பத்து ரூபாய் மருத்துவர் கோபாலன் படத்திறப்பு விழா

 பத்து ரூபாய் மருத்துவர் கோபாலன் படத்திறப்பு விழா

சென்னை, வடசென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தெருவுக்கு பத்து ரூபாய் டாக்டர் கோபாலன் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

ராயபுரம் ரவுண்டப் சார்பில் பத்து ரூபாய் மருத்துவர் கோபாலனின் நினைவாக கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் டாக்டர் கோபாலனின் படத்திறப்பு நிகழ்ச்சி ஆகியவை சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, அருள்ஜோதி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது,

வடசென்னை வணிகர் சங்கத்தின் தலைவர் ஜி.ராபர்ட் தலைமையிலும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் எம்.கே. பாபு சுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வண்ணாரப்பேட்டை காவல்துறை துணைக்கமிஷனர் சுப்புலட்சு மி கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் கோபாலனின் படத்தை எழுத்தாளர் லதா சரவணன் திறந்து வைத்தார். மருத்துவர் நந்திவர்மன், தலைமை ஆசிரியை மணிமேகலை, எல் முருகவேலு, எழுத்தாளர் சிவசுப்ரமணியம், எஸ்.எஸ் ஜெயமோகன் , முனைவர் சுந்தர், அண்ணா நடப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் பூங்கா குணசேகரன் கம்யூனிகேஷன் ரபியா, ஆகியோர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்ற முக்கிய தீர்மானம்
மருத்துவம் என்பது மக்களுக்கானது என்று கிட்டதட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பணியாற்றிய பத்து ரூபாய் மருத்துவர் மருத்துவமாமணி கோபாலனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம், அவரை இழந்து குடும்பத்தினருக்கும் இந்த பகுதி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம், மருத்துவர் கோபாலனின் சேவையை இனி வரும் தலைமுறை மருத்துவர்களும் மேற்கொள்ளும் வண்ணம், பாரெங்கும் பரப்பும் கடமை, தமிழக மக்களுக்கும் தமிழக அரசுக்கு இருக்கிறது.

எனவே டாக்டர் கோபாலன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் புதிய சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். எளிய மக்களுக்கு அவர் நடத்தி வந்த சிறு மருத்துவமனை அமைந்திருக்கும் பழைய வண்ணாரப்பேட்டை பாலு முதலி தெருவை பெருமைப்படுத்தும் வகையில் டாக்டர் கோபாலனின் பெயரை சூட்டும் படியும் கேட்டுக்கொள்கிறோம் ராயபுரம் ரவுண்டப் சார்பில் மட்டுமில்லாமல் ராயபுரம் மக்களின் சார்பில் வாழ்த்துகிறோம்,
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் மு.ராமச்சந்திரன் நன்றி தெரிவித்தார்,

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...