கவிதைக்கு ஒரு கவிதை – காஞ்சி. மீனாசுந்தர்
கண்ணே கண்மணியே
கண்ணிரண்டும் மின்னல்
மின்னும் கண்ணிரண்டில்
எள்ளளவும் கள்ளமில்லை
கள்ளமிலா உன் சிரிப்பில்
கவலையெலாம் மறந்துவிடும்
மறந்துபோன பால்யகாலம்
மறுபடியும் கையசைக்கும்
கையசைக்கும் வேளையிலே
கண்ணே கண்மணியே
உனைப்போல நானுமே
உருமாறிப் போய்விடுவேன்
புத்தம் புது மலராய் நீ
பூத்துச் சிரிக்கையிலே
பூத்த மலரெல்லாம்
பொசுக்கென்று வாடிவிடும்
வாடிவிட்ட பூக்களை நீ
வருடிவிட்டால் போதுமவை
மறுபடியும் மலர்ந்துன்
முகம் பார்த்து மோட்சம் பெறும்.
– காஞ்சி. மீனாசுந்தர்