உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி

 உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி

“ஆர்ஜே தாண்டவத்தோட சரக்கை அடிச்சிட்டான். நாளைக்கு காலையில் ரெண்டு குரூப்பும் சந்திக்கிறாங்க. எப்படியும் நாளைக்கு இரவுக்குள்ள சரக்கை வெளில எடுத்தாகனும். அதனால பெரிய அளவில் அவர்களுக்குள்ள போராட்டத்தை எதிர்பார்க்கிறேன்.”

“ம்ம்……ஓகே ஆனா எனக்கு இப்போ எந்த டீடைல்ஸ்சம் வேண்டாம். வேலையை சீக்கிரம் முடிக்க பாருங்க. போன தடவை மாதிரி மிஸ் ஆக கூடாது. இதை பத்தி மீடியாவுக்கு தெரிஞ்சா கிழி கிழிச்சிடுவானுங்க. அதுமட்டுமில்லை நம்ம நாட்டின் பாதுக்காப்புக்கே கேடு விளைவிக்கிற ஆட்களை இத்தனை நாள் விட்டு வச்சதே தப்பு. நீங்க எவ்வளவு துரிதமா நடவடிக்கை எடுக்குரீங்களோ அவ்வளவு நல்லது”என்றார் அமைச்சர்.

“ அடுத்த வாரத்துக்குள்ள எல்லாமே முடிஞ்சிடும். ஆனா அந்த ஜெர்மன் கப்பல் இன்றைக்கு இரவு வரை தான் வெயிட் பண்ணுமாம் . அதுல உள்ள ஆட்களை மடக்கி பிடிக்க மரைன் கம்மண்டோஸ்க்கு உங்க ஆர்டர் தேவை. நாங்க இங்கே இறங்கும் போது அவங்க கப்பலை மடக்கிடனும். ஆனா கப்பல் பிடிபட்டது அடுத்த வாரம் வரை தெரியக் கூடாது”என்றான் கார்த்தி.

“ஓகே கார்த்தி நான் அவங்களுக்கு அனுமதி கொடுத்திடுறேன். எப்போ என்ன எப்படி என்பதை நீங்க ப்ளான் பண்ணிடுங்க.என்ன உதவி வேணும்னாலும் உடனே கேளுங்க ஏற்பாடு செய்றேன்…நான் உங்க அனைவரையும் முழு

நம்பிக்கை வச்சு இருக்கேன் .வெற்றியோட வாங்க……ஜெய்ஹிந்த்” என்று சொல்லி போனை வைத்தார்.

அவரிடம் பேசி முடித்து அவர்களை பார்த்து ..”போன முறை நடந்த அரசாங்க குழப்பங்களால என்னால இந்த ஆபரேஷனை முடிக்க முடியல…அதுமட்டும் இல்லாம மந்திரிகளுக்குள் நடந்த போட்டியில் என்னை வெளிபடுத்திட்டாங்க. அதுல என்ன ஒரு நல்லதுன்னா முழுக்க என்னை பற்றி வெளிவரல. அதனால தான் நான் மறுபடியும் இந்த ஆபரேஷனுக்கு ஒத்துக் கிட்டேன். என்னை ஒரு பத்திரிகைகாரனா வெளிபடுத்தி இருக்கேன். தாண்டவம் குரூப் அதனால தான் என்னை கண்டு உஷாரானாங்க.”என்றான் கார்த்திக்.

அவன் சொன்னவற்றை கேட்டு அனைவரும் அந்த ஆபரேஷனை சீக்கிரமே முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தீவீரமான மன நிலைக்கு வந்தனர். ஆதியும் கார்த்தியும் ஆர்ஜேவின் ஆட்களை அடைத்து வைத்திருந்த பட்டறைக்குச் செல்ல, சேதுவும் பிரபாகரும் தாண்டவத்தின் வீட்டை கண்காணிக்க கிளம்பினர்.

ஆர்ஜேவின் மனம் எரிமலையென தகித்துக் கொண்டிருந்தது. இன்னொருவனை விரும்பிகிறேன் என்று சொல்லி விட்டாளே என்று எண்ணி எண்ணி மனம் உளைக்களமென கொதித்தது. அதனால் அவன் எண்ண ஓட்டத்திற்கு தகுந்தாற்போல் காரும் சீறிப் பாய்ந்தது.

பிச்சாவரத்தில் கிளம்பிய கார் வேகமெடுத்து முட்லூரில் உள்ள வீட்டின் வாயிலில் ‘க்ரீச்’ என்ர சத்தத்துடன் நின்றது. காற்றின் வேகத்தை விட பல மடங்கு வேகத்துடன் வந்திருந்தான். காரில் இருந்து இறங்கியவன் வாசலில் இருந்த ஆட்களை பார்த்து தலையசைத்து விட்டு உள்ளே சென்றான். நேரே மாடியில் இருந்த தன்னறைக்கு சென்று கதவில் கை வைக்கவும் அது தானாக திறந்தது கொண்டது.

கதவு பூட்டபடாமல் தானாக திறக்கவும் யோசனையுடன் உள்ளே சென்று பார்த்தான். எதுவும் சந்தேகபடக்கிற வகையில் தெரியவில்லை. மெல்ல அறையில் இருந்த ஒவ்வொன்றையும் கண்களாலேயே ஆராய்ந்தான். யாரும்

வந்து போனதற்கான அடையாளம் எதுவும் தென்படவில்லை. ஒருவேளை தானே கதவை பூட்டாமல் சென்றிருப்போமோ என்றும் யோசித்தான். அப்போது அலமாரியின் ஒரு கதவு சரியாக மூடாமல் அதிலிருந்த புடவை வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. அதை பார்த்தவன் வேகமாக சென்று கதவை திறந்து பார்த்தான் . புடவைகள் கலைந்து கிடந்தன. அவசரமாக எல்லா புடவைகளையும் எடுத்து போட்டுவிட்டு உத்ராவின் போட்டோ அங்கே இருக்கிறதா என்று தேடினான். அது கையில் கிடைக்கவில்லை என்றதும் அவன் சந்தேகம் ஊர்ஜிதமானது.அதை தெரிந்து கொள்ள அறையை விட்டு வெளி வரும் போது கதவுக்கருகில் ரெண்டு துளி ரத்தம் சிதறிக் கிடந்தது. குனிந்து ரத்தத்தை தொட்டு பார்த்தான். புது ரத்தம் கண்டிப்பாக சற்று முன்னர் தான் விழுந்து இருக்க கூடும் என்பதை உறுதிபடுத்தியது. உத்ராவின் பதிலில் ஏற்பட்டிருந்த ஆத்திரம் இப்போது பன்மடங்கானது.கண்டிப்பாக வந்தவன் அவளை தேடித்தான் வந்து இருக்கிறான் என்று எண்ணினான்.

உத்ராவின் படத்தை காணவில்லை எவனோ தன்னறைக்குள் நுழைந்து இருக்கிறான் என்ற எண்ணம் ஆர்ஜேவை பித்து பிடிக்க வைத்தது. ஆத்திரம் தலைக்கேற கிஷோர் இருந்த அறைக் கதவை படபடவென்று உடையும் அளவிற்கு தட்டினான். அவன் தட்டிய வேகத்தில் வீடே அதிர்ந்தது. சத்தம் கேட்டு வாசலில் இருந்த ஆட்கள் ஓடி வரவும் கிஷோரும் பதறி அடித்துக் கொண்டு திறக்கவும் சரியாக இருந்தது.

அவன் சட்டையை கொத்தாக பிடித்து” நீ எதுக்குடா இங்கே இருக்கே.? என்ன பு…இருக்கவா இங்கே இருக்கே…எவனோ உள்ளே நுழைஞ்சிட்டு போய் இருக்கான்”……..என்று சொல்லி வெறி கொண்டு அவனை இழுத்து சென்று அந்த அறையில் காண்பித்தான்.

அவன் கோபம் கண்டு அங்கிருந்தவர்கள் விழி பிதுங்கி நிற்க, கிஷோர் தன்னை சமாளித்துக் கொண்டு..”என்ன சொல்ற ஆர்ஜே…அதெல்லாம் இங்கே யாரும் வரல.”

“அவளை தேடி வந்து இருக்கான்…இங்கே..இங்கே ..பாரு புடவை எல்லாம் எடுத்து பார்த்து இருக்கான்……பாரு கிஷோர்……..நல்லா பாரு.ரத்தம் அவன் ரத்தம் பாரு..அவன் வந்துட்டான் .அவன் என் உத்ராவை தேடி வந்து இருக்கான்……என் உத்ரா என் உத்ரா” என்று சொல்லி அங்கே இருந்த பூ ஜாடியை சுவற்றில் ஓங்கி அடித்தான்.

அவன் சொன்ன பிறகு அந்த அறையை பார்த்தான். அவனுக்கு பெரிதாக எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் ஆர்ஜே சொன்ன மாதிரி அறையின் கதவருகே இருந்த ரத்தம் யாரோ வந்ததை ஊர்ஜிதபடுத்தியது. அதற்குள் அங்கிருந்த ஆட்கள் அனைவரையும் அறைந்து தள்ளினான் ஆர்ஜே. “ என்னங்கடா பண்ணுனீங்க எவனோ இங்கே வந்து இருக்கான்…இந்த ஆர்ஜேவோட வீட்டுக்குள்ள வந்து இருக்கான் என்று சொல்லி கையில் கிடைத்தவைகளை எல்லாம் எடுத்து அவர்களை விளாசித் தள்ளினான்.

அவன் வெறி நேரம் ஆக ஆக கூடிக் கொண்டேப் போனது. அதை பார்த்த கிஷோர் அவன் கையை பற்றி அறைக்குள் அழைத்துச் சென்று கதவை சாத்தி தாழிட்டான். “ விடு……விடு கிஷோர்…….எனக்கு எல்லோரையும் கொன்னு போடணும்ன்னு வெறி வருது…………எல்லோருமா சேர்ந்து என் உத்ராவை என் கிட்டே இருந்து பிரிச்சிடுவீங்கடா………என் உத்ராவை பிரிச்சிடுவீங்க” என்று சொல்லி கையால் சுவற்றை வேகமாக குத்தினான்.

ஆர்ஜே என்று சற்று குரலை உயர்த்தி அதட்டலாக கூப்பிட்டு” நாலு வருஷத்துக்கு முன்னாடி இறந்து போன ஒரு பொண்ணை தேடி எவனாவது வருவானா சொல்லு? அந்த பொண்ணு இறந்ததில் எந்த சந்தேகமும் எங்கேயும் வரல. அப்படி இருக்கும் போது அந்த பொண்ணை தேடி தான் வந்தான்னு எப்படி சொல்ற?”

அவன் சொன்னதை கேட்டு கிஷோரின் பிடியில் இருந்தவன்” அந்த ஹரி எப்படி கண்டுபிடிச்சான் உத்ராவை பத்தி?” என்றான் அவன் கண்களை பார்த்து.

அவனது விழிகளை சந்திக்க முடியாமல் தாழ்த்திக் கொண்டு..” அது வேற விஷயம். ஆனா இங்கே வந்தவன் கண்டிப்பா பெரியவரோட ஆட்களா தான் இருக்கணும். நாம சரக்கை எங்கே வச்சு இருக்கோம் என்று தெரிஞ்சுக்க வந்து இருப்பாங்க அதை உறுதியா என்னால சொல்ல முடியும்.”

கிஷோர் சொன்னதை கேட்டு அதுவரை இருந்த கோபம் சற்று குறைந்து தன்னிலைக்கு வந்தான் ஆர்ஜே. “ம்ம்..ஆமாம் நீ சொல்றது சரி தான். ஆனா வீட்டுக்குள்ள ஆளு வந்து போகிற அளவுக்கு இருக்கு இங்கே காவல்” என்றான் கேள்விக் குறியாக.

“ இல்ல ஆர்ஜே என்னை மீறியும் தவறு நடந்திடுச்சு. இனி இப்படி நடக்காம பார்த்துகிறேன்.”

அவன் தோள்களை தட்டிக் கொடுத்து…” உன்னை எனக்கு தெரியாதா? ஆனா எனக்கு இந்த சரக்கு எல்லாம் முக்கியமில்லை.”

“அதெல்லாம் சரி ஆனா இன்னும் எத்தனை வருஷத்துக்கு அவ சம்மதத்துக்காக காத்திருக்க போற? அப்படி என்ன டா காதல்? ஏற்கனவே நாலு வருஷமாச்சு வேலையை முடிச்சமா தூக்கி போட்டமான்னு போகாம கெஞ்சி கிட்டு இருக்க.”

அவன் சொல்லி முடிக்கும் முன்னே கிஷோரின் குரல்வளையை பிடித்திருந்தான் ஆர்ஜே”என்ன சொன்ன..என்ன சொன்ன……தூக்கி போடணுமா? அவ என்ன குப்பையா? தேவதை டா…….தேவதை…அந்த கண்களில் தெரிகிற அன்பை பார்த்து இருக்கியா? எனக்கு தேவை அவ உடம்பு இல்ல.அவ மனசு .அந்த மனசுல எனக்கு ஒரு இடம் . அவ எனக்காக அழனும் எனக்காக சிரிக்கணும். அவ உணர்வுகள் என்னை பத்தி மட்டுமே இருக்கணும். அதுக்காக எத்தனை வருஷம் வேணும்னாலும் காத்திருப்பேன். இன்னொரு முறை அவளை பத்தி இந்த மாதிரி கேவலமா பேசினே நண்பன்னு பார்க்க

மாட்டேன் கழுத்தறுத்து போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்” என்று உறுமினான்.

அதை சிறிதும் லட்சியம் செய்யாமல் அவன் கைகளை மெதுவாக தன் கழுத்தில் இருந்து எடுத்து விட்டு” சரி அதை விடு..நாளைக்கு நீ வரலையா? அவங்க கிட்ட சரக்கை கைமாத்த போறோமா என்ன?”

அவன் தன்னுடைய கோபத்தை சிறிதும் லட்சியம் செய்யவில்லை என்பதை கண்டு சற்று நிதானத்திற்கு வந்து” எப்படி கிஷோர் ஊரே என்னை பார்த்து ஆர்ஜே ஆர்ஜேன்னு பயப்படுறப்ப உனக்கு பயமே இல்லையா?”

ஆர்ஜேவை திரும்பி பார்த்த கிஷோர் “ எப்படி எப்படி உன்னை பார்த்து நான் பயப்படனுமா? ஹாஹா நல்ல ஜோக் தான் போ. இந்த ஆர்ஜே உருவாக காரணமே நான் தான் மறந்து போச்சா?”

கிஷோர் சொன்னதை கேட்டதும் தலையை ஆட்டி “உண்மை தான்.அதெப்படி மறக்க முடியும். ஆனா நீ சொல்றதை எல்லாத்தையும் நான் கேட்பேன் உத்ரா விஷயத்துல மட்டும் அதை என் கிட்ட எதிர்பார்க்காதே என்றான் கண்களில் வெறியுடன்.

“சரி டென்ஷன் ஆகாதே. எனக்கு இந்த சரக்கு நம்ம கையை விட்டு போறதில் இஷ்டமில்லை. நீ என்ன நினைக்கிற?. நாளைக்கு ராத்திரிகுள்ள அந்த ஜெர்மன் கப்பல் கிளம்பிடும். நான் அவங்க கிட்ட பேசிட்டேன் நாம கேட்கிற தொகையை தர அவங்க தயாரா இருக்காங்க.”

“ஆனா இதுல பெரிய பிரச்சனை வரும் கிஷோர். இப்போவே வெளில கொண்டு வரது கஷ்டமான காரியம். அதிலேயும் அந்த கப்பலுக்கு கொண்டு போறது ரொம்பவே ரிஸ்க். என்னால யோசிக்க முடியல.”

“ நீ சம்மதம் சொல்லு மத்ததை நான் பார்த்துக்கிறேன். “

“சரி ஆனா நாளைக்கு நம்ம குடௌன்ல பாதுக்காப்பு சரியா இருக்கனும். அதுல எதுவும் தவறும் நடக்க கூடாது. அந்த கார்த்திகேயன்

<பகுதி – 19

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...