தலைமுறை கடிதங்கள் – 2 – சிறுகதை | விஜி
தலைமுறை கடிதம் 3
அன்புள்ள மன்னவனே ஆசையில் ஓர் கடிதம் நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் முடிஞ்சு பார்த்த முதல் படம் உங்களுக்கு நினைவு இருக்கான்னு தெரியல எங்க அப்பா பேங்க்ல வேலை பார்த்ததால அவரோட வேலை பார்த்த உங்க அப்பாகிட்ட பேசி என்னை தள்ளிட்டார்
எனக்கு இந்த மும்பை வந்த புதுசுல பிடித்திருந்தாலும் இந்த இரைச்சல் நாளாக ஆக எனக்கு பிடிக்கல காவேரி கரையும் மணலும் தென்னமர காத்தும் எப்போ டா நம்ம ஊருக்கு போவோம்னு இருக்கு….
நம்ம பொண்ணு உஷாக்கு வேற வயசு ஏற ஏற எனக்கென்னமோ இந்த மும்பையில இவள வளக்கறத்துக்கு பயமாயிருக்கு நீங்க அத்தையையும் மாமாவையும் பார்த்துக்க வேற யார் இருக்கா நம்மள விட்டான் னு சொல்லிட்டு ஊரு ஊரா மாற்றலாகி போறேள்… மாசத்துல வர ஒரு சனி ஞாயிறு காக உங்கள் வரவை எண்ணி காதலோடு காத்திருக்கும் …
உங்கள் கமலி…
தலைமுறை கடிதம் 4.
ஹாய் டியர் ஐ அம் உஷா ஹவ் ஆர் யூ டியர் எனக்கு டைப்பிங் வரலைன்னு உங்ககிட்ட எங்க அப்பா அனுப்ப நீங்க எனக்கு டைப் மட்டுமா சொல்லிக் கொடுத்தீங்க காதலையும் சேர்த்து தான் நான் கலெக்டர் ஆபீஸ்ல ஸ்டெனோ வா இருந்து என்ன பண்ண போறேன் உங்க ஒருத்தர் சம்பளம் போதுமே…… உங்களையும் குழந்தையையும் அத்தைகிட்ட விட்டுட்டு இங்க விமன்ஸ் ஹாஸ்டல்ல ஒரு அனாதை மாதிரி இருக்கேன் ஞாயிற்றுக்கிழமை எப்படா வரும்னு இருக்கு நம்ம பொண்ணு லியா வளர்ந்துட்டே இருக்கா…
அவளுக்காக வாவது நான் வேலைய விடத்தான் போறேன் ஐ லவ் யூ டியர் வெயிட்டிங் ஃபார் யுவர் ரிப்ளை
With love Usha…
தலைமுறை கடிதம் 5
டேய் ஜோ
எங்கடா இருக்க ரெண்டு பேரும் ஒரு ஐடி கம்பெனியில் லவ் பண்ணிட்டு இருந்த போது ஜாலியா இருந்துச்சு இப்போ நீ மட்டும் US போயி வெள்ளைக்காரியை சைட் அடிச்சிட்டு திரியற நான் மட்டும் ஜூலிய வளக்க இங்க தனியா கஷ்டப்படுறேன்…
பிரஜனுக்கு. போன் பண்ணேன் நீ
எவளோ Zee ங்கற
பொண்ணோட டேட்டுக்கு போறியாம் வேணாண்டா ஒழுங்கு மரியாதையா
வந்திடு ஜூலியை தேடி தினம் பாய் ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கு வராங்க டா நானும் அம்மாவும் திட்டினா திஸ் இஸ் யுவர் லிமிட் டோன்ட் எண்ட்டர்ஃபியர் மை பிரைவசி ங்கறா….
அவளோட future நெனச்சா பயமா இருக்குடா நீ வந்து பொறுப்பை ஏத்துக்கோ இல்லாட்டி நானும் உன் ஃப்ரெண்ட் ரவியோட செட்டில் ஆகலாம் என்று பார்க்கிறேன் …..😊😊😊
Take care
Bye da…
End……..
இதுக்கு அடுத்த தலைமுறை எப்படி
இருக்கும் ங்கற என்னோட கற்பனையை எழுதினா….யாருமே தாங்க மாட்டோம்….