வரலாற்றில் இன்று – 15.10.20200 ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

 வரலாற்றில் இன்று – 15.10.20200 ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

இந்திய ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் பிறந்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த இவர் 1980ஆம் ஆண்டு SLV-III ராக்கெட்டை பயன்படுத்தி ரோகினி-ஐ என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார்.

இவர் பத்ம பூஷண்(1981), பத்ம விபூஷண்(1990), பாரத ரத்னா (1997) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் ஆகிய புத்தகங்கள் புகழ் பெற்றவைகள்.

இவர் 1999ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். 2002ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக 2007ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வரை பணியாற்றினார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் 2015ஆம் ஆண்டு மறைந்தார்.

உலக கைகழுவும் தினம்

உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி அன்று உலக கைகழுவும் நாளாக அறிவித்துள்ளது. இந்நாளில் கைகழுவும் முறை பற்றியும், அதனால் உண்டாகும் நன்மை பற்றியும் உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக வெண்மை பிரம்பு பாதுகாப்பு தினம்

வெண்மைத்தடி பயன்படுத்தும் முறை என்பது 1931ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது. உலகெங்கும் வாழும் இலட்சக்கணக்கான பார்வையற்ற மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் இத்தினம் அக்டோபர் 15ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்

வீட்டு வேலைகளை மட்டுமல்லாமல் விவசாயம், மீன் பிடித்தல், மேய்ச்சல் உள்ளிட்ட தொழில்களையும் கிராமப்புற பெண்கள் செய்கின்றனர். உலகளவில் பெண்களின் வேலைவாய்ப்பில் மூன்றாவது இடத்தில் விவசாயத்துறை உள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் 60 சதவீத பெண்கள் விவசாயப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இவர்களை அங்கீகரிக்கும் விதத்தில் 2008ஆம் ஆண்டுமுதல் அக்டோபர் 15ஆம் தேதி சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கிராமப்புற பெண்களுக்கு உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர இத்தினம் வலியுறுத்துகிறது.

முக்கிய நிகழ்வுகள்

1542ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ்பெற்ற அக்பர் இப்போதைய பாகிஸ்தானில் உள்ள ராஜபுதனக் கோட்டையில் பிறந்தார்.

1918ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி அனைத்து மக்களாலும் போற்றிக் கொண்டாடப்படும் ஆன்மீக மகான் ஷீரடி சாய் பாபா மறைந்தார்.

1932ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி டாடா விமான நிறுவனம் (தற்போதைய ஏர் இந்தியா) தனது முதலாவது விமான சேவையைத் துவக்கியது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...