மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் இன்று தொடக்கம்..!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை L&T நிறுவனம் வாஸ்து பூஜையுடன் இன்று (மார்ச்.05) தொடங்கியது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சுற்று சுவர்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டு இருந்த நிலையில் எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளபடாமல் இருந்தது. […]Read More