வரலாற்றில் இன்று – 31.08.2020 மரியா மாண்ட்டிசோரி

 வரலாற்றில் இன்று – 31.08.2020 மரியா மாண்ட்டிசோரி

இனிமை, எளிமை நிறைந்த புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்திய இத்தாலி மருத்துவரும், கல்வியாளருமான மரியா மாண்ட்டிசோரி 1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.

நோட்டுப் புத்தகங்களுக்கு பதிலாக பொம்மை, வண்ண அட்டை, ஒலி எழுப்பும் கருவிகள், ஓவியம், வண்ணத்தாள்கள், புட்டிகள் போன்றவற்றை கொண்டு, கற்றலை சுவாரஸ்யமாக மாற்றினார். இதன் மூலம் குழந்தைகள் பாடங்களை எளிதாகக் கற்றனர். இந்த முறை உலகெங்கும் பரவியது. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் இவருக்கு அழைப்பு விடுத்தார்கள். அங்கெல்லாம் சென்று இந்த புதிய கல்வி முறை குறித்து விளக்க உரை நிகழ்த்தினார். உலகம் முழுவதும் சிறுவர் கல்வி முறையில் ஒரு புதிய உளவியல் புரட்சி மலர்ந்தது.

தனது புதிய கல்வி முறையின் அடிப்படையில் ரோம் நகரில் 1907ஆம் ஆண்டு முதல் வகுப்பைத் தொடங்கினார். இது மாண்டிசோரி கல்வி முறை என பிரபலமடைந்தது. பல்வேறு இடங்களில் இவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டது. புதுமைக் கல்வித் திட்டத்திற்கான கோட்பாடுகளை 1897ஆம் ஆண்டு உருவாக்கினார்.

இவர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கற்கும் திறனையும் மேம்படுத்தினார். 1939ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த இவர் 8 ஆண்டுகள் தங்கியிருந்து ஏராளமான ஆசிரியர்களுக்கு மாண்டிசோரி முறையில் பயிற்சி அளித்தார். பல மாநாடுகளில் பங்கேற்றார்.

இனிமை, எளிமை, உற்சாகம் நிறைந்த கல்வி முறையை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்திய மரியா மாண்ட்டிசோரி 1952ஆம் ஆண்டு மறைந்தார்.

ஜஹாங்கீர்

முகலாயப் பேரரசின் மன்னர் ஜஹாங்கீர் 1569ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி பிறந்தார். ஜஹாங்கீர் அவரது ஆட்சிகாலத்தை அவர் கண்ட ‘நீதியின்’ முக்கியத்துவத்துடன் தொடங்குவதற்கு முடிவெடுத்தார்.

அவரது தந்தையை போன்றே வெற்றிகளைப் பெறுவதன் மூலம் ஜஹாங்கீரும் முகலாயர்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரதேசங்களை அதிகரித்தார். மீவார் ஆட்சியுடன் இருந்த நூற்றாண்டு கால பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்ததிற்கு ஜஹாங்கீரே பொறுப்பாவார்.

அக்பர் வெற்றிகொள்ளத் தவறிய கங்கிரா கோட்டையை கைப்பற்றுவதற்கு ஜஹாங்கீர் எண்ணியிருந்தார். இதன் விளைவாக கோட்டை முற்றுகையிடப்பட்டது. 1620ஆம் ஆண்டு கோட்டை ஆட்சிக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

1627ஆம் ஆண்டு ஜஹாங்கிர் காஷ்மீரில் இருந்து வரும் வழியில் இறந்தார். ஜஹாங்கிரின் அழகுவாய்ந்த சமாதி லாகூரின் ஷாதரா நிகழ்விடத்தில் அமைந்துள்ளது.

முக்கிய நிகழ்வுகள்

1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி மலேசியா சுதந்திர தினம்.

1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வேல்ஸ் இளவரசி டயானா மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...