வரலாற்றில் இன்று – 09.10.2020 உலக அஞ்சல் தினம்
உலக தபால் ஒன்றியம் (Universal Postal Union) என்பது 1874ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் தபால் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது.
1969ஆம் ஆண்டு உலக தபால் ஒன்றியத்தின் மாநாடு டோக்கியாவில் நடைபெற்ற போது, அதில் உலக தபால் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் உலக அஞ்சல் தினத்தை அக்டோபர் 9ஆம் தேதி கொண்டாட வேண்டும் என மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
எம்.பக்தவத்சலம்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் 1897ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி பிறந்தார்.
விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிர்வாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தினார்.
இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தார்.
1960ஆம் ஆண்டு சோவியத் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த இவர், இன்னும் இரு ஐந்தாண்டு திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம் என்று அப்போதே நம்பிக்கையுடன் கூறினார்.
இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர் எம்.பக்தவத்சலம் தன்னுடைய 1987ஆம் ஆண்டு மறைந்தார்.
கோபபந்து தாஸ்
‘ஒடிசாவின் மாணிக்கம்’ (உத்கல மணி) என்று போற்றப்பட்ட கோபபந்து தாஸ் 1877ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி ஒடிசா மாநிலம் பூரி அருகே உள்ள சுவாண்டோ கிராமத்தில் பிறந்தார்.
‘நாட்டின் வளர்ச்சிக்கு கல்விதான் சிறந்த சாதனமாக அமையும். தேசத்தின் இளைஞர்கள் சுய சார்புடன், சுய சிந்தனை மிக்கவர்களாக, தியாகம் செய்ய முன்வருபவர்களாக, தேசத்தின் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும்’ என்பார்.
இவர் ‘குமாஸ்தாக்களை உருவாக்கும் ஆங்கிலக் கல்வியால் பயனில்லை. நாடு முன்னேற தொழிற்கல்வியே முக்கியம்’ என்று வலியுறுத்தினார்.
மனித குலத்தின் நல்வாழ்வுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த கோபபந்து தாஸ் 1928ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1987ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி இரத்த சோகை நோய்க்கு மருத்துவ சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவரான வில்லியம் பாரி மர்பி (William P.Murphy) மறைந்தார்.
1967ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி மனித குல விடுதலைக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடிய சே குவேரா மறைந்தார்.
1879ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி விளிம்பு விளைவை கண்டுபிடித்த மேக்ஸ் வான் லாவ் (Max Von Laue) பிறந்தார்.
1943ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி சீமன் விளைவை கண்டுபிடித்த பீட்டர் சீமன் (Pieter Zeeman) மறைந்தார்.