கீர்த்தி சுரேஷின் பெண்குயின் டீசர்

 கீர்த்தி சுரேஷின் பெண்குயின் டீசர்

பெண்குயின் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெண்குயின்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வரும் 19-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசரை த்ரிஷா, மஞ்சு வாரியர், சமந்தா, டாப்ஸி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். டீசரைத்தொடர்ந்து ட்ரெய்லர் வரும் 11-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. 1 நிமிடம் 19 விநாடிகள் நீளம் கொண்ட டீசரில் வசனமின்றி காட்சிகளே இடம் பெற்றுள்ளன.

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இத்திரைப்படத்தில் கர்பிணியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாகும் இரண்டாவது தமிழ்ப்படமாக பெண்குயின் அமைந்துள்ளது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...