வரலாற்றில் இன்று – 21.01.2021 எம்.ஆர்.எஸ்.ராவ்

 வரலாற்றில் இன்று – 21.01.2021 எம்.ஆர்.எஸ்.ராவ்

இந்திய விஞ்ஞானி எம்.ஆர்.எஸ்.ராவ் 1948ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி மைசூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் எம்.ரங்கசாமி சத்யநாராயண ராவ் ஆகும்.

இவர் நூற்றுக்கணக்கான சர்வதேச பத்திரிக்கை கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் இவர் குரோமட்டின் உயிரியல் மற்றும் புற்றுநோய் உயிரியல் பற்றிய ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தினார்.

இவருடைய வெளியீடான பெருங்குடல் புற்றுநோய் பற்றிய விளக்கங்கள் செல் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவருக்கு இந்திய அரசால் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் (2010) பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் இவர் பல பதக்கங்கள் மற்றும் விருதுகளை பெற்றுள்ளார்.

பெலிக்ஸ் ஹாஃப்மேன்

ஆஸ்பிரின் (Aspirin) மருந்தைத் தயாரித்தவரான பெலிக்ஸ் ஹாஃப்மேன் 1868ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள லூட்ஸ்விக்ஸ்பெர்க் என்ற ஊரில் பிறந்தார்.

சிறுவனாக இருந்த சமயத்தில் இவருடைய தந்தை மூட்டுவலியால் அவதிப்பட்டதை பார்த்து, படித்து முடித்ததும் அதற்கான மருந்தை 1897ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.

முதலில் பவுடராகத் தயாரிக்கப்பட்ட இவரது மருந்து, பின்னர் மாத்திரை வடிவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. குறைந்த செலவில் தயாரிக்கும் முறையும் மேம்படுத்தப்பட்டு, குறைந்த விலையிலும் விற்கப்பட்டது. உலகம் முழுவதும் அதிவேகமாக இது பிரபலமடைந்தது.

இதுவரை தயாரித்து விற்பனை செய்யப்பட்ட மருந்துகளிலேயே அதிகளவு வெற்றி பெற்றது ஆஸ்பிரின்தான் என்று கூறப்படுகிறது. (இம்மருந்து பொதுவாக சிறிய வலிகளுக்கு எதிரான வலிநீக்கியாக பயன்படுகிறது).

இந்த மருந்து நல்ல பலனையும் கொடுத்தது. இதன் வேதியியல் பெயர் அஸிடைல்சாலிசிலிக் (Acetylsalicylic) ஆசிட் ஆகும். மருத்துவ மேதை பெலிக்ஸ் ஹாஃப்மேன் 1946ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1924ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி சோவியத்தின் தலைவர் விளாதிமிர் லெனின் மறைந்தார்.

1945ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...