மருத்துவ சேவையில் சாதித்த செவிலியர் மணிமேகலை

 மருத்துவ சேவையில் சாதித்த செவிலியர் மணிமேகலை

இந்தியா முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பாகப் பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வுசெய்து அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கி வருகிறது மத்திய அரசின் சுகாதாரத்துறை. அதன்படி 2020-ம் ஆண்டுக்கான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது கடந்த மாதம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறந்த செவிலியர் விருதை ஜி.மணிமேகலைக்கு ஆன்லைன் வழியாக வழங்கினார். இந்திய அளவில் 51 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் தமிழ்நாடு அளவில் மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. அவர்களில் மணிமேகலை செவிலியராக 17 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் மணிமேகலையிடம் பேசினோம்.

இந்த விருது பற்றிச் சொல்லுங்கள்.

2020 செவிலியர் ஆண்டாக அறிவித்திருந்தது மத்திய அரசு. அந்த ஆண்டில் எனக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேள் விருது வழங்கியது மகிழ்ச்சிக்குரியது. நைட்டிங்கேள் சேவைக்காகவே பிறந்தவர். அவரை மாதிரி சேவை செய்ய யாராலயும் முடியாது. எனக்களித்த இந்த விருது என்னை மேலும் சிறப்பாகப் பணியாற்றத் தூண்டகோலாக இருக்கும்.

நீங்கள் செவிலியராக வரக் காரணம் என்ன?

எங்க வீட்டில் யாரும் செவிலியராக வேலை பார்த்ததில்லை.  அரசுப் பள்ளி யில் தமிழ்வழியில் படித்த சாதாரண மாணவியாகத்தான் இருந்தேன். ‘இவளை செவிலியராக ஆக்குங்கள். இவள் அந்தத் துறையில் சிறப்பாக வருவாள்’ என்று என் பெற்றோரிடம் என் பள்ளி ஆசிரியர் சொல்லித்தான் நான் செவிலியருக்குப் படிச்சேன். அரசுப் பள்ளியில் தமிழில் படித்துவிட்டு பி.எஸ்ஸி., நர்சிங் படித்தபோது எல்லாமே ஆங்கிலத்தில் இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டேன். நம்மால் முடியும். முடியாதது எதுவும் கிடையாது என்று கொஞ்சம் ஈடுபாட்டோடு படித்தேன். அப்புறம் நல்லா புரிந்தது. பி.எஸ்ஸி.யில் கல்லூரியில் முதல் மாணவியாகத் தேர்வானேன்.

முதலில் ஒரு தனியார் மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் நர்ஸாகப் பணியாற்றினேன். எனக்குப் பிடித்த ஃபீல்டு இதுதான்னு அப்பதான் புரிந்தது.  ஒரு நாளைக்கு 14 மணி நேரப் பணி. எப்பொழுது எந்தப் பிரச்சினை என்றா லும் முதலில் செவிலியர்கள்தான் தயாராக இருக்கணும். இதனால் என் குடும்ப விஷயங்களைக்கூட தள்ளி வைத்திருக்கிறேன். குடும்ப விழாக்களில் கலந்துகொள்ள முடியாததால் தவிர்த்திருக்கிறேன். அந்தக் கடினமான நேரத் தில் இந்தப் பணிக்காக எனக்கு 2 பிஸினஸ் விருதுகள் கிடைத்தன. அதன் பிறகு குழந்தைகள் பற்றிய பிரிவில் எம்.எஸ்ஸி. நர்சிங் முடித்தேன்.

செவிலியர்களுக்கு பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

மக்கள் பிரச்சினையோடு பிரச்சினையாகத்தான் மருத்துவமனைக்கு வருகிறார் கள். அதிலும் அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் மிகவும் எளிய நிலை யில் உள்ள மக்கள். அவர்களுக்கு எதுவும் தெரியாது. எங்கு போகணும், யாரிடம் பேசணும் என்பதும் புரியாது. அதனால் பதற்றப்படுவார்கள். அவர் களிடம் மெதுவாக, பொறுமையாகத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது நம்பிக்கையாகக் கேட்பார்கள்.

குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியர் பணி என்ன?

மற்ற செவிலியர்களைவிட குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள செவிலி யர்களுக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்க வருகிறவர்கள் குடும்ப உறவுகளோடு வருகிறார்கள். பெரியவர்களுக்கு ஏதாவது உடல் பிரச்னை என்றால் அதைத் தாங்கிக்கொள்வார்கள். ஆனால் குழந்தைகளுக்குப் பிரச்சினை என்றால் குடும்பத்தில் எல்லாருமே பதறுவார்கள். பயப்படுவார்கள். அவர்களுக்கு ஆதரவாகப் பேசணும், புரியவைக்கணும்.

நோயாளர்கள் உங்களிடம் என்ன சொல்வார்கள்?

மதுராந்தகம் கொளம்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்த்தேன். அப்போது ‘மணிமேகலை சிஸ்டர் பேசதுறலயே பாதி வியாதி போயிடும்’னு சொல்வாங்க. எங்களுடைய  பார்மாசிஸ்டு சொல்வார்,  ‘உங்கக் கிட்ட வர்றவங்கள்ல பாதி பேரை பேசியே சரி பண்ணி அனுப்பிடுவீங்கன்னு ஊர்ல பேசிக்கிறாங்க’ என்பார். குழந்தை பெற வருகிறவர்கள்கூட மணிகேலை அக்கா இருந்தா நல்லாருக்கும். நல்லா பார்த்துப் பாங்கன்னு சொல்லி யிருக்காங்க என்பார்கள். வயதானவங்க காலையில ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அளவைப் பார்க்க சாப்பிடாம வந்துடுவாங்க. அவங்ககிட்ட ஆதரவா பேசறதையே விரும்புறாங்க. அவங்க எங்களிடம் வேற எதையும் எதிர்பார்க் கிறதில்லை.

நோயாளர்கள் பதற்றப்பட்டால் எப்படிப் பேசுவீங்க?

தனக்கு இவ்வளோ பெரிய பிரச்னை இருக்குன்றதை முதல்ல அவங்க ஏத்துக் கவே மாட்டாங்க. “என்ன, திடீர்னு இப்படி வந்து சொல்றீங்க?” என்பார்கள். குழந்தைகள் நல மருத்துவமனை என்பதால் பெற்றோர்கள் கேட்கிற கேள்வி களுக்கும் நாம் பொறுமையாகப் பதில் சொல்லித்தான் ஆகணும். அதற்காக அவங்களைத் தவிர்க்கப் பார்த்தால் அவங்களுக்கு இன்னும் பதற்றம் அதிக மாகும். முடிந்தவரை அவங்க கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே மருத்துவம் பார்க்கணும். எந்த விஷயம் செய்தாலும் ‘ஏன் பண்றீங்க? எப்படிப் பண்ணுவீங்க?’ என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். விவரத்தை டாக்டர்களிடம் கேட்பதைவிட அதிகமா நர்ஸ்களிடம்தான் கேட் பாங்க. ஏன்னா நாங்க அவங்ளோட ரொம்ப நெருக்கமா இருக்கிறோம். ‘நீங்க சொல்லுங்க. இந்த மாதிரி நிறைய கேஸ் பார்த்திருப்பீங்க இல்லையா? என் குழந்தைக்குச் சரியாகிடுமா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்பார்கள்.

குழந்தைகளை ஆஸ்பத்திரியில சேர்த்துட்டு மனைவி குழந்தையோட இருப் பாங்க, கணவன் வேலைக்குப் போகணும். இதனால் பொருளாதார ரீதியில் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாங்க. அந்த நேரத்தில் நர்ஸ்கள் பேசுவது அவர் களுக்கு ரொம்ப நம்பிக்கையா இருக்கும். திடீரென பாதிக்கப்பட்ட குழந்தை களை மருத்துவமனையில் சேர்த்துட்டு பொருளாதாரரீதியாக மட்டுமன்றி வேறு பல விஷயங்களிலும் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வந்ததுண்டு. அது மாதிரி சில குடும்ப நண்பர்களை அழைத்துப் பேசியிருக் கிறேன். ‘நீங்க ரெண்டே பேர் இருக்கீங்க. கூட யாரையாவது உதவிக்கு வச்சுக் கங்க’ என்பேன். இந்த நேரத்தில் அவங்களால குடும்பப் பிரச்சினைகளை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிப்பார்கள். அவங்களைக் கூப் பிட்டு ஆதரவாகப் பேசும்போதுதான் ஒவ்வொன்றையாகச் சொல்வார்கள். நான் சொல்கிற சில விஷயங்களைக் கேட்டு சரியானதும் உண்டு.

ஒரு மருத்துவமனையில் செவிலியரின் பங்கு எவ்வளவு பெரியது?

மருத்துவமனையின் பணி என்பது ஒரு டீம் ஒர்க்தான். இதில் யார் பணி சிறந்தது, யார் பணி குறைந்தது என்று மதிப்பிட முடியாது. செவிலியர் என்பது டைரக்ட் வித் பேசன்ட் என்பார்கள். எதுவென்றாலும் முதலில் பேஸன்ட்டிடம் பேசுவது செவிலியர்கள்தான். மற்றவர்களிடம் பேசத் தயங்குவார்கள். நர்ஸ்களிடம் குழந்தைகளும் நெருங்கிவந்து பேசுவார்கள்.  குழந்தைகள் நர்ஸுக்கு மனதளவில் குழந்தைகளைப் பிடித்திருக்கணும். குழந்தைகளுடன் பழகப் பிடித்திருக்கணும். அதனால் அந்தந்த குழந்தைகளின் நிலைக்கேற்ற மாதிரி அந்தப் பெற்றோரிடம் பழகிப் புரிவைக்கணும். அந்த வகையில் குழந்தைகள் நர்ஸ்களுக்குத் தனித்தன்மை உண்டு. எனக்கு குழந்தைகளை ரொம்பப் பிடிக்கும். பெற்றோர்களின் கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் ஆறுதல் சொல்வதும் ரொம்பப் பிடிக்கும்.

பாக்ஸ் மேட்டர் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற செவிலியர் ‘கைவிளக்கு ஏந்திய தேவதை’ (The Lady with the Lamp) என்று அழைக்கப்படுகிறார். செவிலியர் சமூக சீர்திருத்த வாதி மற்றும் நவீன செவிலியர்களின் அமைப்பின் நிறுவனராகவும் திகழ்ந் தார். ‘கிரிமியன்’ போரின்போது நைட்டிங்கேல் ஒரு செவிலியராக அவரது பணியைத் தொடங்கினார். அவர் செயின்ட் தாமஸ் மருத்துவமனை மற்றும் செவிலியர்களுக்கான நைட்டிங்கேல் பயிற்சிப் பள்ளியை 1860-ம் ஆண்டு நிறுவி ஆயிரக்கணக்கானோரை செவிலியராக்கினார். உலகில்1973ஆம் ஆண்டு முதல் தேசிய நைட்டிங்கேல் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2020-ஆம் ஆண்டு செவிலியர் ஆண்டாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர் பிறந்து 200வது ஆண்டில் வழங்கப்பட்ட இந்தத் தேசிய விருது முக்கியத்துவம் பெறுகிறது

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...