வரலாற்றில் இன்று – 18.10.2020 தாமஸ் ஆல்வா எடிசன்

இன்று இவரின் நினைவு தினம்..!

உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளை கண்டறிந்த தாமஸ் ஆல்வா எடிசன் 1847ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.

இவர் ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கு மேல் காப்புரிமை பெற்றுள்ளார். மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராப் சிஸ்டம், எலக்ட்ரிக் ஃபேன், ரேடியோ வால்வ், மெகா போன், மோட்டார், தொலைபேசி ஸ்பீக்கர், ஒலிப்பெருக்கி, கிராமஃபோன், மூவி கேமரா, ராணுவ சாதனங்கள் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால்,’நேற்றைய கண்டுபிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்பார்.

இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று முறையாக எதையும் கற்காமல், உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கையில் சாதனை படைத்த எடிசன் 1931ஆம் ஆண்டு மறைந்தார்.

இவரது உடலை அடக்கம் செய்யும்போது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் உத்தரவின்படி, அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன.

சார்லஸ் பாபேஜ் இன்று இவரின் நினைவு தினம்..!!

கணினியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் 1791ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

1810ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் இணைந்த இவர், கணிதத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார். கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை இவர் உருவாக்கினார். தொடக்ககால கணிப்பிட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் (Analytical Engine) மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை (Difference engine)) வடிவமைத்தவர், சார்லஸ் பாபேஜ். இவர் நியம தொடருந்துப் பாதை (railway track) அளவுக்கருவி, சீரான அஞ்சல் கட்டண முறை, கலங்கரை விளக்கு ஒளி, கீறிவிச் ரேகைக் குறியீடு, சூரிய ஒளி கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி என பல கருவிகளை கண்டுபிடித்துள்ளார். இவர் 1871ஆம் ஆண்டு மறைந்தார்.

உலக வேசெக்டொமி தினம்

உலக வேசெக்டொமி (vasectomy) தினம் அக்டோபர் 18ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் அளவான குடும்பங்களை ஏற்படுத்த ஆண்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம் என்கிற விழிப்புணர்வை கொண்டுவர இத்தினம் 2013ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

முக்கிய நிகழ்வுகள்

1954ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!