‘திட்டம் இரண்டு’ – குறி தப்பவில்லை!
‘கனா’ படத்துக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்முறையாக போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம்நடித்திருக்கும் படம்
சுக்குநூறாக உடைத்தெரியும்படியான கிளைமாக்ஸ் ட்விஸ்ட், ஒரு நல்ல காதல் க்ரைம் திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவத்தைத் தருகிறது. குறிப்பாக யாரும் யூகிக்க முடியாத கதைக் கரு
வித்தியாசமான டைட்டில் கொண்ட படம். திரில்லர் பட வரிசையில் வெளிவந்துள்ள படம் ஓடிடி ரிலீஸ். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு டீசண்டான திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவத்தைக் கொடுத்துள்ளது இந்த ‘திட்டம் இரண்டு’. அதுவும் படத்தின் கடைசியில் வரும் எதிர்பாராத, உணர்ச்சிப்பூர்வமான ட்விஸ்ட் படத்தின் வெற்றியை உறுதிசெய்துள்ளது. ஆரம்பத்தில் க்ளிஷேவான காட்சிகள் மூலம் நகரும் படம், போகப் போக வேகமெடுத்து நிறைவான கிளைமாக்ஸோடு முடிந்துள்ளது. அங்கங்கே சரியான நேரத்தில் ரசிக்கும்படி அமைந்த சின்னச் சின்ன ட்விஸ்டுகளோடு படம் முழுவதும் பயணிக்கவைத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். லாஜிக் மீறல்கள் சில இடங்களில் தென்பட்டாலும், அவற்றை மறக்கடிக்கும்படி அமைந்துள்ள ட்விஸ்ட் அன்ட் டர்ன்ஸ் படத்தைப் பாரபட்சம் பார்க்காமல் ரசிக்கவைத்துள்ளது.
மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், உடல் மொழியைக் காட்டிலும் முகபாவனை மூலம் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
ஐஸ்வர்யா ராஜேஷின் தோழியாக வரும் அனன்யா ராம் பிரசாத்துக்கு சிக்கலான வேடம். அதை அவர் சிறப்பாக செய்ய முயற்சி செய்துள்ளார். அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. சீரியல் கில்லராக வரும் நடிகர் பாவல் நவகீதன், சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். முக்கிய பாத்திரத்தில் வரும் கோகுல் ஆனந்த், முரளி ராதாகிருஷ்னன், ஜீவா ரவி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.