மலத்தை அடக்குவதால் பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள் தோன்றலாம்
உலகக் கழிப்பறை தினம்
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக கழிப்பறை தினத்தினை முன்னிட்டு கழிவறை கோப்பை மூலம் கழிவறை முக்கியத்துவம் குறித்து விளக்கப் பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தூய்மை பாரத திட்டத்தின் தேவகோட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி மாணவர் களிடம் பேசுகையில், மாணவர்கள் அனைவரும் காலையும் மாலையும் அவசியம் மலம் கழிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை மலம் கழித்தல் உடலில் எந்த வியாதியும் வராது. மாணவர்கள் மத்தியில் கழிவறை கோப்பை காண்பிக்கப்பட்டு நேரடியாகக் கழிவறையின் முக்கியத் துவம் பற்றி விளக்கிச் சொல்லப்பட்டது. அனைத்து மக்களும் பல ஆயிரம் கொடுத்து செல்போன் வாங்குகின்றனர். ஆனால் துய்மையாக இருக்க வேண்டிய கழிவறை பயன்பாடு செல்போன் பயன்பாடு அளவில் பத்து சதவிகிதம் கூட இல்லை. இதனை மாற்றி அனைவருக்கும் கழிவறை அமைத்துக் கொடுத்து தனி நபர் சுத்தம், வீடு சுத்தம், தெரு சுத்தம், ஊர் சுத்தம், நாடு சுத்தம் எனத் துய்மை இந்தியாவை உருவாக்க சபதமேற்போம் என மாணவர்களிடம் சுத்தம் தொடர்பாக விரிவாக எடுத்து சொல்லப்பட்டது.
மாணவர்கள் சிலர் வீடுகளில் இன்னும் கழிவறை இல்லை எனத் தெரிவித் தனர். அவர்களிடமும் பெற்றோர்களிடம் சொல்லி விரைவில் கழிவறை கட்ட ஆவன செய்து சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டது. இல்லங்கள்தோறும் கழிவறை சுகாதாரத்தின் அடிப்படை, நோய்கள் இல்லாத சுகாதாரத்தை காத்திட கழிவறை அவசியம் என்கிற தலைப்பிலான உறுதிமொழியும் மாணவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
நிறைவாக ஆசிரியர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.