இலவச NPTEL ஆன்லைன் படிப்புகள்
மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்
சென்னை ஐ.ஐ.டி ஒருங்கிணைக்கும் தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 400-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டுள்ளது என சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.
கோவிட் – 19 பெருந்தொற்று காலத்தின், மாணவர்கள் NPTEL படிப்புகளைத் தங்களது பிரதான பாடத் திட்டங்களுடன் இணைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் வீட்டிலிருந்து கற்கவேண்டிய சூழலில், இது நல்ல வாய்ப்பாக அமைகிறது. NPTEL படிப்புகள் ஒரு வகுப்பறை சூழலை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், நன்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் கருத்துக்கள் ஆழமாக விளக்கப்படுகிறது என்று சென்னை ஐ.ஐ.டி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வருஷத்துக்கு இரு முறை இந்தத் தேர்வு நடைபெறும். ஜனவரி, ஏப்ரல், மே, நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் 6, 8, 12 என மூன்று பகுதிகளாக நடைபெறும்.
இந்திய தொழில்நுட்பக் கழகமான சென்னை ஐ.ஐ.டி. ஒருங்கிணைக்கும் தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 400-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைமுறை தொடங்கப்பட் டுள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் (அ) பிற்காலத்தில் ஐ.ஐ.டி.யில் சேர விரும்புபவர்களும் இந்த இணைய வழி படிப்பினைத் தொடரலாம். ஆன்லைன் சான்றிதழ் வாங்கிய மாணவர்களுக்கு 20 சதவிகித கிரெடிட் ட்ரான்ஸ்பர் செய்யப்படுகிறது.
படிப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இருப்பினும், சான்றிதழ் வாங்க நினைக்கும் மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டணம் வசூலிக் கப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் அதிகாரபூர்வ வலைதளமான onlinecourses.nptel.ac.in மூலம் பதிவு செய்யலாம்.
NPTEL என்பது ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எஸ்.சி கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும். NPTEL சான்றிதழ்கள் MOOC-கள் வடிவத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. ஆன்லைனில் வீடியோ மூலம் கற்பிக்கப்படும். மாணவர் கள் வாராந்திர / மாதாந்திர அடிப்படையில் பணிகளைச் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் வாங்க நினைக்கும் இறுதித் தேர்வுக்குப் பதிவு செய்ய வேண்டும். ஒரு மாணவர் சான்றிதழ் தேர்வை முடித்தவுடன் கிரடிட் ட்ரான்ஸ்பர் செய்யக் கோரலாம். NPTEL திட்டத்தில் இன்று வரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
உயர் தகுதி ஐ.ஐ.டி. ஆசிரியர்களை வைத்து தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது. இது இலவசம் வாய்ப்பு. இது பணியில் உள்ளவர்களுக்கும் பணி உயர்வு பெற தகுதியான படிப்பு. இன்றே இணைந்து பயன்பெறுங்கள்.