NPTEL ஆன்லைன் வழியாக 590 வகையான இலவசப் படிப்புகள்
சென்னை ஐ.ஐ.டி ஒருங்கிணைக்கும் தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 590-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டுள்ளது என சென்னை ஐ.ஐ.டி. அறிவித்துள்ளது.
இந்திய மனதவள மேம்பாட்டு அமைச்சகம் நிதி உதவியுடன் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.) இந்திய அறிவியல் மையம் (ஐ.ஐ.எஸ்.சி.) இணைந்து வழிக் கல்வியை கிராமப்புற மாணவர்களுக்காகவும் மற்றும் பட்டம் பெற்ற பெறாதவர்களுக்காகவும் நடந்துகிறது. 2022 ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் சுமார் 590 வகையான படிப்புகள் படிக்க வாய்ப்பு வழங்குகிறது.
(தேர்வு நாள் மற்றும் படிப்புகளைத் தேர்ந்தெடுக்க இங்கே சொடுக்கவும்.)
இந்தப் படிப்புகள் தேர்ந்தெடுக்கும் கல்வி முறைக்கு ஏற்ப நான்கு வாரம், எட்டு வாரம், 12 வாரம் 24 வாரங்களாக நடத்தப்படுகிறது. தேர்வுக் கட்டணம் 1000 ரூபாய்.
தேர்வெழுத இந்த ஆப்பில் பதிவு செய்யவும்.
இந்தச் சான்றிதழ் படிப்பு கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாத மாகும். இந்தப் படிப்பை மாணவர்கள் இணைய வழியில் படிக்கலாம். இந்தப் படிப்பு மாணவர்களின் திறனை மேம்படுத்த உதவும். சான்றிதழ் வேண்டுவோர் பெற்றுக்கொள்ளலாம். கல்விக் கட்டணம் வசூலிப்ப தில்லை. இந்தச் சான்றிதழ் பதவி உயர்வுக்கும் வழிவகுக்கும்.
கிராமப்புறம் மற்றும் சாதாரண கல்வி முறையில் படித்தவர்களும் உயர்வான கல்வியின் தரத்தைப் பெற ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி. தகுதியான உயர்நிலை பேராசிரியர்கள் இணையவழியில் கல்வி கற்பிக்கிறார்கள். ஆங்கில வழியிலும் மாநில மொழிகளிலும் படிக்கலாம்.
இணைவழியில் பங்கேற்றவர்கள் வாரம் ஒரு (Assignment) செயல்திட்டம் வழங்கவேண்டும். அதைப் படித்துவிட்டு பேராசிரியர் கேட்கும்
கேள்விக்கு மாணவர் பதில் வழங்கவேண்டும். அதன் பிறகு தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வை உங்கள் பகுதியில் நிர்ணயித்த மையத்தில் (கல்லுரியில்) கணினி வழியில் எழுதவேண்டும். இந்தச் சான்றிதழ் படிப்புக்கு மாணவர் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதற்குமேல் வயது வரம்பு இல்லை. எந்தவிதக் கல்வித் தகுதியும் இல்லை. இந்தப் படிப்பை மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், தனியார் பணியாளர்களும் கல்வியில் ஆர்வமுள்ளவர்களும் தாங்கள் விரும்பும் துறையில் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
NPTEL படிப்புகள் ஒரு வகுப்பறை சூழலை உருவாக்குவ தோடு மட்டுமல்லாமல், நன்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் கருத்துக்கள் ஆழமாக விளக்கப்படுகிறது.
கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் (அ) பிற்காலத்தில் ஐ.ஐ.டி.யில் சேர விரும்புபவர்களும் இந்த இணைய வழி படிப்பினைத் தொடரலாம். ஆன்லைன் சான்றிதழ் வாங்கிய மாணவர்களுக்கு 20 சதவிகித கிரெடிட் ட்ரான்ஸ்பர் செய்யப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் அதிகாரபூர்வ வலைதளமான onlinecourses.nptel.ac.in மூலம் பதிவு செய்யலாம்.
NPTEL என்பது ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எஸ்.சி கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும். NPTEL சான்றிதழ்கள் MOOC-கள் வடிவத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. NPTEL திட்டத்தில் இன்று வரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். பணியில் உள்ளவர்களுக்கும் பணி உயர்வு பெற தகுதியான படிப்பு. இன்றே இணைந்து பயன்பெறுங்கள்.
4 Weeks (SET 1) 8 Weeks (SET 1) 12 Weeks 4 Weeks (SET 2)
8 Weeks (SET 2)
Start of Course January 24, 2022 January 24, 2022 January 24, 2022
February 21, 2022 February 21, 2022
End of Course February 18, 2022 March 18, 2022 April 15, 2022
March 18, 2022 April 15, 2022
Exam Dates March 27, 2022 – 2 Sessions on
each date – 9 am-12 noon; 2 pm-5 pm
April 23/24, 2022 – 2 Sessions on
each date – 9am-12 noon; 2 pm-5 pm