‘ஹிட்லிஸ்ட்’டின் ஹீரோ இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே. செல்லுலாய்ட்ஸ், ஏற்கனவே தெனாலி மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்களைத் தயாரித்திருந்த நிலையில் தற்போது ‘ஹிட்லிஸ்ட்’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறது. பிரபல இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் படமாக…

பாரம்பரிய சினிமா உலகம் ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியம் திறக்கப்பட்டது

கடந்த 77 வருடங்களில் 178 படங்கள் வரை தயாரித்துள்ள ஏவி.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது. இந்தியாவிலேயே மிகப் பழமை வாய்ந்த நிறுவனமாக இருந்தாலும் ஏவி.எம். குடும்பம் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைக் கட்டமைத்துக் கொண்டு தனது பெருமையையும்…

விஜய் சேதுபதி வசனத்தில் ‘குலசாமி’ வெளியீட்டுக்குத் தயார்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள  ‘குலசாமி’ திரைப்படத்தில் விமல், தான்யா ஹோப் நடிக்கிறார்கள். MIK Productions Private Limited தயாரிப்பில், ‘பில்லா பாண்டி’ படத்தை இயக்கிய குட்டிப்புலி சரவணசக்தி இயக்குகிறார். இயக்குநர் சரவண சக்தி பேசும்போது, “குலசாமிக்கு சிறப்பாகவசனம் எழுதிய…

விஜய் படத்தை இயக்க விரும்பும் விசால்

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மார்க் ஆண்டனி’. இந்தப் படத்தின் டீஸர்  இன்று (27.4.2023) மாலை 6:30 மணிக்கு வெளியாகியது. இதைத் தொடர்ந்து ‘தளபதி’ விஜய்யை சந்தித்து ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீஸரை காண்பிக்க படக்குழுவினர் அனுமதி கேட்டு தொடர்பு…

விஜய் சேதுபதி வசனத்தில் “குலசாமி” ஏப்ரல் 21 ரிலீஸ்

MIK Productions Private Limited தயாரிப்பில், விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம்  ‘குலசாமி’.  ஏப்ரல் 21 ஆம் தேதி…

பேசாத படத்தைத் திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு

தமிழ் சினிமா என்ற விதையை இம்மண்ணில் முதலில் விதைத்தவர் என்ற வரலாற்றுப் பெருமைக்குச் சொந்தக்காரரானார் சாமிகண்ணு வின்சென்ட் பிறந்த நாள் இன்று. 1905ஆம் ஆண்டு டுபாண்ட் என்ற ஒரு பிரஞ்சுக்காரரின் சினிமா டென்ட் (நகரும் சினிமா கொட்டகை) திருச்சிக்கு விஜயம் செய்தது. இலங்கையிலிருந்து…

ரூ. 3000 கோடி வருவாயை ஈட்டி, தமிழ் சினிமா சாதனை

“தமிழ் சினிமா துறை 2022ம் ஆண்டில் ரூபாய் 3,000 கோடி வரை வருவாயை ஈட்டி உள்ளது. மொத்தத்தில் தென்மாநில சினிமா துறை 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி உள்ளது” என இந்தியத் தொழில் கூட்டமைப்பின் ‘தக்சின்’ குழு நிர்வாகிகள்…

‘வாத்தி’  8 நாட்களில் 75 கோடி வசூல் || மகிழ்ச்சியில் படக்குழு

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியாகும் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்போது அங்கேயும் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அவருக்கென அங்கே தனியாக ரசிகர் வட்டமே உருவாகியுள்ளது. இந்த நிலையில்  முதன்முறையாக ‘சார்’ என்கிற படம் மூலம் நேரடியாக தெலுங்கில் அடியெடுத்து வைத்துள்ளார் தனுஷ்.  தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, பாரதிராஜா, சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர்.  ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.  தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே  மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பல இடங்களில் தற்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது வாத்தி. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்குப்  பக்கபலமாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் உள்ளிட்ட வாத்தி படக்குழுவினர் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்து  நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.  இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி, உதவி திரைக்கதை ஆசிரியர் சதீஷ், ஒளிப்பதிவாளர் யுவராஜ், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நகைச்சுவை நடிகர் சாரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் சாரா பேசும்போது, “இயக்குனர் வெங்கி அட்லூரியுடன்  இணைந்து நிறைய படங்கள் பண்ண வேண்டும். அதனால் என்னைக் கழட்டி விட்டுடாதீங்க என இயக்குனரை கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் என் பையனை நான் படிக்கச் சொன்னால் படிக்க மாட்டான். ஆனால்  வாத்தி  படத்தில் தனுஷ் மாணவர்களைப் படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்துவதைப் பார்த்துவிட்டு தனுஷ் அங்கிள் சொல்வதால் படிக்கிறேன் என்று கூறுகிறான். அந்த அளவிற்கு வாத்தி படம் அனைவரையும் சென்று சேர்ந்துள்ளது” என்று கூறினார். ஒளிப்பதிவாளர் யுவராஜ் பேசும்போது, வாத்தி படம் வெளியானதில் இருந்து எந்த ஊருக்குச் சென்றாலும் திருவிழா மாதிரி இருக்கிறது. இப்போதும் பல தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் என்னுடைய குருநாதர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். இயக்குனர் வெங்கி அட்லூரி பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை  நம்பி படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் வம்சி மற்றும் எனக்கு மிகப்பெரிய ஆதரவு தந்த தனுஷ் இருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது வரை 8 நாட்களில் 75 கோடி நிகர தொகையாக வாத்தி வசூலித்துள்ளது. பத்திரிகை விமர்சனங்கள் மற்றும் படம் பார்த்தவர்களின் வாய்மொழி பாராட்டுகள் என  பாசிட்டிவான விளம்பரம் கிடைத்துள்ளது.…

‘வாத்தி’ படத்தைப் பற்றி பாரதிராஜா விமர்சனம்

நடிகர் தனுஷ் முதன்முறையாக தெலுங்கில் அடியெடுத்து வைத்து நடித்துள்ள படம், தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழல் ‘வாத்தி’ என்றும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகலபரணி,…

தனுஷுடன் நடிக்க டென்ஷனாக இருந்தது

தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படமாக உருவாகியுள்ளது ‘வாத்தி’. தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் & பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில்  நாகவம்சி S – சாய் சௌஜன்யா தயாரித்துள்ளார்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!