வரலாற்றில் இன்று – 25.10.2020 பிக்காசோ
20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியரான பாப்லோ பிக்காசோ 1881ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஸ்பெயினின் மலகாவில் பிறந்தார்.
ஜார்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.
தனது ஏழு வயதிலேயே ஒரு தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை வரைந்த இவர், தன் பதினான்கு வயது நிறைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் நன்கு கற்றுக்கொண்டார்.
தன் வாழ்நாளில் பிக்காசோ 1885 சிற்பங்கள், 1228 ஓவியங்கள், 2880 பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள், 12000 சாதாரண சித்திரங்கள் மற்றும் 12000 திரைச்சீலை வேலைப்பாடுகள் உட்பட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை உருவாக்கியுள்ளார். அமைதிச்சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப்படுத்தியவர் பிக்காசோ தான். வரலாற்றில் தனக்கு என்று ஒரு நீங்காத தனி இடத்தைப் பிடித்துக்கொண்ட பிகாசோ 1973ஆம் ஆண்டு மறைந்தார்.
எவரிஸ்ட் கலோயிஸ்
தன்னுடைய 19வது வயதிலேயே கணிதத்தில் ஒரு மாபெரும் சாதனையைச் செய்த எவரிஸ்ட் கலோயிஸ் 1811ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.
பல்லுறுப்பு சமன்பாடு சம்பந்தமான துல்லியமான இயற்கணித நிபந்தனைகளை 19வது நூற்றாண்டின் முதல் பாதியிலேயே கண்டுபிடித்தார்.
அக்காலத்து கணிதக் கண்டுபிடிப்புகளின் முதல்வனாக திகழும் எவரிஸ்ட் கலோயிஸ் தனது 1832ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1955ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட சடாகோ சசாகி மறைந்தார்.
2001ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.