வரலாற்றில் இன்று ( ஏப்ரல்-01)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மார்ச் 1 கிரிகோரியன் ஆண்டின் 60 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 61 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 305 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

286 – உரோமைப் பேரரசர் தியோக்கிளேத்தியான் தனது தளபதி மாக்சிமியனை துணைப் பேரரராக அறிவித்து, உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதிக்குப் பொறுப்பாக நியமித்தார்.
325 – இளவரசர் சின் செங்தி தனது 4-வது அகவையில், சீனாவின் கிழக்கு யின் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
1545 – பொலிவியாவில் பெருமளவு வெள்ளிப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பட்டோசி என்ற நகரம் அமைக்கப்பட்டது.
1625 – இடச்சு-போர்த்துக்கீசப் போர்: 52 எசுப்பானிய, போர்த்துக்கீசக் கப்பல்கள் பாகியா நகரை மீண்டும் கைப்பற்றப் போரில் இறங்கின.
1826 – சாமுவேல் மோரி உள் எரி பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
1867 – சிங்கப்பூர் பிரித்தானியக் குடியேற்ற நாடாகியது.
1873 – அட்லாண்டிக் என்ற பிரித்தானியாவின் நீராவிக் கப்பல் கனடாவில் நோவா ஸ்கோசியாவில் மூழ்கியதில் 547 உயிரிழந்தனர்.
1924 – இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இட்லருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஆனாலும் ஒன்பது மாதங்களில் அவர் விடுதலையானார்.
1933 – செருமனியில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்சிகள் யூத வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்குமாறு ஒரு-நாள் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.
1933 – ஆங்கிலேய துடுப்பாட்ட வீரர் வால்ட்டர் அமொண்ட் 336 நியூசிலாந்துக்கு எதிரான தேர்வுப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 336 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார்.
1935 – இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
1937 – ஏடன் பிரித்தானியாவின் குடியேற்ற நாடானது.
1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக இராணுவத் தலைவர் பிரான்சிஸ்கோ பிராங்கோ அறிவித்தார். கடைசி குடியரசுப் படையினர் சரணடைந்தனர்.
1941 – ஈராக்கில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அப்தல்லாவின் அரசு கலைக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கா தவறுதலாக சுவிட்சர்லாந்தின் சாபாசான் நகர் மீது குண்டுகளை வீசியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படையினர் சப்பானின் ஒக்கினாவா தீவுகளில் இறங்கித் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1946 – அலூசியன் தீவுகளில் நிகழ்ந்த 8.6 அளவு நிலநடுக்கம் காரணமாக அவாய் தீவுகளில் ஆழிப்பேரலை ஏற்பட்டு 157 பேர் உயிரிழந்தனர்.
1948 – பரோயே தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றது.
1949 – சீன உள்நாட்டுப் போர்: மூன்றாண்டுகள் சண்டையின் பின்னர், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி தேசியவாதக் கட்சியுடன் நடத்திய பேச்சுகள் தோல்வியில் முடிந்தன.
1955 – சைப்பிரசில் கிரேக்கத்துடன் இணையும் நோக்கோடு பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
1957 – இந்தியாவில் 1 நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1958 – இலங்கை இனக்கலவரம், 1958: கொழும்பு நகரில் தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் மீது தார் பூசப்பட்டன.[1]
1960 – டிரோசு-1 என்ற செயற்கைக்கோள் முதலாவது விண்வெளியில் இருந்து முதலாவது தொலைக்காட்சிப் படிமத்தை பூமிக்கு அனுப்பியது.
1970 – அமெரிக்காவில் தொலைக்காட்சி, வானொலிகளில் 1971 சனவரி 1 முதல் புகைத்தலுக்கான விளம்பரங்களைத் தடை செய்யும் சட்டத்தை அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் அறிவித்தார்.
1971 – வங்காளதேச விடுதலைப் போர்: வங்காளதேசத்தில் பாக்கித்தான் இராணுவம் 1,000 பொதுமக்களைப் படுகொலை செய்தது.
1973 – புலிகள் பாதுகாப்புத் திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.
1976 – ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக், ரொனால்டு வைன் ஆகியோரால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
1979 – ஈரான் 99% மக்களின் ஆதரவான வாக்களிப்பின் மூலம் ஓர் இசுலாமியக் குடியரசாகியது. ஷாவில் அரசு முடிவுக்கு வந்தது.
1981 – சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1997 – ஏல்-பாப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது.
1999 – நூனவுட் கனடாவின் பிராந்தியமானது.
2001 – போர்க்குற்றங்களுக்காகத் தேடப்பட்டுவந்த யூகொசுலாவியாவின் முன்னாள் அரசுத்தலைவர் சுலோபதான் மிலோசெவிச் காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
2001 – நெதர்லாந்து ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.
2004 – கூகிள் நிறுவனம் ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியது.
2006 – ஈரான் மேற்கில் லோரிஸ் டான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 66 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1578 – வில்லியம் ஆர்வி, ஆங்கிலேய மருத்துவர் (இ. 1657)
1621 – குரு தேக் பகதூர், சீக்கிய குரு (இ. 1675)
1815 – ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க், செருமானியப் பேரரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 1898)
1861 – டி. என். சிவஞானம், தமிழக அரசியல்வாதி (இ. 1936)
1878 – சி. கணேசையர், இலங்கைத் தமிழறிஞர் (இ. 1958)
1889 – கேசவ பலிராம் ஹெட்கேவர், இந்திய மருத்துவர், செயற்பாட்டாளர் (இ. 1940)
1907 – சிவக்குமார சுவாமி, இந்திய, கருநாடக வீரசைவ ஆன்மிகத் தலைவர் (இ. 2019)
1908 – ஆபிரகாம் மாசுலோ, அமெரிக்க உளவியலாளர் (இ. 1970)
1912 – ஜோசப் பாறேக்காட்டில், இந்திய கத்தோலிக்க கர்தினால் (இ. 1987)
1917 – திருலோக சீதாராம், தமிழகக் கவிஞர், பத்திரிகையாளர், கட்டுரையாளர் (இ. 1973)
1920 – டோஷிரோ மிபூன், சப்பானிய இயக்குநர், நடிகர் (இ. 1997)
1929 – டி. கே. கோவிந்த ராவ், கருநாடக இசைக் கலைஞர் (இ. 2011)
1936 – தருண் குமார் கோகய், அசாமின் 14வது முதலமைச்சர்
1936 – பொன். பூலோகசிங்கம், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர், வரலாற்றாளர் (இ. 2019)
1940 – வாங்கரி மாத்தாய், நோபல் பரிசு பெற்ற கென்னிய அரசியல்வாதி (இ. 2011)
1941 – அஜித் வாடேகர், இந்தியத் துடுப்பாளர் (இ. 2018)
1997 – ஆசா பட்டர்பீல்ட், ஆங்கிலேய நடிகர்

இறப்புகள்

670 – அல் ஹசன், இரண்டாவது சியா இமாம் (பி. 624)
1611 – அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா, போர்த்துக்கேய இந்தியாவின் படைத்தளபதி, ஆளுநர் (பி. 1558)
1976 – மக்ஸ் ஏர்ண்ஸ்ட், செருமானிய ஓவியர், சிற்பி (பி. 1891)
2002 – கே. வீ. நாராயணசுவாமி, தென்னிந்திய கருநாடக வாய்ப்பாட்டு கலைஞர் (பி. 1923)
2007 – தி. வே. கோபாலையர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1926)
2007 – லாரி பேக்கர், பிரித்தானிய-இந்தியக் கட்டடக் கலைஞர் (பி. 1917)
2018 – சி. வி. ராஜேந்திரன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்

சிறப்பு நாள்

ஏப்ரல் முட்டாள்கள் நாள்
மர நாள் (தன்சானியா)
தேசிய நாள் (சைப்பிரசு)
ஒடிசா நாள் (ஒடிசா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!