விரைவில் | பத்துமலைபந்தம் – காலச்சக்கரம் நரசிம்மா
மிகப்பெரிய நன்றிகளுடனும் சந்தோஷத்துடனும் இவ்வறிப்பு மின்கைத்தடி மின்னிதழின் தொடக்கம் அதன் வளர்ச்சி தற்போதைய பல நிகழ்வுகள் பதிவுகள் என அவ்வப்போது பகிர்ந்து கொண்டே இருந்தாலும், இன்னும் ஒரு உயர்ந்த இடத்திற்கு அதைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆவல் மனதிற்குள் ஒருபுறம் விளக்கொளியின் சுடர் போல் எரிந்து கொண்டே இருந்தது.
ஆசிரியர் குழுவில் கமலகண்ணன் அவர்களின் களப்பணி அளப்பரியது அத்தோடு ஆசிரியர் குழுவில் நண்பர் பாலகணேஷ் அவர்களும் இடம்பெற புதியபகுதிகள் அனைத்தும் அணிவகுத்தது. அதன் தொடர்ச்சியாக மின்கைத்தடி நம் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் திருகரங்களால் மகுடம் சூடிக்கொள்ளப்போகிறது.
கணேஷ்பாலா என்ற நண்பன் பிடித்து இழுத்த வடம் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் நட்பு, அந்நட்பில் பூத்தது இத்தொடர். நல்ல உள்ளங்களின் ஆதரவோடு அடுத்த கட்ட நகர்வை நோக்கிப் பயணிக்கப்போகிறோம். உங்கள் வாழ்த்துக்களோடும் ஆதரவோடும்
————————————————————————————————————–
கொடைக்கானல் அருகே பள்ளங்கி என்கிற கிராமம். அங்கே நல்லமுத்து என்கிற வைத்தியர் போகர் தர்மசாலை என்று ஒரு மூலிகை வைத்தியசாலை நடத்தி வருகிறார். ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட புற்று நோயாளிகளும் அங்கே வந்து குணம் அடைந்திருக்கிறார்கள். இறந்து விடுவார் என்று கருதப்பட்ட மிக மோசமான நிலையில் ஒரு பெரிய மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு தொழிலதிபர், நல்லமுத்துவின் மருத்துவமனைக்கு வந்து குணமடைய, நல்லமுத்துவின் புகழ் திக்கெட்டும் பரவ, வெளிநாட்டு நோயாளிகளும் வரத்தொடங்குகிறார்கள்.
————————————————————————————————————–
பத்துமலைபந்தம் என்ற தொடரின் மூலம் மே மாதம் 1ம் தேதி அன்று தொடங்க உள்ளது.
உங்களின் பேராதரவுடன்
மின்கைத்தடி.காம் குழு
5 Comments
நல்ல முயற்சி. பாராட்டுக்கள். நல் வாழ்த்துக்கள்.
வரட்டும்…வரட்டும்….ஆவலுடன்..எதிர் பார்க்கிறோம்!
எழுதட்டும். மிகவும் அருமையான நாவல் ஆசிரியர்.
ஆவலுடன்..எதிர் பார்க்கிறோம்!
ஆவலுடன் காத்திருக்கிறோம்…
Aavaludan kathirukirome