சாதனைச் சிறுவர்கள்

 சாதனைச் சிறுவர்கள்

ஆறாவது படிக்கும் இரட்டையரான அண்ணன், தங்கை சேர்ந்து 80 மாணவர்களுக்குத் தற்காப்புக் கலையான கராத்தே பயிற்சி அளிக்கிறார்கள். இதற்காக கடந்த ஆண்டு அன்றைய புதுச்சேரி முதல்வரான நாராயணசாமியிடமும் கவர்னர் கிரண்பேடியிடமும் பாராட்டுப் பெற்றுள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்தவர்களான இந்த இரட்டையர்களான ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி இருவருக்கும் 11 வயதாகிறது. 3 வயதில் இருந்தே தற்காப்பு கலை பயின்று, 9 வயதிற்குள்ளாகவே இரண்ட பிளாக் பெல்ட் வென்றிருக்கிறார்கள். கராத்தே, குங்பூ, சிலம்பம், குததுச் சண்டை, சுருள்வாள், பாள்பயிற்சி, நுங்சாக் என பல்வேறு தற்காப்புப் பயிற்சிகளையும் மிகக் குறைந்த வயதிலேயே கற்றுத் தேர்ந்து அந்தந்த கலைகளில் பல பரிசுகளையும் வென்றிருக்கிறார்கள்.

தற்காப்புக் கலையில் பட்டையைக் கிளப்பும் இரட்டையர்கள், பள்ளிப்படிப்பிம் அசத்துகிறார்கள். தற்காப்புப் பயிற்சிகள் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகளிலும் ஆர்வமாகப் படிக்கிறார்கள். தற்காப்புப் பயிற்சிகள் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகளிலும் ஆர்வமாக படிக்கிறார்கள்.

தினம் அரை மணி ந ரம் வீதம் சுமார் 82 பேருக்கு ஆன்லைனில் வீடியோ மூலம் யோகா, கராத்தே , குங்ஃபூ, சிலம்பம், சுருள்வாள் சண்டை என எல்லாம் முறையாகச் செய்துகாட்டி விளக்கினார்கள். இந்தப் பயிற்சிகளைப் பெரும்பாலும் சிறுவர், சிறுமிகளான மாணவர்கள்தான் அதிகம் பெறு கிறார்கள். இது அவர்களின் ஹெல்த் மற்றும் தன்னம்பிக்கை தரும் விதமாக அமைந்திருக்கும். அண்ணன் விசாகன், தங்கை ஹரிணியிடம் பேசினோம். “உங்க படிப்பு எப்படிப் போகுது? விசாகன்: ஆன்லைனில் பயிற்சி இருப்பதால் நல்லா படிக்கிறோம். ஹரிணி: படிப்பு விஷயத்தில் அம்மா மிகக் கண்டிப்பு, நாங்க யோகா செல்வதால் நல்ல நினை வாற்றல் இருக்கு. படிப்பில் கவனம் செ லுத்து கிறோம்.

10 வயதிற்குள்ளாகவே இவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி யிருக்கிறார்கள். பொதுவாக 13 முதல் 15 வயது நிரம்பியவர்கள் எட்டக்கூடிய 2-ம் பிளாக் பெல்ட் தகுதியை , 10 வயதிற்குள்ளாகவே எட்டிப் பிடித்திருக்கிறார்கள். கராத்தே போட்டிகளில் கலந்துகொண்டு முதலில் 5 வயதில் ஒன்றும் 9 வயதில் ஒன்றுமாக இரண்டு பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார்கள். இது மட்டுமின்றி, இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் பங்குபெற்று இருநூறுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பட்டங்களையும் வாங்கிக் குவித்திருக்கிறார்கள். சிறு வயதிலேயே இவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகளைப் பெருமைப்படுத்தும் விதமாக ‘வில் மெடல் ஆஃப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ (will medal of world records) மற்றும் ‘வில் மெடல் கிட்ஸ் ரெகார்ட்ஸ்’ (will medal kids records)-ல் உலக சாதனையாளர் எனப் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இந்த சாதனைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக ‘யூனிவர் செல் அச்சூவர்ஸ் புக் ஆஃப் ரெ கார்ட்ஸ்’ (universal achievers book of records) மற்றும் ‘ஃபூச்சர்ஸ் கலாம் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்’ (futures kalam book of records) ஆகிய வற்றிலும் உலக சாதனை யாகப் பதியப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின்போது ஸ்ரீவிசாகன் ஸ்ரீஹரிணி ஆகிய இருவரும் குறுகிய நேரத்தில் கண்களைக் கட்டிக்கொண்டு பல்வேறு விதமான தற்காப்புக் கலைகளை நிகழ்த்திக்காட்டி எல்லோரையும் வியக்க வைத்தனர். இவர்கள் நிகழ்த்திக்காட்டிய தற்காப்புக் கலை இதுவரை யாரும் நிகழ்த்தாத புதுவிதமான தற்காப்புக் கலையாக இருந்ததால் சர்வதே சத் தமிழ்ப் பல்கலை க்கழகம் சார்பாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த இரட்டை யர்களின் குரு காரை க்காலில் உள்ள இன்டர்நே ஷனல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியின் இயக்குநர் Dr. வி.ஆர்.எஸ் குமார் கடந்த இருபத்தை ந்து வருடங்களாக ஏராளமான மாணவ, மாணவிகளை உருவாக்கியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் இவருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

“ப்ரீகேஜ் படிக்கும்போது இரண்டரை வயதில் அவர்களை ஸ்விம்மிங்,
ஸ்கேட்டிங் பயிற்சிக்கு அனுப்பினோம். அதில் அவர்கள் ஈடுபாடு காட்டவில்லை. தற்காப்புக் கலை கராத்தே கற்பதில், மகன் விசாகன், மகள் ஹரிணிக்கு நாட்டம் இருப்பதை அறிந்து மாஸ்டர் வி.ஆர்.எஸ்.குமாரிடம் சேர்த்தோம். ரொம்ப ஆர்வமாகப் பயிற்சி பெற்றார்கள். அதோடு யோகா, கராத்தே , குங்ஃபூ, சிலம்பம் உள்பட ஆல் மர்ஷலஸ் பயிற்சிகளை முறையாக மாஸ்டர் சொல்லிக் கொடுப்பதை இருவரும் ரொம்பக் கவனமாகக் கற்றார்கள். கடினமாகப் பயிற்சி செய்து ஒன்பது வயதிலேயே இரண்டு பிளாக் பெல்ட் பெற்றார்கள். இது உலக அளவில் இளம்பருவத்தில் பெரிய சாதனை .

என் பிள்ளைகள் இருவரும் காலை அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துடு வாங்க. 5.30 முதல் 7.30 வரை பயிற்சி. 8 மணிக்கு முடித்துக் குளிச்சிடுவாங்க.  புதன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் தான் பயிற்சி.  ஞாயிற்றுக்கிழமை எல்லாப் பயிற்சியும் இருக்கும். அன்று ஃப்ரீயா விட்டுருவோம்.

தாய் பிரியா பேசும்போது, “‘என் கணவர் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர். அதனால் எங்கள் குழந்தைகள் இருவரையும் விளையாட்டில் ஈடுபடவைத்தோம். ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள். அதனால் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் வளர்க்க நினைத்தோம். பிள்ளைகளை விளையாட்டுத் துறையில் சாதனை யாளர்களாக மாற்றுவதுதான் என் ஆசை. அதற்கான பாதையில் அவர்களை நடக்கப் பழக்கிக்கொடுத்தேன். தற்போது அவர்களாகவே நடக்கிறார்கள். தற்காப்புப் பயிற்சி திட்டமிடுதலை நான் பார்த்துக்கொள்ள மாஸ்டர் வி.ஆர்.எஸ். குமார் பயிற்சி அளிக்கிறார். படிப்பு சம்பந்தமான விஷயங்களை என் கணவர் கவனித்துக் கொள்கிறார்” என்று குழந்தைகளின் திறன்களை மனநிறைவாக முடித்தார்.

இவர்கள் கொரோனா முதல் அலை இரண்டாம் ஊரடங்கை எப்படிப் பயனுள்ள வழியில் பய்னபடுத்திக்கொண்டனர் என்பதைச் சுவாரசியமாக நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

“கடந்த ஆண்ட கொரோனா காலத்தில் நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது. பள்ளிப் படிப்பை தவிர்த்து புதுப்புது விஷயங்களில் கவனம் செலுத்தலாம் என்று நானும் என் தங்கை ஹரிணியும் வரவிருக்கும போட்டிகளுக்கு எங்களுக்குள்ளாகவே பயிற்சி மேற்கொண்டு எங்களை பிசியாக வைத்துக்கொண்டோம். தற்காப்புப் பயிற்சிகளில் மும்முரமாக இருந்ததால் எங்களுக்கு வீட்டிற்குள் முடங்கியிருக்கும் உணர்வோ, தனிமை உணர்வோ ஏற்படவில்லை. எப்போதும் போலவே உற்சாகமாகக் கண்விழித் தோம்.

அதேபோல மற்ற குழந்தைகள் ஏதாவது ஒரு கலையில் ஒரு துறையில் தங்களை பிசியாக்கிக்கொள்ளலாம் உதாரணத்திற்கு ஊரடங்கு காலங்களில் ஆங்கிலம், பிரேஞ்சு, இந்தி, ஸ்பானிஷ் போன்ற புதுப்புது மொழிகளைக் கற்கலாம். கராத்தே, குங்பூ, சிலம்பம், ஸ்கேட்டிங் ஆப்லைன் முறையில் பயிலலாம். இல்லையேல் ஓவியப் பயிற்சி சதுரங்க விளையாட்டு பயிற்சி, ஓட்டப்பயிற்சி இப்படி ஏதாவது ஒன்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதனால் அவர்களும் பிசியாக இருக்கலாம். என்றான் ஸ்ரீவிசாகன்.

வெளிநாடுகளில் பள்ளிப் படிப்பின் போதே தற்கப்புக் கலைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. அதோடு திறன்பயிற்சி கற்பிக்கப்படுகின்றன. அதேபோல நாமும் நம் திறனை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் சிறப்பான எதிர்காலம் அமையும்” என்று மழலை மொழியில் பேசினார் ஸ்ரீஹரிணி.

நிறைய விஷயங்களை ஆன்லைனில் பயில முடியும். யூடியுப் தளங்களில் புதுப்புது விஷயங்களைத் தேடிப் படிக்கலாம். நாங்களும் ஆன்லைன் வாயிலாகப் பள்ளி குழந்தைகளுக்குத் தற்காப்புப் பயிற்சிகளை இலவசமாக வழங்கினோம். வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. அதை நாம்தான் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றார் ஸ்ரீஹரிணி.

“எங்கள் குழந்தைகள் இருவரையும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற
வைத்து இந்தியாவுக்கு தங்க மெடல் வாங்க வைக்கவேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம்’’ என்று தளராத தன்னம்பிக்கை யோடு  தெரிவித்தார். கராத்தே மாஸ்டர் வி.ஆர்.எஸ்.குமார் கூறும்போது “கராத்தேவில் சின்ன வயதில் வாங்குவது சாதாரண விஷயம் இல்லை. பல வெளிநாடுகளில் நடந்த கராத்தே போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு முறை வெற்றி பெறும்போதும் என் மாணவர்கள் என்ற பெருமை எனக்கு இருக்கும். இவர்கள் இருவரும் உலக சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்களின் அர்ப்பணிப்புக்கும், உழைப்புக்கும் ஒலிம்பிக்கில் பங்கு
பெற்றால் கண்டிப்பாக கோல்டு மெடல் கிடைக்கும்’’ என்றார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...