இன்றைய தினப்பலன்கள் (03.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (03.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

திட்டமிட்ட காரியங்களின் மூலம் அலைச்சலும், பதற்றமும் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணி சம்பந்தமான செயல்பாடுகளில் சற்று நிதானத்துடன் செயல்படுவது அவசியமாகும். பழைய பிரச்சனைகளால் மனவருத்தங்கள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பரணி : நிதானத்துடன் செயல்படவும்.
கிருத்திகை : மனவருத்தங்கள் நேரிடலாம்.

ரிஷபம் :

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும்.

மிதுனம் :

உத்தியோகம் சம்பந்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சுகபோகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு தேவையற்ற அலைச்சலும், பதற்றமும் நேரிடலாம். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேலோங்கும்.
திருவாதிரை : பதற்றமான நாள்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.

கடகம் :

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இளைய சகோதரர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். விவசாய பணிகளில் இருப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். பழைய நினைவுகள் மற்றும் சிந்தனைகளால் உடல் சோர்வு தோன்றி மறையும். நவீன தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : ஆதரவான நாள்.
பூசம் : இலாபம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : ஆர்வம் உண்டாகும்.

சிம்மம் :

வர்த்தகம் தொடர்பான பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத தனவரவால் சேமிப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : சுபிட்சம் உண்டாகும்.

கன்னி :

சுயதொழில் சம்பந்தமான எண்ணங்களும், முயற்சிகளும் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்கு பின் சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வு அடைவதற்கான முயற்சிகள் கைகூடும். சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

துலாம் :

ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்களில் ஆர்வம் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய நபர்களிடம் உரையாடும் போது கவனத்துடன் பேசவும். உணவு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மாமன்வழி உறவினர்களால் சாதகமான சூழல் உண்டாகும். பொருள் ஈட்டுவதற்கான புதிய முயற்சிகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : ஆர்வம் உண்டாகும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : முயற்சிகள் மேலோங்கும்.

விருச்சிகம் :

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இணையம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். செய்யும் செயல்பாடுகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அனுஷம் : முன்னேற்றமான நாள்.
கேட்டை : கீர்த்தி உண்டாகும்.

தனுசு :

பயணம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் நேரிடலாம். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். வாதம் புரிதலில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். உலக வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளின் மூலம் வாழ்க்கையில் புதுவிதமான மாற்றங்களை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
மூலம் : ஆர்வம் உண்டாகும்.
பூராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திராடம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.

மகரம் :

சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு சாதகமாக அமையும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். பொருட்களை சேர்ப்பதற்கான செயல்முறைகளை மேற்கொள்வீர்கள். செய்யும் செயல்களில் வித்தியாசமான அணுகுமுறைகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.
திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அவிட்டம் : பாராட்டப்படுவீர்கள்.

கும்பம் :

புதிய செயல்திட்டங்களை அமைத்து அதை நடைமுறைப்படுத்துவீர்கள். சுயதொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மனதில் இறை நம்பிக்கை அதிகரிக்கும். முன்னோர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். உயர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மற்றவரிடம் எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.
சதயம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
பூரட்டாதி : உதவிகள் சாதகமாகும்.

மீனம் :

தந்தைவழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகைகள் உண்டாகும். மேன்மையுடைய செயல்பாடுகளால் அனைவரிடத்திலும் உங்களின் மீதான நம்பிக்கையும், பொறுப்பும் அதிகரிக்கும். நிர்வாகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : ஆதரவான நாள்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...