தவா என்ற சாதியைக் குறிக்கும் குடும்பப் பெயரை நீக்கினார். 1921இல் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி அடிகள் தொடங்கியபோது அதில் கலந்துகொண்டு சிறை சென்றார். காவலில் வைக்க உரிய வயது இவருக்கு இல்லாததால் அரசு இவரைக் கைது செய்து காவலில் வைக்காமல் வெளியில் அனுப்பியது. பின் வாரணாசியிலுள்ள தேசியவாதி சிவ் பிரசாத் குப்தா அவர்களால் தொடங்கப்பட்ட காசி வித்தியாபீடத்தில் இணைந்து 4 ஆண்டுகள் படித்தார். அங்கு முனைவர் பகவன்தாஸ் அவர்களின் மெய்யியல் தொடர் பான விரிவுரையில் பெரிதும் கவரப்பட்டார். 1926இல் காசி வித்தியாபீடத்தில் படிப்பை முடித்ததும் சாஸ்திரி என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. இது பின் இவர் பெயருடன் இணைந்து விட்டது. மக்கள் சமுதாயத்தின் பணியாள் என்ற அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராகப் பதிவு செய்து முசாப்பர்பூர் என்னும் இடத்தில் அரிசனங் களின் மேம்பாட்டுக்காக உழைத்தார்[8]. பின் அவ்வமைப்பின் தலைவ ரானார்.

1921ல் லலிதா தேவியை மணந்தார். பெரும் வரதட்சணை வாங்கும் பழக்கம் வெகுவாக இருந்தபோதிலும் இவர் காதியையும் இராட்டையும் மட்டும் வரதட்சணை யாக வாங்கிக்கொண்டார். 1930ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத் தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். அச்சமயம் இவரின் பெண்ணின் உடல்நலம் மிக மோசமானதால், எந்த போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 15 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் அவர் பெண் மரணமெய்திவிட்டார். ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு 15 நாட்கள் முடிவதற்கு நாட்கள் உள்ளபோதும் தாமாகவே சிறைச் சாலைக்குத் திரும்பிவிட்டார். அடுத்த ஆண்டு இவர் மகனுக்கு சுரம் என்றதால் ஒரு வாரம் வெளியில் செல்ல அனுமதி வாங்கினார். ஆனால் மகனுக்கு ஒரு வாரத்தில் சுரம் சரி ஆகாததால் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோளையும் மீறி சிறைச் சாலைக்குத் திரும்பினார்.

1937இல் உத்திரப்பிரதேச நாடாளுமன்ற குழுவின் ஒருங்கிணைப்புச் செயலாள ராகப் பணிக்கமர்ந்தார். 1940இல் சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாகத் தனிநபர் சத்தியா கிரகம் இருந்ததால் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். 1942ஆம் ஆண்டு காந்தி அடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த லால் பகதூர் சாஸ்திரி அலகாபாத்துக்குப் பயணம் செய்து ஜவகர்லால் நேருவின் ஆனந்த பவன் இல்லத்திலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக குறிப்பு களையும் ஆணைகளையும் ஒரு வார காலத்திற்குச் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கினார்.

அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட லால்பகதூர் சாஸ்திரி 1946ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மொத்தமாக ஏறக்குறைய 9 ஆண்டுகள் சிறை யில் கழித்தார். சிறையில் இருந்த காலத்தில் பல புத்தகங் களைப் படித்தார். மேற்கத்திய தத்துவஞானிகள், புரட்சியாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள் ஆகி யோரைப் பற்றி நன்கு அறிந்து கொண்டார். மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழி பெயர்த்தார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு சாஸ்திரி உத்தரபிரதேசத்தின் நாடாளுமன்ற செயல ராக நியமிக்கப்பட்டார். உத்தரபிரதேச முதலமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் அவர்களின் அமைச்சரவையில் காவல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இவரே முதலில் பெண்களை நடத்துநராக நியமித்தார். காவல் துறை அமைச்சராக, கட்டுப்பாடற்ற கூட்டத்தைக் கலைப்பதற்குக் கம்பால் அடிப்பதற்குப் பதிலாக நீரை பீய்ச்சி அடிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

1951இல் காங்கிரஸ் செயற்குழுவுக்குப் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். தலைவராக ஜவகர்லால் நேரு இருந்தார். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தல், தேர்தல் நடவடிக்கைகள், தேர்தல் விளம்பரங்களின் போக்கு போன்றவற்றிற்கு இவர் பொறுப்பாளராக இருந்தார். காங்கிரஸ் கட்சி 1952, 1957, 1962ஆம் ஆண்டுகளில் நடை பெற்ற பொதுத் தேர்தல்களில் பெற்ற பெரு வெற்றிகளுக்கு இவரது பங்களிப்பும் காரணமாகும்.

1951இல் நேருவால் இந்திய மேலவைக்கு நியமிக்கப்பட்டார். 1951-1956 வரை ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1956இல் மெகபூப்நகர் ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததற்கு தார்மீகப் பொறுப் பேற்று பதவி விலக முன்வந்தார். எனினும் நேரு இவரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ள வில்லை. 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடைபெற்ற ரயில் விபத்தில் 144 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து சாஸ்திரி பதவி விலகல் கடிதத்தை நேருவிடம் ஒப்படைத்தார். பதவி விலகலை ஏற்றுக்கொண்ட நேரு இச்சம்பவம் பற்றி நாடாளு மன்றத்தில் உரையாற்றும்போது விபத்துக்கு சாஸ்திரி காரணமில்லை என்றபோதி லும் அரசியல் சாசன முறைமைக்கு இது முன்மாதிரியாக விளங்கும் என்று கூறினார். அப்போது அத்துறை இணை அமைச்சராக இருந்தவர் ஓ.வி.அளகேசன். அடுத்து வந்த பொதுத் தேர்தலில் இவ்விபத்து பற்றிய பிரச்சாரம் செய்தே ஓ.வி.அளகேசன் தோற்கடிக்கப்பட்டார்.

1957ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து சாஸ்திரி நடுவண் அமைச்சரவையில் இணைந்தார். முதலில் போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தார். பின்பு வணிக மற்றும் தொழில் துறை அமைச்ச ராகப் பணிபுரிந்தார். 1961இல் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் உள்துறை அமைச்சராக இருந்தபொழுது சந்தானம் தலைமையில் ஊழல் தடுப்பு குழு அமைவதற்குக் காரணமாகவிருந்தார்

ஜவகர்லால் நேரு 1964 மே 27இல் மறைந்ததைத் தொடர்ந்து அரசில் வெற்றிடம் ஏற்பட்டது. அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் சாஸ்திரி பிரதமராக வருவதற்குக் காரணமாக இருந்தார்.

இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட் கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள் ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது காலமானார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...