1 min read

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வழிபாடு வைரல் புகைப்படங்கள்..!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்த நிலையில்,  அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்துள்ளார்.  லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி,  சென்னை,  மும்பை,  திருநெல்வேலி,  பாண்டிச்சேரி எனப் பல்வேறு பகுதிகளில் நடந்தது. கடைசியாக பாண்டிச்சேரியில் ஒரு […]

1 min read

முருகு தமிழ் | வைகாசி விசாகம் | சிறப்புரை | கவிஞர் ச.பொன்மணி | vaikasi visagam speech |

முருகு தமிழ் | வைகாசி விசாகம் | சிறப்புரை | கவிஞர் ச.பொன்மணி | vaikasi visagam speech | விசாகத் திருநாள் வாழ்த்துகள் செந்தூர் முருகனைச்சேவித்தே வாழ்வோர்க்குக்கந்தன் கருணையேகாவலாம் – எந்நாளும்சேந்தன் குமரனின்சேவடிகள் நம்வினையைஏந்தி விரட்டும்எழுந்து. வாழ்க வளமுடன்வளங்கள் நிறைவுடன்குகனருள் கூடட்டும் சிறப்புரை. கவிஞர் ச.பொன்மணி வீடியோ. உமாகாந்த்.

1 min read

வைகாசி விசாகம் 2024

வைகாசி விசாகம் 2024 எப்போது, அன்றைய தினம் முருகனை எப்படி வழிபட வேண்டும் என தெரிந்து கொள்ளலாம் வைகாசி விசாகம் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் 2024: 2024 ஆம் ஆண்டு, வைகாசி மாதத்தில் (தமிழ் நாட்காட்டியின்படி) அதாவது மே 22ம் தேதி புதன்கிழமை வருகிறது. மே 22ம் காலை 08.18 மணிக்கு துவங்கி, மே 23ம் தேதி காலை 09.43 […]

1 min read

திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா..!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று நடைபெற உள்ள வைகாசி விசாகத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான வைகாசி விசாக திருவிழா இன்று (மே 22) வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. முருகப்பெருமான் பிறந்த நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தையொட்டி வைகாசி மாதம் வரக்கூடிய விசாக நட்சத்திரத்தன்று இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை […]

1 min read

‛நெல்லை டூ அயோத்தி ராமர் கோவில்’ சுற்றுலா ரயில் அறிமுகம்..!

திருநெல்வேலியில் இருந்து திருச்சி வழியாக புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி வரை சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 9 நாள் பயணத்துக்கான இந்த சுற்றுலா ரயில் அடுத்த மாதம் 6ம் தேதி பயணத்தை தொடங்குகிறது. இந்தியாவில் பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வர வசதியாக சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பிரத்யேகமாக பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் நெல்லையில் இருந்து […]

1 min read

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சித்திரை தேர்திருவிழா..!

பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 வைணவ திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மூன்று தேர் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த திருகோயிலில் சித்திரை மாதத்தில் நடைபெறும் விருப்பன் திருநாள் எனும் சித்திரைத் தேரோட்டம், தை மாதத்தில் நடைபெறும் பூபதி திருநாள் எனும் தைத் தேரோட்டம், பங்குனி மாதத்தில் நடைபெறும் ஆதிபிர்மா திருநாள் எனும் கோரதம் ஆகிய […]

1 min read

திருவொற்றியூர் வடிவுடையம்மன் அம்மன் கோயில் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் உள்ள வட்டப்பாறை அம்மன் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் வட்டப்பாறை அம்மன் மிக முக்கியமான ஒரு அம்மனாக திகழ்கிறார். சோழர் காலத்தில் கோயில் விரிவாக்கப்பட்டபோது வடக்கு நோக்கி வதம் செய்வது போன்று அம்மன் சிலை அமைக்கப்பட்டு யானை வடிவில் விமானம் அமைக்கப்பட்டு இருப்பது மிக விசேஷமாக பார்க்கப்படுகிறது. இந்த கோயிலில் வட்டப்பாறை அம்மனின் உற்சவம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக […]

1 min read

சித்ரா பௌர்ணமி : திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று சித்ரா பவுர்ணமி என்பதால் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.  அங்கு 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு  தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.  அந்த வகையில்,  சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று தமிழ்நாடு,  ஆந்திரா,  கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் குவிந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் […]

1 min read

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்..! 

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக சித்ரா பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் தங்கக் குதிரையில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார். மதுரை சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோயில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கடந்த 8-ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது. மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 19-ம் தேதி பட்டாபிஷேகமும், 20-ம் தேதி திக்கு விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் […]

1 min read

வெள்ளியங்கிரிக்குச் செல்லும் பக்தர்கள் முழு உடல் பரிசோதனை கட்டாயம்: வனத்துறை புதிய அறிவுறுத்தல்..!

வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைப்பகுதிக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  அவர்கள் அங்குள்ள சிவன் கோயிலில் வழிபாடு செய்வது வழக்கம்.  அங்கு செல்ல பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.  […]