3 மலைகள் 4 நாட்கள் -காரைக்குடி to கொல்லிமலை – பயண அனுபவம்

முதல்மலை – கொல்லிமலை – இரண்டு இரவுகள் – ஒருநாள் 

கொல்லிமலை

நண்பர்களே, கடந்த இரு வாரங்களுக்கு முன் ஆயுத பூஜை விடுமுறையில்  குடும்பத்துடன் காரைக்குடியிலிருந்து மாலை 3.00 மணி அளவில்  கிளம்பி நாங்கள் புதுக்கோட்டை, திருச்சி, துறையூர்,  தம்மம்பட்டி  வழியாக முள்ளுக்குறிச்சி, சோளக்காடு பகுதிகளை அடைந்து கொல்லிமலையை இரவு 8 மணிக்கு சென்றடைந்தோம். செல்லும்  வழியில்  தம்மம்பட்டியில் இரவு உணவு சாப்பிடலாம் எனச் சென்றோம். பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள கௌரிசங்கர் உணவகத்திற்குச் சென்றோம். அன்று கடை விடுமுறை. எனவே அதன் அருகிலுள்ள செல்வி உணவகத்திற்குச் சென்றோம். அங்கு தேநீர் நன்றாக இருந்தது. அங்கு டீ ஸ்நாக்ஸ் முதலியவற்றைச் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி தம்மப்பட்டி, முள்ளுக்குறிச்சி, சோளக்காடு வழியாகக் கொல்லிமலை செம்மேடு பகுதியை அடைந்தோம். 

 செம்மேட்டில் அறை எடுத்த அனுபவம் : எங்கு உணவு சாப்பிடலாம்?

         செம்மேட்டில்  நாங்கள் ஏரோ மேன்ஷன் என்கிற அறையில் ரூம் எடுத்து தங்கினோம். டபுள் காட்டு உள்ள ஒரு ரூமிற்கு 900 ரூபாய் மட்டுமே வாடகை. இந்த அறையை நாங்கள் பிடிப்பதற்கு மிகக் கடுமையான பல்வேறு முயற்சிகள் எடுத்தும் என்பதே உண்மை. நாங்கள் பயணம் செல்வதற்கு முன்பாக நாமக்கல்லில் உள்ள நண்பர் கண்ணன் என்பவரைத் தொடர்பு கொண்டேன். அவரும் பல்வேறு தகவல்களை எனக்குத் தெரிவித்தார். பின்பு தாத்தையங்கார்பேட்டையில் முத்து மெடிக்கல் ஓனர் முத்துக்குமார் அவர்களைத்  தொடர்பு கொண்டேன் அவரும் எனக்கு சாப்பாடு செய்து தர கூடிய ஒரு எண்ணைக் கொடுத்தார். அவர் பெயர் ராஜேந்திரன். ராஜேந்திரன் தொடர்பு கொண்டபோது,  இரண்டு மேலாளர்களின் எண்ணைக் கொடுத்தார். அதில் ஒரு மேலாளர் விடுதி யில் அறை இல்லை என்று தெரிவித்துவிட்டார். மற்றொரு மேலாளர் அஜித் என்பவரைத் தொடர்பு கொண்டேன். அவர் ஒரு அறை உள்ளது. உங்களுக்காகத் தருகின்றேன் என்று தெரிவித்தார். நாங்கள் சென்ற நேரம் லாங் வீகெண்ட். மிக நீண்ட விடுமுறை உள்ள வார இறுதி நாளாகும். எனவே கொல்லி மலையில் அறை கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. பிறகு ஏரோ  மேன்ஷனில் அறையை புக் செய்துவிட்டு அங்கு தங்கினோம். இரவு உணவு குறிஞ்சி ஹோட்டலில்  சாப்பிட்டோம். வசந்த மாளிகை ஹோட்டலில்  சாப்பிடலாம் என்று முயற்சி செய்தோம்.  வசந்த மாளிகை ஹோட்டல் மிகவும் கூட்டமாக இருந்தது. எனவே செமேட்டில்  உள்ள குறிஞ்சி உணவகத்தில் வெறும் தோசை மட்டும் சூடாக சாப்பிட் டோம். காலையில் நண்பர் சின்னையன் அவர்களைத் தொடர்பு கொண்டோம். 

திரு. லெ.சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர்

 தெம்பளம் குமார் உணவகம்   

சின்னையன் அவர்களும், நாமக்கல்லைச் சேர்ந்த கண்ணன் அவர் களும் கொல்லிமலையில் பார்க்கும் இடங்களை  எல்லாம் எங்களுக்கு தகவல்களாகத் தெரிவித்தார்கள். அவர்களுடைய திட்டமிடலின்படி நாங்கள் முதலில் பூந்தோட்டம் வழியாகத் தெம்பளம் அடைந்தோம். தெம்பளத்தில் குமார் ஹோட்டல் என்பதில் சூடாக புரோட்டா மற்றும் இதர உணவுகள் கிடைக்கும் என்று தாத்தையங்கார்பேட்டை முத்து மெடிக்கல் தெரிவித்திருந்தார். அன்னாருடைய ஆலோசனையின்படி மாசி அருவி செல்லும் சாலையில் வலது பக்கத்தில் அமைந்துள்ள குமார் கடையில் (ஓனர் பெயர் ராஜ்குமார் மொபைல் எண் : 8870368153) பூரி, தோசை, புரோட்டா போன்ற உணவுகளை மிக நல்ல முறையில் செய்திருந்தார்கள். மதியம் உணவு வேண்டும் என்றாலும் ஆர்டர் கொடுத்துவிட்டு செல்லச் சொன்னார்கள். ஆனால் நாங்களோ ராஜேந்திரன் என்பவரிடம் தகவல் தெரிவித்து, ஆட்டுக்கறி செய்யச் சொல்லி இருந்தோம். அவரோ முதல் நாள் பேசும்பொழுது, அடுத்த நாள் காலையில் ஆறரை மணிக்கெல்லாம் எங்களைச் சந்திப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் நாங்கள் அவரைச் சந்திக்க இயலவில்லை. ஏழு மணிக்குக் கிளம்பி விட்டோம். அவர் ஏழு முப்பதுக்கு எங்களைக் கூப்பிட்டார். எங்களால் அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை. எனவே உணவு தயார் செய்யவில்லை. ஆனால் நாங்கள் அன்னார் உணவு  தயார் செய்துவிடுவார் என்று எண்ணியிருந்தோம்.

 ஆகாய கங்கை – அறப்பளீஸ்வரர் ஆலயம்

இந்நிலையில் தெம்பளத்தில் காலை உணவு அருந்திவிட்டு அறப்பளீஸ்வரர் கோயில் நோக்கிச் சென்றோம். அறப்பளீஸ்வரர் கோயில் நகரத்தார் கோயில்களைப் போன்று அமைந்துள்ளது. அறப்பளீஸ்வரர் கோவிலில் நன்றாக சாமி தரிசனம் செய்துவிட்டு, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியைக் காணலாம் என்று சென்றோம். 50 படி இறங்கி இருப்போம். எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட படிகள் உண்டு என்று தெரிவித்தார்கள். எனவே நாங்கள் அந்த முயற்சியை கைவிட்டு விட்டு அருகில் இருந்த சிற்றோடை போன்று உள்ள ஆற்றை சென்று பார்த்து, மகிழ்ந்து கால்களை நனைத்துவிட்டு அங்கிருந்து மீண்டும் தெம்பளம்  வழியாக மாசி அருவி நோக்கி வந்தோம்.

 மாசி பெரியசாமி கோவில் – நீண்ட பயணம் :

செங்குத்து மலைகளின் வழியாகச் செல்லுதல்

        மாசி அருவி அன்று மிகக் கூட்டமாக இருந்த காரணத்தினால், மாசி பெரியசாமி கோயில் நோக்கிச் சென்றோம். மாசி பெரியசாமி கோயில் காலை பதினோரு மணிக்குக் கிளம்பினோம். நல்ல வெயில், அந்த நேரத்தில் அங்கு நாம் செல்வது சரியான முயற்சி இல்லை என்பதை பின்னர் தெரிந்து கொண்டோம். காலை 6 மணி அல்லது ஏழு மணிக் கெல்லாம் மாசி பெரியசாமி கோயிலுக்கு நாம் செல்ல வேண்டும் என்பது உண்மை. நாங்கள் சென்ற பதினொரு மணிக்கு மிக அதிகமான வெயில் இருந்தபொழுதும், பாதை செங்குத்தாக இருக்கிறது. அங்கு சென்று இறைவனைத் தரிசித்து விட்டு மீண்டும் கீழே இறங்கி இரண்டு மணியைப் போல் அந்த உணவு கொடுப்பவரை அழைத்தோம்.

 தலைக்கறியை நம்பி சாதாரண உணவு சாப்பிட்ட தருணம் :

ராஜேந்திரன் அவர்கள்  உணவு தயார் செய்யவில்லை என்று கூறி விட்டார். ஏனெனில் அவருக்கு வேறு ஏதோ மிகப் பெரிய ஆர்டர் வந்து விட்டது போல.  மீண்டும் தெம்பளம் குமார் கடையில் உணவு கேட்டோம்.  சாதாரண உணவு மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார்.  மீண்டும் அவரது கடைக்குச் சென்று சாதாரண உணவைச் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து நேராக மாசி அருவி  நோக்கிச் சென்றோம்.  

 தண்ணீர் கொட்டும் மாசி அருவி :

            மாசி அருவி இயற்கையிலேயே குளிப்பதற்கு மிக அருமையான இடம். அதுபோன்று ஒரு அருவியை  நாம் இனிமேல் பார்ப்பது மிகக் கடினம். நல்ல முறையில் நேர்த்தியாகத் தண்ணீர் ஜில் ஜில் என்று விழுகிறது. அங்கு நன்றாகக் குளித்துவிட்டு மாசி அருவியிலிருந்து நாங்கள் எட்டுக்கை அம்மன் கோவிலை நோக்கிச் சென்றோம்.  

எட்டுக்கை அம்மன் ஆலையம்

 எட்டுக்கை அம்மன் கோவில்

               எட்டுக்கை அம்மன் கோவிலில் நீண்ட நேரம் சாமி தரிசனம் செய்தோம். எட்டுகை அம்மன் கோவில் இருக்கும் இடம் செல்ல, காரை நிறுத்திவிட்டு அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழியில் வாத்துக்கள் தண்ணீரில் நீந்திச் செல்கின்றது. அந்த இடத்தைக் கடந்து எட்டுகை அம்மனைத் தரிசித்து, சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் அங்கிருந்து கிளம்பினோம்.

 ஜிலுஜிலு தண்ணீருடன் நம்ம அருவி :

           நம்ம அருவி உள்ள பகுதிக்குச் சென்றோம். இது மிகவும் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாமல் மிக இயற்கையான முறையில் அமைந் துள்ளது. பாதுகாப்பான ஏற்பாடுகள் அனைத்தையும் அமைத்துள்ளார்கள். அந்த இடத்தில் நாங்கள் சென்று நன்றாகக் குளித்து விட்டு,  மீண்டும் அங்கிருந்து கிளம்பி செம்மேடு வந்தோம். 

 சீக்கு பாறை பாயிண்ட் வீயூ

             செம்மேட்டில்  இருந்து  வலது பக்கத்தில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீக்குப்பாறை பாயின்ட்  செல்லும்பொழுது நல்ல மழை பெய்தது. அங்கிருந்து பெயிண்டிங் அடிப்பதன் காரணமாக நான்கு நாட்களாக விடுமுறை என்று தெரிவித்தார்கள்.  மீண்டும் அங்கிருந்து தாவரவியல் பூங்காவுக்குச் சென்றோம்.

 அருமையான வீயூ பாயிண்ட் உள்ள தாவரவியல் பூங்கா

          தாவரவியல் பூங்கா உள்ளே சென்றோம். ஆனால் மேலே செல்ல நல்ல இரண்டு புறமும் மிக அழகான வியூ பாயிண்ட் பார்க்க முடிகிறது. அங்கிருந்து படகு இல்லத்துக்குச் சென்றோம். 

 படகு இல்லம் :

        படகுகள் தற்பொழுது இயக்கப்படவில்லை. இருந்தபோதிலும் சுமார் முக்கால் கிலோமீட்டர் நடந்தே சென்றோம். ஆனால் உள்ளே பார்க் பகுதி உள்ளது. பார்க்கில் ஊஞ்சல் ஆடலாம். ஓடிப் பிடித்து விளையாடலாம். நல்ல புல் தரைகள் அமைந்துள்ளன. அங்கிருந்து பூக்களின் நடுவே நடந்தே சென்றோம். நடுவே  தண்ணீர் செல்கிறது. தண்ணீர் செல்லும் இடத்தைத் தாண்டினால்   நல்ல பூக்கள் அமைந்துள்ள பகுதிகள் அதிக மாக இருக்கின்றது. 

 முதுமக்கள் தாழி :

     அங்கிருந்து மீண்டும் நாங்கள் வாசலூர்பட்டி நோக்கிச் சென்றோம். வாசலூர்பட்டியில் முதுமக்கள் தாழி அமைந்துள்ளது. கிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.எஸ். அவர்களின் பீரியடில் அங்கு முதுமக்கள் தாழியை நல்ல பாதுகாப்பான முறையில் பாதுகாத்துள்ளனர். அந்த முதுமக்கள் தாழியைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நேராக செம்மேடு வந்தடைந்தோம். 

 செம்மேட்டில் இரவு உணவு

    செம்மேட்டில்  இரவு ரவி என்பவரிடம் உணவு வாங்கினோம். ரவி அவர்கள் நல்ல முறையில் தோசை மற்றும் இட்லியை அறைக்கே கொண்டுவந்து கொடுத்தார். மறுநாள் காலையில் நண்பர்களின் ஆலோசனையின் பேரில் நாங்கள் அங்கிருந்து கிளம்பி சோளக்காடு வழியாகக் கீழே இறங்குகினோம். 

மிளகு, கிராம்ப்  எங்கு வாங்கலாம்? வழி சொன்ன சின்னையன் 

    சோளக்காட்டில் மிளகு மற்றும் கிராம்பு வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார் சின்னையன். ஒரு கிலோ விலை 450.  மற்ற பொருட் கள் அதாவது கொல்லிமலை செட் என்பதை வாங்க வேண்டாம் என்று தெரிவித்தார். என்ன காரணம் எனில்  மிளகு மற்றும் கிராம்பு மட்டுமே கொல்லிமலையில் விளையும்.

 கொல்லிமலை செட் வாங்கவேண்டாம் – ஏன் ?

   மற்ற அனைத்தும் சேலத்தில் லீபஜார் இருந்து வாங்கிக்கொண்டு வந்து இங்கு விற்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். எனவே மிளகு மற்றும் கிராம்ப் மட்டுமே தாங்கள் வாங்க வேண்டும் என்று தெரிவித்தார். நாங்களும் அவர் கூறியபடியே சோளக்காட்டில் மிளகு மற்றும் கிராம்பு முதலியவற்றை வாங்கிக்கொண்டு அங்கிருந்து முள்ளுக்குறிச்சி வழியாக தம்மம்பட்டி அடைந்தோம்.

மூன்று மலைகள் நான்கு நாட்கள் என்பது மிகப்பெரிய முயற்சிகளுக்கு அப்புறம் நாங்கள் சென்ற நிகழ்வு. பல்வேறு நண்பர்களே நாங்கள் இதன் மூலம் தகவல் கேட்டு ஈரோட்டில் உள்ள கார்த்திகேயன் ஆசிரியர், சேலத்தில் உள்ள நவபாரதி,  நண்பர்கள் கொல்லிமலை சின்னையன், தாத்தையங்கார்பேட்டை முத்து மெடிக்கல் நிர்வாகி முத்துக்குமார், தும்பல் கிருஷ்ணமூர்த்தி,  நண்பர் கண்ணன்,  ஏற்காட்டில் உள்ள இளங்கோ (தாவரவியல் துறையில் இருந்து 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற வர்கள்), நாமக்கல் விமலா வித்யா, கீழசிவல்பட்டி கருப்பையா, நாமக்கல் ஆசிரியை உமா, நண்பர்கள் தியாகதுருகம்  கிரி, ஸ்ரீபத் ஆகியோர் எங்க ளுக்குப் பல்வேறு தகவல்களைப் பல்வேறு இடத்தில் இந்தப் பயணம் சிறப்பாக முடிவதற்கு உதவி செய்தார்கள். அனைவருக்கும் இந்த நேரத் தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அருமையான இடங்கள். அருமையான வாய்ப்புகள் அமையும் பொழுது அனைவரும் சென்று வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இனிதே இரண்டாவது நாள் பயணத்தைத் தொடங்கினோம். அடுத்த மலையை நோக்கிச் சென்றோம். வெகு விரைவில்….

அன்புடன், லெ.சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை

மூலவன்

1 Comment

  • திரு. சொக்கலிங்கம் சார்க்கு உங்கள் பயண அனுபவம் சிறப்பாக இருந்தது. செம்மேட்டில் ரூம் எடுத்து தங்கியதாக கூறினீர்கள் அங்கே பேருந்து நிலையத்திற்கு எதிரே ஹோட்டல் வருணன் மிகவும் புகழ் பெற்ற ஓட்டல் சாப்பாடு அசைவம் மற்றும் சைவம் நன்றாக இருக்கும்….. பரோட்டா கோழிக்கறி குழும்பு வேற லெவல்….. அடுத்து முறை ஹோட்டல் வருணனில் சாப்பிடுங்க…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...