பிரபஞ்ச அழகியான இந்திய மாடல் அழகியின் பிரசாரம்
70வது மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்கான போட்டி இஸ்ரேலில் இருக்கும் சுற்றுலாத் தளமான எலியாட்ஸ் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காகப் பங்கேற்றனர்.
இந்தியாவைச் சேர்ந்த 21 வயது மாடல் அழகியான ஹர்னாஸ் சிந்து, தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சண்டிகரில் முடித்துள்ளார். பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் மிஸ் சண்டிகர் 2017, மிஸ் மேக்ஸ் எமர்ஜிங் ஸ்டார் இந்தியா 2018 மற்றும் ஃபெமினா மிஸ் இந்தியா பஞ்சாப் 2019 ஆகிய பட்டங்களையும் ஹர்னாஸ் சாந்து பெற்றுள்ளார்.
கடந்த 4 வருடங்களுக்கு முன்புதான் மாடலிங் துறைக்கே வந்தார். 2017ல் பல்வேறு மெகாசைன் களிலும், மாடலின் நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டு படிப்படியாக இந்த இடத்தை அடைந்துள்ளார். தற்போது பொது நிர்வாகவியல் துறையில் இவர் மாஸ்டர் டிகிரி படித்து வருகிறார். இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு அழகிப் போட்டிகளில் இவர் ஏற்கனவே விருதுகளை வாங்கி இருக்கிறார்.
யாரா தியான் பூ பரன் மற்றும் பாய் ஜி குட்டாங்கே போன்ற பஞ்சாபி படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்தியாவில் சுஷ்மிதா சென், லாரா தத்தா ஆகியோரைத் தொடர்ந்து ஹர்னாஸ் சிந்து மகுடம் சூடியுள்ளார். முன்னதாக, இந்தியா சார்பில் லாரா தத்தா 2000ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். தற்போது, 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து ஹர்னாஸ் சிந்து பிரபஞ்ச அழகியாக வெற்றி பட்டம் சூடியுள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக வெற்றி பெற்ற ஹர்னாஸ் சிந்துவுக்கு முன்னாள் பிரபஞ்ச அழகியான மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மெசா மகுடம் சூட்டினார். 2ஆம் இடத்தை பராகுவே நாட்டைச் சார்ந்த நதியா ஃபெரீரா மற்றும் 3ஆம் இடத்தை தென் ஆப்பிரிக்கா நாட்டை சார்ந்த லலேலா மஸ்வானே ஆகியோர் பிடித்தனர்.
இந்தியா சார்பில் லாரா தத்தா 2000-ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். அதன் பிறகு 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் போது, மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சந்துவை நிகழ்ச்சி நடத்துநர், ஸ்டீவ் ஹார்வி, “நீங்கள் சில அழகான விலங்குகளைப் போல ஆள்மாறாட்டம் செய்கிறீர்கள் என்று நான் கேள்விப்பட்டேன். உங்களின் சிறந்த திறனைச் சொல்லுங்கள்” என்றார்.
ஹர்னாஸ் சிரித்துக்கொண்டே பதிலளித்தார், “கடவுளே, ஸ்டீவ், உலக அரங்கில் இதைச் செய்வேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் இதைச் செய்ய வேண்டும், எனக்கு வேறு வழி யில்லை.” என்று சொல்லிவிட்டு அவர் பின்னர் பூனை போல மியாவ் செய்ய ஆரம்பித்தார். ஸ்டீவ் பின்னர் முன்சென்று மற்ற போட்டியாளர்களிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.
மேலும் பேசும்போது “மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்தவர்கள், அன்பு செலுத் தியவர்கள் அனைவரையும் மரியாதையுடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்த மேடையைப் பயன்படுத்திக்கொண்டு நாம் அனைவரும் கவனம் செலுத்தவேண்டிய விஷயங்களைப் பற்றி எடுத்துப் பேச விரும்புகிறேன்” என்று மகிழ்ச்சி பொங்கப் பேசினார் ஹர்னாஸ் சந்து.
பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அடுத்த ஓராண்டு உலகெங்கும் பயணம் செய்து குறிப்பிட்ட சில பிரச்சினைகளைப் பிரசாரம் செய்வார்கள்.
ஹர்னாஸ் பிரசரம் செய்யவிருக்கிறது பிரசாரம் இதுதான்.
பெண்கள் தங்கள் உடல்நலம் பற்றிப் பேசவேண்டும். நம்முடைய சமகத்தில் பெண்கள் தங்கள் உடம்பைப் பற்றியோ, தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றியோ பேசுவதற்குத் தயங்குகின்றனர். அதேபோல் மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பற்றியும் பேசுவேன். உரிய நேரத்தில் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்பதை மக்களிடம் வலியுறுத்துவேன்” என்கிறார் ஹர்னாஸ்.