ஹைலைட்ஸ்
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான தேதிகள் அறிவிப்பு | உமாகாந்தன்
பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரத்தில் ஜன.15 திருப்பரங்குன்றம் சாலையிலுள்ள திடலிலும், பாலமேட்டில் ஜன.16 மஞ்சமலை ஆறு திடலிலும் அலங்காநல்லூரில் ஜன.17 கோட்டைமுனி வாசல் மந்தை திடலிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்றும் மாடுபிடி வீரர்கள், காளைகள் பதிவு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரசில் இணைந்தார்..! | சதீஸ்
ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் நிறுவனத் தலைவரும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வந்தவர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா. இவர் தனது கட்சியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியுடன் இணைக்கப்போவதாக சமீப காலங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி ஒய்.எஸ்.ஷர்மிளா முக்கிய அறிவிப்பு ஒன்றை […]
அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு | சதீஸ்
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ரமேஷ், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலான் இயக்குனர் இளங்கோ மற்றும் சிஐடியு, ஏ ஐ டி யு சி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை […]
பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்களை விற்க தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..! | சதீஸ்
அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பதற்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கை திரும்பப் பெற்றதை எதிர்த்து தமிழ்நாடு பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க அளிக்கப்பட்ட விலக்கை ரத்து […]
பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..! | சதீஸ்
விமான நிலைய புதிய முனையம் உட்பட 19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருச்சி வந்தார். திருச்சி வந்த பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வரவேற்ற முதல்வர் ஸ்டாலின் அவருடன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். நேற்று முதல்வர் ஸ்டாலின் சந்தித்த நாளையில் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்ல உள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான கேலோ […]
முதல்வரின் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு | உமாகாந்தன்
பொங்கல் பரிசை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும். இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ. 238.92 செலவினம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை குறித்து முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | சதீஸ்
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த 323 புதிய அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்ககி வைக்கப்பட்டது. துவக்கத்தில் ஒரு கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், ரூ.1 கோடியே 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்போது மகளிர் உரிமைத் தொகை பெற்று […]
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்! | சதீஸ்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது வலைதளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். நேற்று திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி , கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்தார். விஜயகாந்த் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது: சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் கேப்டனாக […]
நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..! | சதீஸ்
நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நீட் தேர்வால் 22 மாணவர்கள் இதுவரையில் உயிரிழந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ’நீட் விலக்கு – நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் கையெழுத்துகளை, 50 நாட்களில் பெற வேண்டும் என்பது இதன் குறிக்கோளாக இருந்த நிலையில், திட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. […]
47 வது புத்தகக்கண்காட்சி சென்னையில் நாளை துவங்குகிறது..! | சதீஸ்
சென்னையில் நிகழாண்டுக்கான புத்தகக் காட்சி புதன்கிழமை (ஜன.3) தொடங்கி ஜன.21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் (பபாசி) சங்கம் சாா்பில் 47-ஆவது ‘சென்னை புத்தகக் காட்சி – 2024’ சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் தொடங்குகிறது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். ஜன.21 வரை மொத்தம் 19 நாள்கள் நடைபெறவுள்ள இந்த […]