புரட்சிப் பெண் மலாலாவுக்குத் திருமணம் நடந்தது
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்குத் திருமணம் நடந்துள்ளது. இது சமூக ஊடகங்களில் அனைவரையும் ஆர்வமாகப் பார்க்க வைத்துள்ளது.
கல்வியை அடிப்படை உரிமையாகக் கொண்டுள்ள நாடுகளில் கூட பெண்கள் கல்வி கற்பதற்கும் முன்னேறுவதற்கும் பல தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. இந்நிலையில் மதவெறியும், தீவிரவாத அச்சுறுத்தலும், பிற்போக்கு சித்தாந்தங்களும், நிறைந்த நாடுகளில் பெண்கள் கல்வி பெறுவது என்பது எத்தனை பெரிய சவாலாக இருக்கும் என யூகியுங்கள். அப்படியொரு அடிப்படைவாதிகளின் நிலத்திலிருந்து வெடித்து மலர்ந்த ’சோளப் பூ’தான் யூசுப் மலாலா.
பாகிஸ்தானின் வடமேற்கில் இருக்கும் நிலமே ஸ்வாத் பள்ளத்தாக்கு. ஆப்கனிஸ்தான் எல்லையிலுள்ள இது 2007-ஆம் ஆண்டு முதல் தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளது. இவர்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் எடுக்கும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
அங்கு பெண்களின் தார்மீக உரிமைகள் பறிக்கப்பட்டன. தனது கணவன் மற்றும் சகோதரர்கள் தவிர வேறு எவருடனும் பெண்கள் பொது இடங்களுக் குச் செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. பள்ளிக் கூடம் செல்ல பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டதோடு ஒரே நாளில் 400 பெண்கள் பள்ளிக் கூடங்கள் இழுத்து மூடப்பட்டன. இவை அனைத்தையும் செய்தது தலிபான் தீவிரவாத அமைப்பு.
அப்போது 12 வயதேயான மலாலா எனும் பள்ளிச்சிறுமி பிபிசி உருது இணைய தள வலைப்பூவில். தலிபான்களின் அராஜகம் பற்றி எழுதத் தொடங்கினாள். சோளப்பூ என்ற புனைபெயரில் 2009’ல் அவள் எழுதத் தொடங்கியபோது தோளில் தட்டி உற்சாகப்படுத்தியவர் மலாலாவின் தந்தை யூசுப்சாய்’. அவரும் தலிபான்களை எதிர்த்துப் பெண்களுக்கான பள்ளி யொன்றை நடத்திய போராளி.
பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தலை மீறி தானும் கல்வி கற்கச் சென்றதோடு பெண் கல்விக்கும் ஆதரவாகப் பேசினார் மலாலா. இதனால் 2012ஆம் ஆண்டு அவர் தாலிபான்களால் தலையில் சுடப்பட்டு காயம் ஏற்பட்டு இங்கிலாந்தில் சென்று மருத்துவம் பார்த்துத் தேறினார். அந்த நாடும் அவருக்குப் பாதுகாப்பு வழங்கியது. துப்பாக்கியால் சுடப்பட்டபோது மலாலாவுக்கு 15 வயது. மலாலா வுக்காக உலகெங்கும் ஆதரவுக் குரல் எழுப்பப்பட்டது.
2014ஆம் ஆண்ட மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றவர் மலாலா. அதன் பிறகு இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் அரசியல் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். தற்போது மலாலாவுக்கு 24 வயது ஆகிறது. அவருக்குத் திருமணம் நடந்த விஷயத்தை டிவிட்டரில் பதிவிட்ட பிறகுதான் அனைவருக்கும் தெரிந்தது.
அதில் அவர் “எனது வாழ்க்கையில் இன்று முக்கியமான நாள். அசர் மாலிக்கும் நானும் ஒன்றாக இணைந்துன்னோம். எங்கள் வீட்டில் குடும்பத் தினர் முன்னிலையில் எளிய முறையில் இந்தத் திருமணம் நடந்தது. எங்களை எல்லோரும் வாழ்த்துங்கள். நாங்கள் மிக மகிழ்ச்சியாக எங்கள் பயணத்தைத் தொடங்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மலாலாவை மணந்த அசர் மாலிக், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் உயர் செயல்பாட்டு மைய பொது மேலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலாலாவைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையோரத்தில் ஒரு சிற்றூர் மிங்கோரா. அங்கே 1997ல் பிறந்தவர் மலாலா. அந்தப் பகுதியில் தாலிபான் (Taliban) அமைப்புகளின் ஆதிக்கம் இருந்தது. பெண்கள் கல்வி கற்பதை, தாலிபான்கள் விரும்பவில்லை. வீட்டுக்கு வெளியே பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதுகூட தாலிபான்களுக்குப் பிடிக்காது.
அவர்களின் எதிர்ப்பையும் மீறி பள்ளிக்குச் செல்வதில் மலாலா ஆர்வம் காட்டினார். எதிர்ப்புகளுக்கு இடையேயும் மகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதில் மலாலாவின் தந்தை ஜியாவுத்தீன் உறுதியாக இருந்தார். மலாலாவுக்குத் துணையாக, அவரது தந்தையின் போர்க்குணமும் கல்வி ஆர்வமும் இருக்கிறது!
பள்ளி நாட்களிலேயே மலாலா சமூக வலைதளத்தில், ஒரு ‘வலைப்பூ’ (blogspot) தொடங்கினார். புனைப்பெயரில் தன் கருத்துகளைப் பகிர்ந்துவந்தார். பெண் கல்வி முக்கியமானது என்பதை வலியுறுத்தினார். தற்போது படிக்கக் கிடைக்கும் அவரது நூலான ‘I am malala’வில் அவரது கல்வி ஆர்வம் தெளி வாகத் தெரியும். பல்வேறு மொழிகளிலும் அந்த நூல் இப்போது கிடைக்கிறது.
மலாலாவின் வலைதளப் பதிவுகள் பலரையும் கவர்ந்தன. புனைபெயரி லேயே எழுதிவந்த மலாலா, ஒருநாள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி னார். மிங்கோரா பகுதி தலிபான்கள், மலாலாவை அடையாளம் கண்டுகொண் டனர். 2012 அக்டோபர் 9ல் அவரை கொல்ல முயற்சித்தார்கள். துப்பாக்கி குண்டு பாய்ந்தும், மலாலா பிழைத்துக்கொண்டார். மனம் தளராமல், கல்வி பற்றிய பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.
இந்த வீரபெண்ணின் செயல்களுக்கு, இரண்டு பரிசுகள் கிடைத்திருக் கின்றன. ஒன்று, ‘அமைதிக்கான நோபல் பரிசு.’ இன்னொன்று, ஒவ்வொரு சிறுமியின் மனதிலும், ‘தான் மலாலாவைப் போல ஆகவேண்டும்’ என்கிற எண்ணம் ஏற்பட்டிருப்பது!
தாலிபான் தீவிரவாதிகளின் அடக்குமுறைக்கு மத்தியில் பெண் கல்வி குறித்துப் பெரிதும் பேசிவந்த மலாலா, தனது 15ஆவது வயதில் பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார்; சர்வதேச கவனத்தை அது ஈர்த்தது.
அவர் மேற்கத்திய கலாசாரத்திற்கு ஆதரவாக இருப்பதால் அவரை சுட்டதாக பாகிஸ்தானில் உள்ள தாலிபன்கள் தெரிவித்தனர். அந்தத் தாக்குதலில் மலாலா பலத்த காயமடைந்தார். மேலும், அவரின் மூளையில் வீக்கம் ஏற்படுவதைத் தடுக்க மண்டை ஓட்டின் ஒரு பகுதியை நீக்கும் நிலை ஏற்பட்டது.
பாகிஸ்தானின் ராணுவ மருத்துவமனையில் அவசரகால சிகிச்சைக்கு பிறகு அவர் பிரிட்டனுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தனது குடும்பத்துடன் பிரிட்டனில் வசித்து வருகிறார்.
மலாலா கொள்கைகள்
உலகில் உள்ள அனைத்துப் பெண்களும் கல்வி கற்கவும், எந்தவித அச்சமும் இன்றி வாழ்வில் முன்னேறவும் மலாலா தனது தந்தை சியாவுதீனுடன் சேர்ந்து மலாலா நிதி அமைப்பை அவர் உருவாக்கினார்.
2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் மலாலா. இளம் வயதில் நோபல் பரிசு பெறும் சிறப்பையும், அமைத்திக்கான நோபல் பரிசை பெறும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையையும் பெற்றார் மலாலா. குழந்தைகளின் உரிமைகளுக்காகப் போராடியதற்காக இந்திய ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியுடன் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டார் மலாலா.