இன்றைய தினப்பலன்கள் (25.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (25.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

புதிய இலட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். இஷ்ட தெய்வத்தை வணங்குவீர்கள். பிறருக்கு உதவும்போது கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : இழுபறிகள் நீங்கும்.

ரிஷபம் :

புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். இணையம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களை பற்றிய நம்பிக்கை மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : இலாபம் அதிகரிக்கும்.
ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : நம்பிக்கை மேலோங்கும்.

மிதுனம் :

உத்தியோகஸ்தர்கள் பணியில் மேன்மையான செயல்களை செய்து முடிப்பீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் கவனமாக பேசவும். தொழில் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

கடகம் :

செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வேளாண்மை சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தொழில் தொடர்பான புதிய முடிவுகள் எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.

சிம்மம் :

உறவினர்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பணி தொடர்பான வெளியூர் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். ஆன்மிக எண்ணங்களில் மனம் ஈடுபடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் இலாபம் அதிகரிக்கும். மனை தொடர்பான விஷயங்களில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரம் : சாதகமான நாள்.

கன்னி :

இளைய சகோதரர்களின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் பயிற்சியின்போது கவனத்துடன் ஈடுபடவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : சுபவிரயங்கள் உண்டாகும்.
அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

துலாம் :

பூர்வீக சொத்துக்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செய்தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்துவதால் தனித்திறமைகள் புலப்படும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்களின் ஆதரவின் மூலம் தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : திறமைகள் வெளிப்படும்.
விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிகம் :

உயர் அதிகாரிகளிடம் மதிப்புகள் உயரும். பெரியோர்களின் உபதேசங்களால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுக்கு இடையேயான மனக்கசப்புகள் குறையும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பாராத சுபச்செய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : மதிப்புகள் உயரும்.
அனுஷம் : தெளிவு கிடைக்கும்.
கேட்டை : மனக்கசப்புகள் குறையும்.

தனுசு :

மனதில் எண்ணிய செயல்திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பூமியை விருத்தி செய்வதற்கான சாதகமான சூழல் அமையும். கால்நடைகளின் மூலம் இலாபம் மேம்படும். குறுகிய தூர பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : முயற்சிகள் மேம்படும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மகரம் :

கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். கற்ற கலைகளால் எதிர்பார்க்காத இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : இலாபம் உண்டாகும்.
திருவோணம் : எண்ணங்கள் மேலோங்கும்.
அவிட்டம் : ஆசிகள் கிடைக்கும்.

கும்பம் :

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். அரசாங்க பணியில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கும். சபை தலைவராக இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : இடர்பாடுகள் நீங்கும்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

மீனம் :

கௌரவ பதவிகளால் செல்வாக்கு அதிகரிக்கும். கல்லூரி படிப்பிற்கான சுபவிரயங்கள் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி சம்பந்தமான எண்ணங்கள் தோன்றும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : சுபவிரயங்கள் உண்டாகும்.
ரேவதி : உறவு மேம்படும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...