இனிய பிறந்தநாள் சுப்ரஜா ஸ்ரீதரன்
சுப்ரஜா என்கிற புனைப்பெயரை வைத்தவர் மறைந்த மூத்த பத்திரிகையாளர் சாவி.
கல்லூரியில் படித்து கொண்டே அவரின் சாவி வார இதழில் பணிபுரிந்த வேளையில் “கிரியேடிவாக எழுது” என்றார். அவரிடம் பணி புரிந்த போது மற்ற பத்திரிகைகளுக்கும் எழுத அனுமதித்தார்.
ஒரு சிறுகதையை எழுதி எனது உண்மை பெயரான ஸ்ரீதரன் என்கிற பெயரின் முன்னால் எனக்கு பிடித்த எம்.எஸ்.வி.அம்மாவின் சுப்ரபாத பிரியத்தில் சுப்ரஜா ஸ்ரீதரன் என்று எழுதி தர முதலில் அந்த பெயரில் வெளியிட்டவர் அடுத்த பிரசுரங்களில் சுப்ரஜா என்று சுருக்கி விட்டார்.
இது வரை தமிழின் அனைத்து மாத, வார இதழ்களில் சுப்ரஜா என்கிற புனைப்பெயரில் 1000 சிறுகதைகளுகும் (ஒரு பக்க கதைகளும் அடக்கம்) மேல் வெளி வந்துள்ளன.
50 நூல்கள் புத்தக வடிவில் வெளி வந்துள்ளன.
எளிய தமிழில் ஏ டூ இசட் தமிழ் ‘கம்பூயூட்டர்’ பத்தாயிரம் படிகள் விற்று சாதனை புரிந்துள்ளது.
திணமனி கதிரில் வெளியான அதி நவீன நாவல் ‘மவுனிகா’ பரபரப்புடன் பேசப் பட்டு பிரிசித்திப் பெற்ற தொடர் ஆனது. வெர்ச்சுவல் ரியாலிட்டி வைத்து தமிழில் எழுதப் பட்ட முதல் நாவல்.
இது வெளியான அதே நேரத்தில் ஆனந்த விகடன் இதழில் ‘மௌனிகா’ என்கிற தொடர் எழுதிய சுஜாதா, தொலைப் பேசியில் அழைத்து ‘இவ்வளவு பெரிய பத்திரிக்கையில வர தொடரை காணாம அடிச்சிட்டே’ என்று சொல்லி தன் பெருந்தன்மையை நிலை நிறுத்தி’ கொண்டார்.
‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்திற்கு வசனம் எழுதியது ஒரு சினிமா அனுபவம்.
பிறந்த தேதி 7-9-1959.
இயற் பெயர் : ஸ்ரீதரன்
பெற்றோர் : டி.ஏ.ஆராவமுதன், ஆர்.ஏ.பட்டம்மாள்
பிறந்த ஊர் : மதுரை
பள்ளி படிப்பு : நெய்வேலி, கும்பகோணம், சென்னை
கல்லூரி படிப்பு : இளங்கலை தத்துவம் வருடம் : 1981
கல்லூரி : ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி சென்னை
முதல் எழுத்து : அணில் சிறுவர் இதழ்
இன்று பிறந்தநாள் காணும் சுப்ரஜா ஸ்ரீதரன் அவர்களுக்கு எல்லா வளம் உடல் நலனும் கிடைக்க வாழ்த்துக்கிறது மின் கைத்தடி.காம் மின்னிதழ்