ஜம்மு காஷ்மீர்…4ஜி நெட்வொர்க்… உச்ச நீதிமன்றத்தில்…மத்திய அரசு பதில் டெல்லி:

 ஜம்மு காஷ்மீரின் இரண்டு மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் 4ஜி நெட்வொர்க் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து செயல்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால் அறிக்கை மூலமாக அளித்து இருக்கும் விளக்கத்தில், ”ஜம்முவில் ஒரு மாவட்டத்திலும், காஷ்மீரின் ஒரு மாவட்டத்திலும், சோதனையாக 4ஜி நெட்வொர்க் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாதுகாப்பான பகுதிகளில் இந்த நெட்வொர்க்கை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 பகுதியில் இந்த சோதனை மேற்கொள்ளப்படும். எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி அல்லது சர்வதேச எல்லைக் கோட்டில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட மாட்டாது” என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், ”ஜம்மு காஷ்மீரில் இருக்கும் உள்ளூர் ஏஜென்சிகளிடம் இதுகுறித்து ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆலோசிக்கப்பட்டது. எல்லை பாதுகாப்பை கருத்தில் வைத்து பல்வேறு நடவடிக்கைகளும், ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இங்கு இன்டர்நெட் தடை செய்யப்பட்டு இருந்தது எந்த வகையிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள், கல்வி, வர்த்தகம் ஆகியவற்றை பாதிக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போதைய பாதுகாப்பு சூழலைக் கருதி, மொபைல் போன்களுக்கான அதிவேக இணைய இணைப்பை கொடுக்கும் நிலையில் அரசு இல்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த 10 மாநிலங்களும் கொரோனாவை கட்டுப்படுத்தினால்.. மொத்த நாடும் மீண்டு விடும்.. பிரதமர் மோடி பேச்சு இதற்கு பதிலளித்து இருக்கும் உச்ச நீதிமன்றம், ”தொடர்ந்து ஜம்மு காஷ்மீரை கண்காணித்து வரவேண்டும். நிலைமை முன்னேற்றம் அடையும் என்று நம்புகிறோம். அவமரியாதை வழக்கை நிலுவையில் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருதவில்லை” என்று தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் இன்டர்நெட் மீட்பது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. ஜம்மு காஷ்மீர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. அப்போது, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இன்டர்நெட்டை தடை செய்து வைத்து இருந்தது. தற்போது சிறிது சிறிதாக இணைப்பு கொடுத்து வருகிறது.


Special Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...