வரலாற்றில் இன்று – 02.07.2020 சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம்

விளையாட்டின் மேம்பாட்டிற்கான பத்திரிக்கையாளர்களின் சேவையை அடையாளப்படுத்திக் காட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 02ஆம் தேதி சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த ...

மயில்சாமி அண்ணாதுரை

தமிழகத்தைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரை 1958ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி கோவை மாவட்டத்தில் கோதவாடி என்ற கிராமத்தில் பிறந்தார்.

தனது பொறியியல் படிப்பை முடித்தவுடன் இஸ்ரோ நிறுவனத்தில் இளநிலை ஆய்வாளராக 1982ஆம் ஆண்டு சேர்ந்தார். இவரது திறமையால் செயற்கைக்கோள் முடுக்கியை உருவாக்கும் அணியின் தலைவராக 1985ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

பிறகு செயற்கைக்கோள் விண்கலன் இயக்க மேலாளர் (1988), இன்சாட் துணை இயக்குநர் (1994), மேலும் இன்சாட்-2சி, இன்சாட்-2டி, இன்சாட்-3பி, ஜிசாட்-1 ஆகியவற்றின் திட்ட இயக்குநராகவும் பணியாற்றினார்.

2004ஆம் ஆண்டு சந்திரயான் திட்ட இயக்குநரானார். அதுமட்டுமல்லாது தொலையுணர்வு செயற்கைக்கோள், மங்கள்யான் போன்றவற்றின் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் அஸ்ட் ரோசாட், ஆதித்யா-டு1 செயற்கைக்கோள்களை வழிநடத்தியுள்ளார். இவர் பத்மஸ்ரீ, சந்திரயான் திட்டத்திற்காக 3 சர்வதேச விருதுகள், 4 விண்வெளி விருதுகள், பல்வேறு அமைப்புகளின் கௌரவ விருதுகளையும் பெற்றுள்ளார்.

முக்கிய நிகழ்வுகள்

1972ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது.

1862ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி படிகங்களின் அமைப்பைக் கண்டுபிடித்தவரும், எக்ஸ் கதிர் நிறமாலைமானியை உருவாக்கியவருமான சர் வில்லியம் ஹென்றி பிராக்(Sir William Henry Bragg) இங்கிலாந்தில் பிறந்தார்.

1877ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி உலக புகழ்பெற்ற கவிஞரும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான ஹெர்மன் ஹெசே(Hermann Hesse) ஜெர்மனியில் பிறந்தார்.

2013ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி கணினிச் சுட்டியைக்(Computer mouse) கண்டுபிடித்த டக்லஸ் எங்கல்பர்ட் மறைந்தார்.

1923ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற போலந்து கவிஞர் விஸ்லாவா சிம்பார்ஸ்கா போலந்தில் பிறந்தார்.

1962ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி முதலாவது வால் மார்ட் (Walmart) அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!