வரலாற்றில் இன்று – 10.10.2020 உலக மனநல தினம்

 வரலாற்றில் இன்று – 10.10.2020 உலக மனநல தினம்

உலக மனநல மையம் (World mental health federation) சார்பில் 1992ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணத்திற்காகவே உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது.

ஜெர்ஹார்ட் எர்ல்

நவீன புறப்பரப்பு வேதியியல் களத்துக்காகவே அடித்தளமிட்ட ஜெர்ஹார்ட் எர்ல் 1936ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

இவர் வினையூக்கிகள் வழி இரும்பின் மீது, அமோனியாவை உற்பத்தி செய்யும் ஹாபர்-போஷ் (Haber Bosch) செய்முறையில் நிகழும் வேதியியல் வினைகளைக் கண்டறிந்தவர்.

திண்மங்களின் மேற்பரப்பில் நிகழும் வேதியியல் வினைகளைக் கண்டறிந்ததற்காக இவருக்கு 2007ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

முக்கிய நிகழ்வுகள்

2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தமிழக திரைப்பட நகைச்சுவை நடிகை மனோரமா மறைந்தார்.

1974ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தமிழறிஞர் மு.வரதராஜன் மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...