தலைமுறை கடிதங்கள் – 1 – சிறுகதை | விஜி

 தலைமுறை கடிதங்கள் – 1 – சிறுகதை | விஜி

என்னுடைய வித்தியாசமான 5 தலைமுறை கடிதங்களை எழுதியுள்ளேன்…

தலைமுறை கடிதம்.1.

என் பிராண நாதருக்கு பாதம் தொட்டு அனந்தகோடி நமஸ்காரங்கள் தாங்கள் வியாபார பயணம் எந்த நிலையில் உள்ளது தாங்கள் நமது ஜாகை வந்து சேர இன்னும் 20 நாட்களாகும் என்று ் சேச்சு சொன்னான் இந்து பங்கஜம் உட்கார்ந்து விடுவான்னு.. உங்க அம்மா பொழுது விடிஞ்சா சின்னா அவகிட்ட ஏதாவது அச்சுபிச்சுனு கேட்டுண்டிருக்கா..

பக்கத்தாத்துல கல்யாணி மகபத்து வயசுல வயசுக்கு வந்துட்டா உன் பொண்ணுக்கு பத்து வயசு முடிஞ்சு ரெண்டு மாசம் ஆகப்போகிறது கானா குறைக்கு எருமை மாடு மாதிரி வளர்ந்து வேற வச்சிருக்கா எப்போ மாப்பிள்ளை பார்க்கிறது

ஆம்படையான் இப்படி ஊர் சுத்துறது செத்த நிறுத்த சொல்றியானு தேகிண்டு இருக்கா ஒரு டிரங்கால் போட்டு இப்படி பேசுறத நிறுத்தச் சொல்றேளாஇல்ல சேச்சுவ துணைக்கு அழைச்சிண்டு நான் கும்பகோணத்துல எங்க அம்மாவுக்கு போயிடுவேன் சொல்லிட்டேன் தலைக்கு எண்ண வச்சு குளிங்கோ் எப்போ வருவேள்னு வாசலையும் பார்த்துண்டு பல்லி என்ன சொல்றதுனு கேட்டுட்டே இருக்கேன்.

இப்படிக்கு
உங்கள் அன்பு
சகதர்மிணி

தலைமுறை கடிதம் – 2

என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு பங்கஜம் வணக்கத்துடன் எழுதிக்கொள்வது இங்கு அனைவரும் ஷேமம் என்ன எப்போ அம்மா ஆத்துலே இருந்து அழைச்சுக்க போறேள் கமலிக்கு ஏழு வயது ஆகும்போது மும்பைக்கு மாத்திட்டா ன்னு சொன்னேள் சீக்கிரமா மதராஸுக்கு மாற்றலாகி வருவேள்னு நானும் காத்தண்டு இருக்கேன்.

கமலிக்கு பத்து வயசு ஆகப்போறது அவ ஒக்காந்துடுவாளோன்னு அம்மா பயந்துண்டே இருக்கா மும்பை உங்களுக்கு பிடிச்சு போனா போல எனக்கும் பிடிச்சிருந்தா ஒண்ணா இருந்திருக்கலாம்.

சரி சரி வேளாவேளைக்கு சாப்பிடுங்கோ எங்க அம்மா மாப்பிள்ளை பேங்க்ல வேலைன்னு பெருமையா சொல்லிண்டு இருக்கா ஆனா நம்ப பிரிஞ்சிருக்கோம்னு விசனம் கொஞ்சம் கூட இல்லண்ணா

கண்ணீருடன்
உங்கள் பங்கஜம்….

2 பாகம்

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published.